இயல் 7.2 – விடுதலைத் திருநாள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 7.2 ‘Viduthalai Thirunal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 7.2 விடுதலைத் திருநாள்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 7.2 Viduthalai Thirunal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.
விடுதலைத் திருநாள் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Viduthalai Thirunal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Viduthalai Thirunal Varum Subject.
விடுதலைத் திருநாள் பாடல்
முன்னூறு வருடமாய் முற்றுகை யிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இது.செத்த பிணமாய்ச் சீவனில் லாமல் மொத்தமாய்த் தேசத்தை முற்றுகையிட்ட மூட மூட நிர்மூட உறக்கத்தை ஓட ஓட விரட்டி யடித்து விழிக்க வைத்தது – வையம் வியக்க வைத்தது – எந்த நாளோோ அந்த நாள் இது.பரிதவித் திருந்த பாரத அன்னை காளியாய்ச் சீறிக் கைவிலங் கொடித்து பகையைத் துடைத்து சத்திய நெஞ்சின் சபதம் முடித்து கூந்தல் முடித்துக் குங்குமப் பொட்டு வைத்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது எந்த நாளோ அந்த நாள்இது. |
சதி வழக்கினிலே சம்பந்தப் பட்டுத் தூக்குக் கயிற்றில் தொங்கப் போகும் கடைசிக் கணத்திலும் கண்முன் நிறுத்திப் பகத்சிங் பார்த்துப் பரவசப் பட்ட அற்புத விடியலை அழைத்து வந்தது எந்த நாளோ அந்த நாள் இது.முற்றிப் படர்ந்த முட்காட்டை எரித்து விளைந்த மூங்கிலை வீரமாய்த் துளைத்து மூச்சுக் காற்றை மோகித்து நுழைத்து புரட்சிப் புல்லலாங் குழலில் பூபாளம் இசைத்தது எந்த நாளோ அந்த நாள் இது. இதந்தரும் இந்தச் – மீரா |
பாடலின் பொருள்
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப்போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்றும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.
அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து அவிந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.
சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கணக்கில் கனவுகண்ட இந்தியாவில் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள் காட்டினை அழித்து, அங்கு விளைந்த புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.
இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த தம் தாய்நாட்டை தமிழால் வணங்குவாேம்.
நூல்வெளி
- மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்
- “அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தியவர்.
- ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும்
- இவர் எழுதிய “கோடையும் வசந்தமும்” என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
சொல்லும் பொருளும்
- சீவன் – உயிர்
- வையம் – உலகம்
- சத்தியம் – உண்மை
- சபதம் – சூளுரை
- ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
- மோகித்து – விரும்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் முழுநிலவு அழகாகத் _____________ அளித்தது.
- தயவு
- தரிசனம்
- துணிவு
- தயக்கம்
விடை : தரிசனம்
2. இந்த _____________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
- வையம்
- வானம்
- ஆழி
- கானகம்
விடை : வையம்
3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- சீவ + நில்லாமல்
- சீவன் + நில்லாமல்
- சீவன் + இல்லாமல்
- சீவ + இல்லாமல்
விடை : சீவன் + இல்லாமல்
4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- விலம் + கொடித்து
- விலம் + ஒடித்து
- விலன் + ஒடித்து
- விலங்கு + ஒடித்து
விடை : விலங்கு + ஒடித்து
5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____________
- காட்டைஎரித்து
- காட்டையெரித்து
- காடுஎரித்து
- காடுயெரித்து
விடை : காட்டையெரித்து
6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____________
- இதந்தரும்
- இதம்தரும்
- இதத்தரும்
- இதைத்தரும்
விடை : இதந்தரும்
குறு வினா
1. பகத்சிங் கண்ட கனவு யாது?
இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார்.
2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?
300 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று மீரா குறிப்பிடுகிறார்
சிறு வினா
இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?
