இயல் 2.1 – சிலப்பதிகாரம்
Greetings, students! We are pleased to offer our complete guide to Samacheer Kalvi 6th Tamil Chapter 2.1 Silapathikaram. Within this guide, you will find answers to all the questions found in the 6th Standard Tamil Book Term 1 Lesson 2.1 சிலப்பதிகாரம்.
We have provided solutions to one-mark to big-mark questions, as well as additional ones for competitive exam preparation. Additionally, you may download the 6th Tamil Chapter 2.1 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.
சிலப்பதிகாரம் வினா விடை
On this page, you will find the question and answers for Lesson Cilappatikaram, which is chapter 2.1 of class 6 Tamil. Moreover, you can also access extra questions related to the Silappatikaram topic.
சிலப்பதிகாரம் பாடல்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்ததார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் |
வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! காவிரி நாடன் சோழனின் ஆணைச் சக்கரம் போலவே இமயத்ததை வலம்வரும் கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!
வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! |
Previous Chapter: எழுத்துக்களின் வகை தொகை
சொல்லும் பொருளும்
- திங்கள் – நிலவு
- கொங்கு – மகரந்தம்
- அலர் – மலர்தல்
- திகிரி – ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
- மேரு – இமயமலை
- நாமநீர் – அச்சம் தரும் கடல்
- அளி – கருணை
நூல் வெளி
- சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
- இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
- இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- இதுவே தமிழின் முதல் காப்பியம்.
- இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கழுத்தில் சூடுவது ______________
- தார்
- கணையாழி
- தண்டை
- மேகலை
விடை : தார்
2. கதிரவனின் மற்றொரு பெயர் ______________
- புதன்
- ஞாயிறு
- சந்திரன்
- செவ்வாய்
விடை : ஞாயிறு
3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- வெண் + குடை
- வெண்மை + குடை
- வெம் +குடை
- வெம்மை + குடை
விடை : வெண்மை + குடை
4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- பொன் + கோட்டு
- பொற் + கோட்டு
- பொண் + கோட்டு
- பொற்கோ + இட்டு
விடை : பொன் + கோட்டு
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- கொங்குஅலர்
- கொங்அலர்
- கொங்கலர்
- கொங்குலர்
விடை : கொங்கலர்
6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- அவன்அளிபோல்
- அவனளிபோல்
- அவன்வளிபோல்
- அவனாளிபோல்
விடை : அவனளிபோல்
நயம் அறிக
மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
- போற்றுதும் – போன்று
- மேரு – மேல்
- திகரி – திரிதலான்
- அவன் – அளிபோல்
எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
- திங்களை – கொங்கு
- போற்றுத் – பொற்கோட்டு
- அலர்தார்ச் – உலகு
- மாமழை – நாம
குறுவினா
1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
சிலப்பதிகாரக் காவியம் வான்நிலா, கதிரவன்,வான்மழை போன்றவற்றை வாழ்த்தி தொடங்குகிறது
2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
மனிதன் இயங்குவது, வாழ்வதும் இயற்கையினால்தான் அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது, அதுவே உயிரினங்களுக்கு மணி முடி அதனால் தான் இயற்கையைப் போற்றுகிறோம்
சிந்தனை வினா
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
- பண்டைய மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தனர். இயற்கைப் புலன்களுக்கு ஏற்ப வாழும் இடங்களை அமைத்து, அவ்வவ்நிலத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்து வந்தனர்.
- ஐவகை நிலங்களை ஐவகைத் திணைகளைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்து அதற்கேற்ற உரிபப்பொருள்களையும் உடையவர்களாய் இருந்தனர்.
- தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகக் குறிப்பிடுகிறது. எல்லா உயிரினங்களும் மதிக்கப்டுவதைப் பல்வேறு இலக்கியங்களும் பேசுகின்றன.
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
- பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால், இயற்கையை நன்கு அறிந்திருந்தனர்.
- மனிதன் இயங்குவது வாழ்நாள் முழுவதும் இயற்கையில்தான், அவ்வியற்கை இல்லாமல் மனிதனால் இயங்க முடியாது.
- இயற்கையே உயிரினங்களுக்கு மணிமுடி. அதனால் தான் மனிதர்கள் இயற்கையைப் போற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் _________________
- சீத்தலைசாத்தனார்
- திருதக்கத்தேவர்
- நாகுத்தனார்
- இளங்கோவடிகள்
விடை : இளங்கோவடிகள்
2. இளங்கோவடிகள் _________________ சேர்ந்தவர்
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
விடை : சேர
3. _________________ என்பது சோழனைக் குறிக்கும்
- செழியன்
- சென்னி
- வளவன்
- கவரியர்
விடை : சென்னி
4. அளி என்பதன் பொருள் _________________
- மகரந்தம்
- கருணை
- நிலவு
- மலர்தல்
விடை : கருணை
5. மேரு என்பதன் பொருள் _________________
- குடகுமலை
- பொதிகைமலை
- இமயமலை
- சேர்வராறுமலை
விடை : இமயமலை
6. வானிலிருந்து பிரித்தெழுகக் கிடைப்பது
- வானில் + இருந்து
- வானி + லிருந்து
- வானில் + லிருந்து
- வானி + இருந்து
விடை : வானில் + இருந்து
7. மாமழை பிரித்தெழுகக் கிடைப்பது
- மாம் + மழை
- மாம + மழை
- மாம + ழை
- மா + மழை
விடை : மா + மழை
8. சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக?
- சிலம்பு + அதிகாரம்
- சிலப்பு + அதிகாரம்
- சிறப்பு + அதிகாரம்
- சில + அதி + காரம்
விடை : சிலம்பு + அதிகாரம்
சேர்த்து எழுதுக
- சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
- மேல்+நின்று = மேனின்று
- அம்+கண் = அங்கண்
பாெருத்துக
- குடை – ஞாயிறு
- சக்கரம் – மழை
- அருள் – திங்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ
குறுவினா
1. சிலப்பதிகாரம் போற்றப்படும் விதங்களை கூறுக
- தமிழின் முதல் காப்பியம்
- முத்தமிழ்க் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- நாடககாப்பியம்
- ஒற்றுமைக்காப்பியம்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.