[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.4 Noolagam Nokki Book Back Solution

இயல் 1.4 – நூலகம் நோக்கி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.4, ‘Noolagam Nokki’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 2 Lesson 1.4 நூலகம் நோக்கி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 1.4 நூலகம் நோக்கி Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

நூலகம் நோக்கி வினா விடை

On this page, you will find the question answers for the Lesson ‘Noolagam Nokki’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Noolagam Nokki subject.

Previous Lesson: கல்விக்கண் திறந்தவர்

1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

முன்னுரை

ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

தரைத்தளம்

தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.

முதல் தளம்

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

பிற தளங்கள்

  • இரண்டாம் தளம் – தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் – கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் – பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் – கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் – கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு

முடிவுரை

நூலக நூல்களை வாசிப்பதோடு நிற்காமல், இந்நூல்களை சுவாசிக்கும் அறிஞர்களாக மாற வேண்டும்.

“நூலகம் அறிஞர்களின் ஆன்மாக்கள் உறைவிடம்”

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நூலகம் நோக்கி கட்டுரை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள இடம் _____________ 

  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. கேரளா
  4. மகாராஷ்டிரா

விடை: தமிழ்நாடு

2. ஆசியாவின் முதல் பெரிய நூலகம் உள்ள இடம் _____________ 

  1. பாகிஸ்தான்
  2. மியான்மர்
  3. நேபாளம்
  4. சீனா

விடை: சீனா

3. இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) _____________ 

  1. மீனாட்சி சுந்தரனார்
  2. உ.வே.சா.
  3. மறைமலையடிகள்
  4. இரா. அரங்கநாதன்

விடை: இரா. அரங்கநாதன்

4. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது

  1. மீனாட்சி சுந்தரனார்
  2. இரா. அரங்கநாதன்
  3. உ.வே.சா.
  4. மறைமலையடிகள்

விடை: இரா. அரங்கநாதன்

4. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது

  1. மீனாட்சி சுந்தரனார்
  2. இரா. அரங்கநாதன்
  3. உ.வே.சா.
  4. மறைமலையடிகள்

விடை: இரா. அரங்கநாதன்

குறுவினா

1. நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரைக் கூறுக

அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்

2. எதற்காக தமிழக அரசு நடமாடும் நூலக திட்டத்தினை அறிமுகப்படுத்தியது?

தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக நடமாடும் நூலக திட்டத்தினை அறிமுகப்படுத்தியது

3. நூலகத்திற்கான விதிகளை ஏற்படுத்தி தந்தவர் யார்?

முனைவர் இரா. அரங்கநாதன் ஆவார்.

6th Tamil Text Books Pdf

Leave a Comment