Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.7 Punarchi Vidigal Book Back Solution

இயல் 2.7 – புணர்ச்சி விதிகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 2.7 ‘Punarchi Vidigal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 2.7 புணர்ச்சி விதிகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 2.7 Punarchi Vidigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

புணர்ச்சி விதிகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Punarchi Vidigal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: யானை டாக்டர்

வினாக்கள்

1. புணர்ச்சி என்றால் என்ன? சான்று தருக.

நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும்

சான்று :

  • வாழை + மரம் = வாழைமரம் (இயல்பு புணர்ச்சி)
  • வாழை + பழம் = வாழைப்பழம் (தோன்றல் – விகாரப்புணர்ச்சி)
  • பால் + குடம் = பாற்குடம் (திரிதல் – விகாரப்புணர்ச்சி)
  • மரம் + வேர் = மரவேர் (கெடுதல் – விகாரப்புணர்ச்சி)

2. புணர்ச்சி விதிகளை கூறு

சொற்களில் புணர்ச்சியின்போது, நிலைமொழி இறுதியில், வருமொழி முதலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் எனக்கூறுவர்.

3. புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை?

  • தமிழ் மொழியைப் பிழையின்றி கையாள உதவுகிறது.
  • பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறிய உதவுகிறது.
  • மொழியின் அமைப்பை புரிந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது.

4. உடம்படு மெய்யெழுத்துக்கள் யாவை?

  • ய், வ்

5. உடம்படு மெய்யெழுத்துக்கள் எங்கு தோன்றுகிறது? ஏன்?

நிலைமொழி ஈற்று உயிரோடு, வருமொழி முதல் உயிர் (உயிர் + உயிர்) புணரும்போது, அவை பொருந்தா, அவற்றை பொருந்தச் செய்ய இடையில் ய், வ் என்னும் மெய்களுள் ஒன்று தோன்றும் அதுவே உடம்படுமெய் எனப்படும்

சான்று

  • கலை + அழகு = கலை + ய் + அழகு = கலையழகு (யகர உடம்படுமெய்)
  • பூ + அழகு = பூ + வ் + அழகு = பூவழகு (வகர உடம்படுமெய்)

5. யகர (ய்) உடம்படு மெய் எங்கு தோன்றுகிறது? சான்று தருக?

நிலைமொழி ஈற்றில் “இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒன்று இருந்து, வருமொழி முதலில் வேறு உயிர் வரும்போது, இடையே யகர (ய்) உடம்படுமெய் தோன்றும்

சான்று

  • காட்சி + அழகு =  காட்சி + ய் + அழகு = காட்சியழகு

6. வகர (ய்) உடம்படு மெய் எங்கு தோன்றுகிறது? சான்று தருக?

உயிர் எழுத்துக்களுள் “இ, ஈ, ஐ அல்லாத பிற உயிர் எழுத்துகளுள் ஒன்றை இறுதியில் நிலைமொழியோடு, வருமொழி முதல் உயிர் சேரும்போது வகர (வ்) உடம்படுமெய் தோன்றும்

சான்று

  • மா + இலை =  மா + வ் + இலை = மாவிலை

7. ஏ முன் இவ்விருமையும் விளக்கி உதாரணம் தருக

நிலைமொழி ஈற்றில் “ஏ” என்னும் உயிர் நின்று வருமொழி உயிருடன் புணரும்போது, யகர உடம்படுமெய்யோ (ய்), வகர உடம்படுமெய்யோ (வ்) தோன்றும் என்பதாகும்

சான்று

  • சே + இழை =  சே + ய் + இழை = சேயிழை

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

மாசு + அற்றார் =  மாசற்றார்

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிர் (அ) வந்ததால், நிலைமொழி ஈற்று உகரம் (சு = ச் + உ) கெட்டு, மாசு + அற்றார் = மாச் + அற்றார் என்றானது.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்று மெய்யும் (ச்) வருமொழி முதல் உயிரும் (அ) புணர்ந்து (ச் + அ = ச) மாசற்றார் என்றானது.

2. கருவிழி, பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.

கருவிழி = கருமை + விழி

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு கருவிழி என்றாயிற்று.

பாசிலை = பசுமை + இலை

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “லை” விகுதி கெட்டு “பசு + இலை” என்றாயிற்று.
  • “ஆதீநீடல்” எனும் விதிப்படி “ப” என்னும் குறில் “பா” என நெடிலாகி “பாசு + இலை” என்றாயிற்று.
  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி “பாச் + இலை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “பாசிலை” என்றாயிற்று.

