இயல் 3.1 – நானிலம் படைத்தவன்
நானிலம் படைத்தவன்: Welcome! We offer precise and detailed Solutions for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.1 Nannilam Padaithavan. Our solutions cover all the questions in the textbook and are designed according to the standards set by the TNSCERT board.
நானிலம் படைத்தவன் வினா விடைகள்
Bellow section you can find the Book Back Solution for the lesson ‘Nannilam Padaithavan’. you can also access additional questions related to the topic Nannilam Padaithavan.
நானிலம் படைத்தவன் பாடல்
கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற், பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – முடியரசன் |
பாடலின் பொருள்
தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.
பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.
ஆசிரியர் குறிப்பு
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
சொல்லும் பொருளும்
- மல்லெடுத்த – வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. நானிலம் என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- நா+னிலம்
- நான்கு+நிலம்
- நா+நிலம்
- நான்+நிலம்
விடை : நான்கு+நிலம்
4. நாடு+ என்ற என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. கலம்+ ஏறி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மாநிலம்
விடை : தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
2. கடல்
விடை : உலகில் பெருங்கடல்கள் ஏழு
3. பண்டங்கள்
விடை : இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
நயம் அறிக
1. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – மல்லெடுத்த
- ஊராக்கி – பேராக்கி
- பெருமை – மருதம்
- முக்குளித்தான் – எக்களிப்பு
- பண்டங்கள் – கண்டங்கள்
- அஞ்சாமை – அஞ்சுவதை
2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – கலமேறி
- மல்லெடுத்து – மறத்தால்
- நானிலத்தை – நாகரிக
- பண்டங்கள் – பயன்நல்கும்
- முக்குளித்தான் – முத்தெடுத்து
குறு வினா
1. நான்கு நிலங்கள் யாவை?
நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.
2. தமிழன் எதற்கு அஞ்சினான்?
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்
குறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்.
- தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்.
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.
2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான்.
- ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்
- பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.
- முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
காடுகளில் வாழ்ந்த மனிதன் ஒரே இடத்தில் நிலையாக தங்கி வாழவில்லை. காடுகளில் வாழ்ந்தான். மரக்கிளைகளிலும், மரப் பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான். குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால் இலைகள், தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்கள் ஆகியவற்றை உடையாக பயன்படுத்தினான்.
அக்காலத்தின் முக்கிய மாற்றம் உணவு ஆகும். அக்காலத்தில் தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான். மேலும் சக்கரத்தை பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்தான்.
உலோகத்தை கண்டுபிடித்தான். செம்பினால் கருவிகள் செய்தான். பயிரிடல் மூலமாக நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தான். தனக்காக வீடுகள் கட்டிக் கொள்ள ஆரம்பித்தான். இதன் விளைவாக ஊர்கள் தோன்றின. ஊர் அமைப்பிலிருந்து நகர அமைப்பாக அவனது வாழிடம் தோற்றம் பெற்றன. குளம், தானியக் களஞ்சியம், சாக்கடை வசதி என்று பெரும் மாற்றம் கண்டது. காட்டு வாழ்வு கிராம வாழ்வாகவும், ஊர் வாழ்வாகவும், நகர வாழ்வாகவும் விரிவானது. நகர வாழ்வைத் தொட்ட மனிதன் நாகரிக வாழ்வு வாழ ஆரம்பித்தான்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “நானிலம் படைத்தவன்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. போர் என்ற சொல்லின் பொருள் ____________
- தமர்
- வெற்றி
- தோல்வி
- சமர்
விடை : சமர்
2. கழனி என்பதன் வேறு பெயர் ____________
- வீடு
- மரம்
- வயல்
- கடல்
விடை : வயல்
3. முடியரசன் எழுதிய நூல்
- வீரகாவியம்
- வீரசோழியம்
- மனோன்மனியம்
- திருநங்கை
விடை : வீரகாவியம்
4. அரிச்சுவடி என்பதன் பொருள்
- அகரவரிசை எழுத்துகள்
- மகரவரிசை எழுத்துகள்
- தகரவரிசை எழுத்துகள்
- நகரவரிசை எழுத்துகள்
விடை : அகரவரிசை எழுத்துகள்
5. கடல் என பொருள் தரும் சொற்களில் பொருந்தது
- பரவை
- ஆழி
- காடு
- அலை
விடை : காடு
குறு வினா
முடியரசன் – குறிப்பு வரைக
- முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
- திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப் பெற்றவர்.