Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 Ani Ilakkanam Book Back Solution

இயல் 9.5 – அணி இலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 9.5 ‘Ani Ilakkanam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 9.5 அணி இலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 9.5 Ani Ilakkanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

அணி இலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ani Ilakkanam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Ani Ilakkanam Subject.

Previous Lesson: பால் மனம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறிதுமொழிதல் அணியில் _____________ மட்டும் இடம்பெறும்.

  1. உவமை
  2. உவமேயம்
  3. தொடை
  4. சந்தம்

விடை : உவமை

2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____________ அணி.

  1. ஒற்றுமை
  2. வேற்றுமை
  3. சிலேடை
  4. இரட்டுற மொழிதல்

விடை : வேற்றுமை

3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது _____________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. இரட்டுறமொழிதல்
  3. இயல்பு நவிற்சி
  4. உயர்வு நவிற்சி

விடை : இரட்டுறமொழிதல்

4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. வேற்றுமை
  3. உவமை
  4. சிலேடை

விடை : சிலேடை

சிறு வினா

1. பிறிது மொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

உவமையை மட்டும் கூறி, பொருளை பெற வைப்பது பிறிது மொழிதல் அணி எனப்படும்.

எ.கா. :-

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

தேர் கடலில் ஓடாது, கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறு எதுவும் தமக்குரிய இடத்தில் இருப்பதே நல்லது என்ற பொருளை பெற வைத்தால் இது பிறிது மொழிதல் அணி ஆயிற்று.

2. வேற்றுமை அணி என்றால் என்ன?

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.

சான்று:-

தாமரை

விளக்கம்:-

தாமரை – ஒருவகை மான், தாவும் மான்

மொழியை ஆள்வோம்!

அறிந்து பயன்படுத்துவோம்

தான், தாம் என்னும் சொற்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)

(எ.கா.)

மாடுகள் தமது தலையை ஆட்டின.

கன்று தனது தலையை ஆட்டியது.

கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக

1. சிறுமி ……………………. (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.

விடை: தனது

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ………………… (தனது/தமது) உழைப்பை நல்கினார்.

விடை: தனது

3. உயர்ந்தோர் ……………………….. (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

விடை: தம்மைத்தாமே

4. இவை …………………… (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

விடை: தாம்

5. குழந்தைகள் ……………… (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

விடை: தம்மால்

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

விடை:-

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

மொழியோடு விளையாடு

பின்வரும் வினாக்களைப் படித்து இரு வினாக்களுக்கு ஒரு விடை தருக

1. குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்?

விடை: பெருங்காயத்தால்

2. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?

விடை: நூல்

3. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?

விடை: போர்

4. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?

விடை: மாலை

5. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?

விடை: திங்கள்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • குறிக்கோள் – Objective
  • முனைவர் பட்டம் – Doctorate
  • பல்கலைக்கழகம் – University
  • அரசியலமைப்பு – Constitution
  • நம்பிக்கை – Confidence
  • இரட்டை வாக்குரிமை – Double voting
  • ஒப்பந்தம் – Agreement
  • வட்ட மேசை மாநாடு – Round Table Conference

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “அணி இலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

குறுவினா

1. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. – பாடலில் பயின்று வரும் அணியை விளக்குக

இப்பாடலில் வேற்றுமை அணி பயன்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:-

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

விளக்கம்:-

தீயும் நாவும் சுடம் தன்மையில் ஒப்புமையாகக் கூறப்பட்ட பொருள்கள்

அவற்றுள் “ஆறாதே நாவினால் சுட்ட வடு” என வேறுபடுத்தி கூறியிருப்பதால் இது வேற்றுமை அணி ஆகும்.

2. இரட்டுறமொழிதல் அணி என்றால் என்ன? சான்று தருக.

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.

சான்று:-

குளத்திலும் காட்டிலும் தாமரை உள்ளது

விளக்கம்:-

குளத்திலும் காட்டிலும் தாமரை மலர் உள்ளது

குளத்திலும் காட்டிலும் தாவும் மான் உள்ளது

இவ்வாறு இரு பொருள்ட வருவதால் இரட்டுற மொழிதல் அணி ஆயிற்று

 

Leave a Comment