இயல் 2.5 – முதலெழுத்தும் சார்பெழுத்தும்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.5 ‘Muthal Eluthukalum Sarbu Eluthukalum’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்
முதலெழுத்தும் சார்பெழுத்தும் வினா விடைகள் 2024
On this page, you will find the question answers for the Lesson ‘ Muthal Eluthukalum Sarbu Eluthukalum’, the first subject of class 6 Tamil. You can also access additional questions related to lesson 2.5 “Muthal Eluthukalum Sarbu Eluthukalum”.
சிறுவினா
1. முதல் எழுத்துக்கள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
2. சார்பெழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவைகள்.,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தன க்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது
சிந்தனை வினா
1. உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக
உயிர்மெய் எழுத்துகள்
- மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின.
- முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்த எழுத்து
- தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.
- முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்
மொழியை ஆள்வோம்!
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம் . பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு. இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்
2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
- பனிபடர்ந்த நீலமலைகள்
- பாடித்திரியும் பறவைகள்
- தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்
- சலசலக்கும் ஓடைகள்
- ஆர்ப்பரித்து வீழும் அருவிகள்
- நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல்
- கண்சிமிட்டும் விண்மீன்கள்
- தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா
இவையெல்லாம் இயற்கையை வருணிக்கும் சொற்கள்.
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
- நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்.
- மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.
- புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
“இயற்கையின் கொடைகள்”
மொழியோடு விளையாடு
திரட்டுக
“கடல்” என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
நேமி, வேலம்,ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, வேலம், ஆர்கலி, உததி, அத்தி, திரை, நரலை, சமுத்திரம்
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
(எ. கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
விடை : கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
விடை : இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______________ என்று பெயர். (பறவை / பரவை)
விடை : பரவை
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ________________ ஆற்றினார். (உரை / உறை)
விடை : உரை
3. முத்து தம் _______________ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
விடை : பணி
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை __________________ (அலைத்தாள் /அழைத்தாள்).
விடை : அழைத்தாள்
பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.
1. புள் என்பதன் வேறு பெயர்
ப | ற | வை |
2. பறவைகள் இடம்பெயர்தல்
வ | ல | சை | போ | த | ல் |
3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்
பு | க | லி | ட | ம் |
வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
விடை: சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
விடை: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
விடை: சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை
விடை: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.
மு | த் | த | மி | ழ் | கா |
ப் | பை | னி | மே | ம | ணி |
ப | ல் | நி | ல | வு | நி |
து | ட | லை | ர் | ப | ல |
லை | க | மே | ணி | ம | ம் |
செ | ங் | கா | ல் | நா | ரை |
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ______________
விடை: மணிமேகலை
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ______________
விடை : முப்பது
3. திங்கள் என்பதன் பொருள் ______________
விடை : நிலவு
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை ______________
விடை: செங்கல் நாரை
5. பாரதியார் ______________ வேண்டும் என்று பாடுகிறார்.
விடை: காணி நிலம்
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் ______________
விடை: தனிநிலை
கவிதை படைக்க
கீழே காணப்படும் மழை பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
என்றும் இளமை சிந்திடும்
எல்லா மணமும் நிறைந்திடும்
எங்கும் வளமை பொழிந்திடும்
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்
- கண்டம் - Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையை தேர்ந்தெடு
1. _______________களைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்
- மெய் எழுத்து
- ஆய்த எழுத்து
- முதல் எழுத்து
- உயிர் எழுத்து
விடை : முதல் எழுத்து
2. __________________ பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன
- மெய் எழுத்துகள்
- ஆய்த எழுத்துகள்
- உயிர் எழுத்துகள்
- முதல் எழுத்துகள்
விடை : முதல் எழுத்துகள்
3. ஆய்த எழுத்து _____________________ இயங்காது.
- சேர்ந்து
- தனித்து
- வன்மையாக
- மென்மையாக
விடை : தனித்து
4. உயிர் எழுத்துகள் _____________________
- 10
- 14
- 12
- 16
விடை : 12
5. குற்றியலிகரம் என்பதை பிரித்தெழுதக் கிடைப்பது
- குறுமை + இயல் + உகரம்
- குறுமையில் + உகரம்
- குறுமை + யியல் + உகரம்
- குற்றியல் + உகரம்
விடை : குறுமை + இயல் + உகரம்
6. முப்புள்ளி என்பதை பிரித்தெழுதக் கிடைப்பது
- முப் + புள்ளி
- மூப் + புள்ளி
- முன்று + புள்ளி
- மூன்று + புள்ளி
விடை : மூன்று + புள்ளி
சிறுவினா
1. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரு வகைப்படும்
2. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை ஆகியன ஆய்த எழுத்தின் வேறு பெயர்களாகும்