சிறியன் = சிறுமை + அன்

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு “சிறு + அன்” என்றாயிற்று.
  • “இடையுகரம் இய்யாதல்” எனும் விதிப்படி “று” என்னும் உகரம் “றி” என்ற இகரமாகி “சிறி + அன்” என்றாயிற்று.
  • “இஈஐ வழி யவ்வும்” எனும் விதிப்படி “சிறி + ய் + அன்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “சிறியன்” என்றாயிற்று.

பெருங்கல் = பெருமை + கல்

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு “பெரு + கல்” என்றாயிற்று.
  • “இனமிகல்” எனும் விதிப்படி “ங்” மிகுந்து “பெருங்கல்” என்றாயிற்று.

3. புணர்ச்சிவிதி தந்து விளக்குக :

புலனறிவு வில்லொடிந்தது வழியில்லை
திரைப்படம் ஞாயிற்றுச்செலவு

புலனறிவு = புலன் + அறிவு

  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “புலனறிவு” என்றாயிற்று.

வில்லொடிந்து = வில் + ஒடிந்து

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” எனும் விதிப்படி “வில்ல் + ஒடிந்து” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வில்லொடிந்து” என்றாயிற்று.

வழியில்லை =  வழி + இல்லை

  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” எனும் விதிப்படி “வழிய் + இல்லை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வழியில்லை” என்றாயிற்று.

திரைப்படம் = திரை + படம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” எனும் விதிப்படி “திரைப்படம்” என்றாயிற்று.

ஞாயிற்றுச்செலவு = ஞாயிறு + செலவு

  • “நெடிலோடு உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” எனும் விதிப்படி “ஞாயிற்று + செலவு” என்றாயிற்று.
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” எனும் விதிப்படி “ஞாயிற்றுச்செலவு” என்றாயிற்று.

4. விதி வேறுபாடறிந்து விளக்குக:

தன்னொற்றிரட்டல் – தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.

இனமிகல் – வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.

தன்னொற்றிரட்டல்

  • பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் தன்னொற்றிரட்டல் என்னும் விதியை பயன்படுத்த வேண்டும்
  • முதல் விதி ஈறுபோதல் வந்தால் மட்டுமே

சான்று

வெற்றிலை = வெறுமை + இலை

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” கெட்டு “வெறு + இலை” என்றாயிற்று.
  • “தன்னொற்றிரட்டல்” எனும் விதிப்படி  “வெற்று+ இலை” என்றாயிற்று.
  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி “வெற்ற்+ இலை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வெற்றிலை” என்றாயிற்று.

தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்ற வருமொழியின் முதல் உயிர்ரெழுத்து இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிப்பாகும்

சான்று

தன்னுயிர் = தன் + உயிர்

  • “தனிக்குறில் முன் உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “தன்ன் + உயிர்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி “தன்னுயிர்” என்றாயிற்று.

இனமிகல்

பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு, நிலைமொழியன் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின் “இனமிகல்” விதியின்படி புணரும்.

சான்று

கருங்கடல் = கருமை + கடல்

  • “ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” கெட்டு “கரு + கடல்” என்றாயிற்று.
  • “இனமிகல்” எனும் விதிப்படி “ங்” மிகுந்து “கருங்கடல்” என்றாயிற்று.

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்

  • மகரமெய் வல்லின எழுத்தாக புணரும்

தினத்தினம் = தினம் + தினம்

  • “நிலைமொழி ஈற்றில் மகர மெய்யும் வருமொழி முதலில் வல்லின மெய்யும் வந்திருப்பதால் வன்மைக்கு இனமாத் திரிபவும்” என்ற விதிப்படி “தினத்தினம்” என்றாயிற்று

5. பொருத்துக

அ) அடி அகரம் ஐ ஆதல் –  1. செங்கதிர்
ஆ) முன் நின்ற மெய் திரிதல் –  2. பெருங்கொடை
இ) ஆதிநீடல் –  3. பைங்கூழ்
ஈ) இனமிகல் –  4. காரிருள்

விடை : அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

6. கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க.

அ) நிலைமொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதியைப் பெறும்.

ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும்போது வகர உடம்படுமெய் பெறும்.

இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘ஈறுபோதல்’ என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்.

ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்.

  1. அ, ஆ, இ சரி, ஈ தவறு
  2. அ, இ, ஈ சரி, ஆ தவறு

விடை :  அ, இ, ஈ சரி, ஆ தவறு

மெய்ம்மயக்கம்

குறு வினா

ய், வ், ஞ், ட், ற், ந் மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

மெய்கள் வேற்றுநிலை மெய்மயக்கம் உடனிலை மெய்மயக்கம்
ய் செய்யாறு வாய்மை
வ் செவ்வாய் தெவ்யாது
ஞ் விஞ்ஞானம் மஞ்சள்
ட் கட்டம் காட்சி
ற் வெற்றி பயிற்சி
ந் செந்நெறி தந்த

சிறு வினா

தமிழ்நெடுஞ்கணக்கு வரிசையில் இனவெழுத்துகளின் பங்கைக் குறிக்க

சொற்களின் இடையில் மெல்லின எழுத்துகளுக்குப்பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவதை இனவெழுத்துக்கள் அல்லது நட்பெழுத்துக்கள் என்பர்

எ.கா :

  • ங் – க் (அங்கம்)
  • ஞ் – ச் (பஞ்சம்)
  • ண் – ட் (பண்டம்)
  • ந் – த் (சந்தம்)
  • ம் – ப் (கம்பம்)
  • ன் – ற் (தென்றல்)

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1930)

தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர் தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை, ஆகிய துறைகளில் பெரு விருப்பம் கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்ககளை பயின்றார். திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போதே சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் பண்டுவர் (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றிய பின் அதைவிடுத்து முழுமையாகச் சித்த மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார். மக்கள் அவரைப் பண்டிதர் என அழைக்கத் தொடங்கினார். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, சங்கீத வித்தியா மகாஜனசங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த் சாகரம் எழுபத்தோராண்டுகள் வாழ்ந்து தமிழக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

வினாக்களுக்கு விடையளிக்க

1. உடனிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

இயக்கத்தின், புகைப்படக் கலை, அச்சுக்கலை, சித்த மருத்துவம், பெருவிருப்பம், கிடைக்கும், திண்டுக்கல்லில், அழைக்கப்பட்டார், செலுத்தினார், மக்கள், வித்தியா, அமைப்பை, உருவாக்கி, நடத்தினார், இசைத்தமிழ், எழுபத்தோராண்டுகள், தமிழுக்கு

2. வேற்றுநிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

கருணாமிர்த, ஆழ்ந்து, சங்கீத, வாழ்ந்து

3. உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் எழுதி, மெய்களை அடிக்கோடிடுக.

உடனிலை மெய்ம்மயக்கம்

  • போற்றப்படும்
  • அருகேயுள்ள
  • ன்னும்
  • சிற்றூர்
  • ற்று
  • உரையாற்றினார்

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

  • ந்தை
  • ண்டிதர்
  • சாம்பவர்
  • பிறந்தவர்
  • நுட்பங்களை
  • பயின்றார்
  • ன்புடன்
  • ண்டுவர்
  • ண்டுகள்

4. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக

அ) சங்கீதம்

  • இசை

ஆ) வித்தியா

  • அறிவு

இ) மகாஜனம்

  • அதிகாரம் பெற்றவர்

ஈ) சாகரம்

  • கடல்

5. இலக்கணக்குறிப்பும், பகுபத உறுப்பிலக்கணம் தருக

இலக்கணக்குறிப்பு

அ) பயின்றார்

  • பயின்றார் – பலர்பால் வினைமுற்று

ஆ) தொடங்கினார்

  • தொடங்கினார் – பலர்பால் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

அ) பயின்றார் = பயில் + ற் +ஆர்

  • பயில் – பகுதி
  • ற் – ல்-ன் ஆனது விகாரம், இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

ஆ) தொடங்கினார் = தொடங்கு + இன் + அர்

  • தொடங்கு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

மொழிபெயர்க்க

1. Just living is not enough. One must have sunshine, freedom and a little flower – Hans Anderson.

விடை: பெயருக்கு வாழ்வது வாழ்க்கையல்ல, ஒவ்வொருவருடைய வாழ்க்கை ஒளிமயமானதாகவும், சுதந்திரமாகவும், மலர்களைப் போன்று மணமும் அழகும் உள்ளதாக அமைய வேண்டும். – ஹேன்ஸ் ஆண்டர்சன்

2. In nature, light creats the colour. In the picture, colour creates the light – Hans Hofmann

விடை: இயற்கை ஒளி வண்ணங்களை உருவாக்குகிறது. ஓவியம் வண்ணங்கள் ஒளியை உருவாக்குகிறது – ஹான்ஸ் ஹோஃப்மான்

3. Look deep into nature and then you will – understand everything better – Albert Einstein

விடை: இயற்கையை ஆழமாகப் பாருங்கள், அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம் – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

4. Simplicity is nature’s first step, and the last of art – Philip James Bailey.

விடை: எளிமை என்பது இயற்கையின் முதற்படி; அதுவே கலையின் இறுதிப்படி ஆகும் – பிலப் ஜேம்ஸ் பெய்லி

5. Roads were made for journeys not destination – Confucius.

விடை: பாதைகள் என்பது பயணங்களுக்கானது. இலக்குகளுக்கானது அல்ல – கன்ஃபூஷியஸ்

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. உலை, உளை, உழை

விடை: மன உளைச்சல் தீரவும், வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்.

2. வலி, வளி, வழி

வலி – நோய், வளி – காற்று, வழி – பாதை

விடை: வளி வேகமாக வீசியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முகிலன் வழி தெரியாமல் அலைந்தனால் அவனுக்கு கால் வலித்து.

3. கலை, களை, கழை

கலை – சாத்திரம், களை – முகவழகு, கழை – மூங்கில்

விடை: கழை மேல் நடக்கும் கலையில் சிறந்த பெண்ணின் முகம் களையாக இருந்தது.

4. கனை, கணை

கனை – குரல் ஒலி, கணை – அம்பு

விடை: போர்களத்தில் கணையால் அடிப்பபட்ட குதிரை கனைத்தது.

5. குரை, குறை

குரை – ஒலி, குறை – சிறிது, சுருங்குதல்

விடை: எங்கள் வீட்டிற்கருகில், இப்போதெல்லாம் நாய்கள் குரைக்கும் ஓசை குறைந்துவிட்டது.

6. பொரி, பொறி

பொரி – நெல் பொரி, பொறி – இயந்திரம்

விடை: கண்ணன் பொரியைத் தின்று கொண்டே பொறியில் இருந்த பழுதைச் சரிபார்த்தான்.

கீழ்காண் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க

இயற்கை உணவுத் திருவிழா

Samacheer Kalvi 11th Tamil Guide Punarchi Vidigal Book Back Solution - Iyarkai unavu Thiruvila

“உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!” என்ற திருமூலர் வாக்கினை மெய்பிக்கும் இயற்கை உணவுத் திருவிழா, சென்னையில் உள்ள தீவுத்திடலில் தை மாதம் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவானது மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இங்கு ஆவாரம்பூச்சாறு, குதிரைவாலிப் பொங்கல், வாழைப்பூவடை, திணைப் பணியாரம், வல்லாரை அப்பளம், முடக்கத்தான் தோசை, தூதுவளைச்சாறு, சாமைப் பாயாசம், கேழ்வரகு உப்புமா, கம்புப் புட்டு, அகத்தி பூ போண்டா, முள் முருங்கை அடை ஆகியவையும் இவை போன்ற இன்னும் பல உணவு வகைகளும் இங்குக் கிடைக்கும்.

மொழியோடு விளையாடு

நயம்பாராட்டுக

மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!

வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!

கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயாே? வெண்ணிலாவே!

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே!  நீயும்
பாரில் வர அஞ்சினையாே? வெண்ணிலாவே!

– கவிமணி

மோனைத்தொடை

  • வளர்ந்து – வாடி
  • கூகை – கூட்டினில்
  • பந்தடிப்போம் – பாரில்

மோனைத்தொடை

  • வெள்ளி – வர்ந்து
  • வாடி – கூட்டினில்

இயைபுத்தொடை

  • வெண்ணிலவே

அணி நயம்

  • உவமையணி பயின்று வந்துள்ளது. “போல” உவமஉருபு வெளிப்படையாக அமைந்து வந்துள்ளதால் இது உவமை அணி ஆயிற்று.

கற்பனை நயம்

  • நிலவு வளர்வது தேய்வது பற்றி கூற வந்த கவிஞர், வளர்ந்து வளர்ந்து வந்த பிறகு வாடி வாடிப் பேனாதாக் குறிப்பிடுகிறார். நிலவு பகலில் தெரியாது. இதனை கூட்டில் உறங்குவதாகக் கூறுகிறார். இவ்வாறு கற்பனை ததும்பத் பாடியுள்ளார்.

அணி நயம்

  • இனிய சந்த நயத்துடன் பொருந்தி, வேறுபட்ட பல் சீர்கள் அமைந்து இசையமைத்துப் பாடுவதற்கேற்ப இப்பாடல் திகழ்கின்றது.

புதிர்களில் மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க

1. ஐந்தெழுத்துக்காரன்
முதலிரண்டோ பாட்டெழுதுபவரின் பட்டம் (கவி)
இரண்டும் மூன்றுமோ பசுப்பால் என்பதன் பின் இறுதி (ஆவின்)
கடைசி இரண்டெழுத்தோ மானினத்தின் ஒருவகையாம் (கலை)
இரண்டம் ஐந்துமோ பொருளை விற்கத் தேவையாம் (விலை)
அது என்ன?

விடை : கவின்கலை

2. இறுதி இரண்டெழுத்தோ
பழத்தின் முந்தைய பச்சை நிலை (காய்)
தமிழ்க்கடவுளின் முற்பதியை முதிலிரு எழுத்தில் வைத்திருக்கும் (முரு)
நடுவிலோ ஓரெழுத்து ஒருமொழி (கை)
அதற்கும் முன் பொட்டு வைத்த ஙகரம் (ங்)
சேர்த்தால் காயாவன் (காய்)
பிரித்தால் நிலைமொழியில மரமாவன் (முருங்கை)
ஏழெழுத்துக்காரன் அவன் யார்?

விடை : முருங்கைக்காய்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு குறித்த முழுக்கத்த தொடர்கள் எழுதிக் காட்சிப்படுத்துக

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

  • நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிர்ப்போம்!
  • காற்று மாசுபடுவதை தடுப்போம்!
  • நீரையும் காற்றையும் தூய்மையாக்குவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!

இயற்கைப் பாதுகாப்பு

  • மரங்கள் வெட்டுவதை தவிர்ப்போம்!
  • காடுகள் மற்றும் நீர் நிலையங்களை காப்போம்!
  • இயற்கை வளங்களை காப்போம்!

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

  • இயற்கை வேளாண்மை – Organic Farming
  • மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
  • வேதி உரங்கள் – Chemical Fertilizers
  • வேர் முடிச்சுகள் – Root Nodes
  • ஒட்டு விதை – Shell Seeds
  • அறுவடை – Harvesting
  • தூக்கணாங்குருவி – Weaver Bird
  • தொழு உரம் – Farmyard Manure

அறிவை விரிவு செய்

  • இயற்கை வேளாண்மை – கோ. நம்மாழ்வார்.
  • பனைமரமே பனைமரமே – ஆ. சிவசுப்பிரமணியன்.
  • யானைகள்-அழியும் பேருயிர் – ச. முகமது அலி
  • க. யோகானந்த். பறவை உலகம் – சலீம் அலி
  • Elephants: Majestic Creatures of the Wild – Shoshani. J.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புணர்ச்சி விதிகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. சொல்லின் இடையில் மெய்யெழுத்துக்கள் அடுத்தடுத்து வருவது ___________

  1. உயிர்மயக்கம்
  2. மெய்மயக்கம்
  3. புணர்ச்சி
  4. உடம்படுமெய்

விடை: மெய்மயக்கம்

2. மெய்மயக்கம் ___________ வகைப்படும்

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை: 2

2. மெய்மயக்கம் ___________ வகைப்படும்

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை: 2

3. சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது

  1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
  2. உடனிலை மெய்ம்மயக்கம்
  3. ஈரொற்று மெய்ம்மயக்கம்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை: வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

குறுவினா

1. மெய்மயக்கம் என்பது என்ன?

சொல்லின் இடையில் மெய்யெழுத்துக்கள் அடுத்து அடுத்துவருவது மெய்மயக்கம் எனப்படும்.

2. மெய்மயக்கம் எத்தனை வகைப்படும்

உடனிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் என இருவகைப்படும்.

2. உடனிலை மெய்மயக்கம் என்பது என்ன? சான்று தருக

சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

எ.கா : அச்சம், எச்சம், மொத்தம், சாத்தன், அப்பம், கப்பம்

Leave a Comment