- அடிமையாகத் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினத்துடன் எழுந்து,
- தன்னுடைய கை விலங்கை உடைத்து,
- பகைவரை அழித்து,
- தன்னுடைய அவிழ்ந்த கூந்தலை முடித்து,
- தன் நெற்றியில் திலகமிட்டு காட்சியளிக்கிறாள்.
சிந்தனை வினா
நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
- விடுதலைப் போராட்ட நிகழ்வு காட்சிகளை நாடகமாக நடத்தலாம்.
- விடுதலை வீரர்களைப் போல வேடமிட்டு அவர் தம் செயல்களை எடுத்துக் கூறலாம்.
- விடுதலைப் போராட்டங்கள் குறித்த செய்திகளை உணர்த்தும் வகையில் பேச்சுப் போட்டு, கட்டுரைப் போட்டிகளை வைக்கலாம்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “விடுதலைத் திருநாள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடையவர்
- மீரா
- மீ. இராஜகுமார்
- மீ. இராஜன்
- மீ. குமார்
விடை : மீ. இராேசேந்திரன்
2. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் __________
- மீரா
- மேத்தா
- வைரமுத்து
- ஈரோடு தமிழன்பன்
விடை : மீரா
3. மீரா எழுதிய நூல்களில் பொருந்தாதது
- ஊசிகள்
- குக்கூ
- ஊரும் பேரும்
- மூன்றும் ஆறும்
விடை : ஊரும் பேரும்
4. விடுதலைத் திருநாள் என்னும் கவிதைப்பேழை பகுதி இடம் பெறும் நூல் __________
- ஊசிகள்
- குக்கூ
- மூன்றும் ஆறும்
- கோடையும் வசந்தமும்
விடை : கோடையும் வசந்தமும்
5. மீரா __________ராக பணியாற்றியவர்
- பள்ளி ஆசிரியர்
- ஆராய்ச்சியாளர்
- கல்லூரி பேராசிரியர்
- தத்துவநெறியாளர்
விடை : கல்லூரி பேராசிரியர்
6. விடுதலைத் திருநாள் கவிதையில் இடம் பெறும் விடுதலை வீரர்
- நேதாஜி
- பகத்சிங்
- தந்தை பெரியார்
- மகாத்மா காந்தி
விடை : பகத்சிங்
7. சத்தியம் என்பதன் பொருள் ______________
- உயிர்
- உண்மை
- உலகம்
- சூளுரை
விடை : உண்மை
8. சபதம் என்பதன் பொருள் ______________
- உயிர்
- உண்மை
- உலகம்
- சூளுரை
விடை : சூளுரை
9. முற்றுகையிட்ட என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- முற்று + கை + இட்ட
- முற்றுகை + இட்ட
- முற்றுகை + யிட்ட
- முற்று + கை + யிட்ட
விடை : முற்றுகை + இட்ட
10. சீவனில்லாமல் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- சீவன் + இல்லாமல்
- சீவன் + யில்லாமல்
- சீவன் + ஈல்லாமல்
- சீவன் + ய்யில்லாமல்
விடை : சீவன் + இல்லாமல்
11. மூச்சுக்காற்றை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மூச்சுக் + காற்றை
- மூச்சு + க்காற்றை
- மூச்சு + காற்றை
- மூச்சி + காற்றை
விடை : மூச்சு + காற்றை
12. இதந்தரும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- இதம் + தரும்
- இதந் + தரும்
- இதம் + அரும்
- இத + ந்தரும்
விடை : இதம் + தரும்
சிறு வினா
1. கவிஞர் மீராவின் படைப்புகளை எழுதுக
ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும்
2. மீரா நடத்திய இதழ்களை எழுதுக
அன்னம் விடு தூது, கவி
3. யாருக்கு சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
பகத்சிங்
4. கவிஞர் மீரா குறிப்பு வரைக
- மீராவின் இயற்பெயர் மீ.இராசேந்திரன்
- மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்
- “அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தினார்
- ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும்