Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 Thirukkural Book Back Solution

இயல் 2.6 – திருக்குறள்

திருக்குறள் வினா விடை: Greetings, students! We are pleased to present our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.6, which covers the topic of ‘Thirukkural’. In this guide, you will find solutions to all the 6th Standard Tamil Book Term 1 Lesson 2.6 questions, including one-mark and big-mark questions.

We have also included additional questions for those preparing for competitive exams. You can download the 6th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF for your convenience.

திருக்குறள் வினா விடை

This page has answers and extra questions about Lesson ‘Thirukkural’ in class 6 Tamil.

நூல் வெளி

  • திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
  • எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
  • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
  • “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
  • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
  • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _______________

  1. ஊக்கமின்மை
  2. அறிவுடைய மக்கட்பேறு
  3. வன்சொல்
  4. சிறிய செயல்

விடை : அறிவுடைய மக்கட்பேறு

2. ஒருவர்க்குச் சிறந்த அணி _______________

  1. மாலை
  2. காதணி
  3. இன்சொல்
  4. வன்சொல்

விடை : இன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

நயம் அறிக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

எதுகைச் சொற்கள்

  • செற்கரிய – செய்வார்
  • செற்கரிய – செய்கலா

மோனைச் சொற்கள்

  • செயற்கரிய – செய்வார்
  • செயற்கரிய – செய்கலா

பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர் . “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்ற

விடை:-

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

குறுவினாக்கள்

1. உயிருள்ள உடல் எது?

அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.

2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?

அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைகிறது

3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையை தேர்ந்தெடு

1. பெரியோர், சிறியோரை வேறுபடுத்தி காட்டுக

  • முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்
  • முடியாது என்பவர் சிறியவர்.

2. மிகச்சிறந்த அணிகலன்கள் என்பது யாது?

மிகச்சிறந்த அணிகலன்கள் என்பது பணிவும் இன்சொல்லுமே ஆகும்.

3. இன்னாச்சொல் பேசுவதை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?

இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.

4. திருக்குறளின் பிரிவுகளை எழுதுக

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • இன்பத்துப்பால்

5. திருக்குறளின் சிறப்பு பெயர்களை எழுதுக

  • உலகப் பொதுமறை
  • வாயுறை வாழ்த்து

6th Tamil Text Books Pdf

Leave a Comment