Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 Viduthalai Thirunal Book Back Solution

இயல் 7.3 – பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 7.3 ‘Baratha Rathina M.G. Ramachandran’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 7.3 Baratha Rathina M.G. Ramachandran Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Baratha Rathina M.G. Ramachandran’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Baratha Rathina M.G. Ramachandran Subject.

Previous Lesson: விடுதலைத் திருநாள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எம்.ஜி.ஆர் ____________ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

  1. கண்டி
  2. கும்பகோணம்
  3. சென்னை
  4. மதுரை

விடை : கும்பகோணம்

2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் ____________

  1. நடிப்பு ஆர்வம்
  2. பள்ளி இல்லாமை
  3. குடும்ப வறுமை
  4. படிப்பில் ஆர்வமில்லாமை

விடை : குடும்ப வறுமை

3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ____________ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

  1. புரட்சித் தலைவர்
  2. பாரத்
  3. பாரத மாமணி
  4. புரட்சி நடிகர்

விடை : பாரத்

4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ____________

  1. திருச்சி
  2. சென்னை
  3. மதுரை
  4. கோவை

விடை : மதுரை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ____________

  1. மதிய உணவுத்திட்டம்
  2. வீட்டு வசதித் திட்டம்
  3. மகளிர் நலன் திட்டம்
  4. இலவசக் காலணித் திட்டம்

விடை : மதிய உணவுத்திட்டம்

குறு வினா

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆர். தன் குடும்ப வறுமை காரணமாக நாடகத்துறையில் ஈடுபட்டார்

2. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?

திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார்.

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.

  • ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம்
  • ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்
  • தாய் சேய் நல இல்லங்கள்
  • பற்பொடி வழங்கும் திட்டம்

சிறு வினா

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.

  • எம்.ஐி.ஆரும் அவரது மனைவியும் ஒரு முறை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
  • அப்போது மூதாட்டி ஒருவரும், பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் காலில் காலணி இல்லாமல் தலையில் புல் கட்டுக்களைச் சுமந்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
  • சாலையின் சூடு தாங்காமால் மரநிழலில் நிற்பதும், ஒடுவதுமாக இருந்தனர்.
  • உடனே எம்.ஜி.ஆர் தமது மனைவியாரின் காலணியையும் உறவினப் பெண்ணின் காலணியையும் அவர்களுக்குக் கொடுத்துப் பணம் கொடுத்தார்.
  • இந்த நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது.
  • அதனால், பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

  • தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
  • மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
  • தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்

நெடு வினா

எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.

  • திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார்.
  • தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய கருத்துக்களை மக்களிடம் விதைத்தார்.
  • வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டம் என்பதைத் தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார்.
  • ஏழை மக்கள் காலணி இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்ச்சி அவரது மனதை ஆழமாகப் பாதித்தது. அதனால் பின்னர் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டார்.
  • உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காக கொண்டு வந்தார்.

சிந்தனை வினா

சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

உண்மை, உழைப்பு, மனிதநேயம், நேர்மை, இரக்கம், ஏழைகளுக்கு உதவுதல், தன்னலமில்லாமை, ஒருமைபாட்டு உணர்வு, சமயச் சார்பின்மை, கூர் சிந்தனை, எளிமை ஆகிய பண்புகள் சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

 

பின்வரும் பகுதியில் “பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய ஊர் ____________

  1. திருச்சி
  2. தஞ்சாவூர்
  3. சென்னை
  4. கும்பகோணம்

விடை : கும்பகோணம்

2. எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு ____________

  1. 1915
  2. 1916
  3. 1917
  4. 1918

விடை : 1917

3. காமராசர் ____________ கொண்டு வந்தார்

  1. பற்பொடி திட்டம்
  2. காலணி திட்டம்
  3. மதிய உணவுத் திட்டம்
  4. தாய்சேய் நல இல்லங்கள்

விடை : மதிய உணவுத் திட்டம்

4. காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர் ____________

  1. எம்.ஜி.ஆர்
  2. ஜெயலலிதா
  3. கலைஞர்
  4. அண்ணா

விடை : எம்.ஜி.ஆர்

5. ________________ எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது

  1. காமரஜார் பல்கலைக்கழகம்
  2. சென்னை பல்கலைக்கழகம்
  3. திருவள்ளூவர் பல்கலைக்கழகம்
  4. அண்ணா பல்கலைக்கழகம்

விடை : சென்னை பல்கலைக்கழகம்

6. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ________________ 

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. மதுரை
  4. தஞ்சாவூர்

விடை : தஞ்சாவூர்

7. தமிழக அரசு எம்.ஜி.ஆரின் நினைவினை போற்றும் வகையில் ______________ நிறுவியுள்ளது.

  1. எம்.ஜி.ஆர் அறிவியல் பல்கலைக் கழகம்
  2. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்
  3. எம்.ஜி.ஆர் பொறியில் பல்கலைக் கழகம்
  4. எம்.ஜி.ஆர் கலைக் கல்லூரி

விடை : எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்

8. ______________ உலகத் தமிழ் மாநாட்டை மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர் சிறப்பாக நடத்தினார்.

  1. ஐந்தாம்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. எட்டாம்

விடை : ஐந்தாம்

9. தமிழ்பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்

  1. எம்.ஜி.ஆர்
  2. ஜெயலலிதா
  3. கலைஞர்
  4. அண்ணா

விடை : எம்.ஜி.ஆர்

10. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் 

  1. சென்னை, தென்காசி, நெல்லை
  2. சென்னை, மதுரை, நெல்லை
  3. மதுரை, தென்காசி, நெல்லை
  4. சென்னை, கன்னியாகுமரி, நெல்லை

விடை : சென்னை, மதுரை, நெல்லை

11. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

  1. 2018-2019
  2. 2017-2018
  3. 2020-2021
  4. 2015-2016

விடை : 2017-2018

சிறு வினா

1. எம்.ஜி.ஆர் எங்கு பிறந்தார்?

எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 17.01.1917-ல் பிறந்தார்

2. தமிழக அரசால் எம்.ஜி.ஆரின் நினைவப் போற்றும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எழுதுக

  • தமிழக அரசு எம்.ஜி.ஆர் நினைவப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் பெயரில் மருத்துவப் பல்கலைக்கழகத்தினை நிறுவியுள்ளது.
  • சென்னை கடற்கரையில் அவருக்கு அழகான நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.

3. எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

1988

4. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் எவை?

சென்னை, மதுரை, திருநெல்வேலி

5. இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்த விதத்தினை கூறுக

இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

6. எம்.ஜி.ஆரின் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்களை எழுதுக

புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர்

குறு வினா

தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர் செயல்படுத்திய சமுக நலத்திட்டங்கள் சிலவற்றை எடுத்து எழுதுக

  • உழவர்களின் கடன் தள்ளுபடி.
  • ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
  • ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்.
  • தாய்சேய் நல இல்லங்கள்.
  • பற்பொடி வழங்குதல்.
  • நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்க்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
  • முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
  • வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.

Leave a Comment