Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 Thirukural Book Back Solution

இயல் 3.5 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 3.4 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 3.5 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 3.5 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukural Subject.

Previous Lesson: வல்லினம் மிகும் இடங்கள்

நூல் வெளி

  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்ளிப்பாக அமைந்த நூல் திருக்குறள்.
  • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப்பொதுமறை நூல் இந்நூல்.
  • முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
  • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கள் ஆகிய பதின்மரால் முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது.
  • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனபர்.
  • இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
  • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்
  • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்
  • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றிவர் திருவள்ளூவர்
  • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்பேதார், பெருநாவலர் போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு.

பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள்

படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Thirukural - Padathirketra Kuralai Therga

அ)  நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
       பேணாமை பேதை தொழில்.

ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
       கேளாது நட்டார் செயின்.

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
      செல்வத்துள் எல்லாந் தலை

விடை :-

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை

பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

பாடல்:-

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

குறள்:-

அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விடை :-

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

பொருள்:-

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி ” இவருக்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி கொள்ள வேண்டும். (பொறையுடைமை – 8வது குறள்

பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.

  1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று –  ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
  2. தத்தம் கருமமே கட்டளைக்கல் –  அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
  3. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் –  சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

விடை : 1 -இ, 2 – அ, 3 – ஆ

4. தீரா இடும்பை தருவது எது?

  1. ஆராயாமை, ஐயப்படுதல்
  2. குணம், குற்றம்
  3. பெருமை, சிறுமை
  4. நாடாமை, பேணாமை

விடை : ஆராயாமை, ஐயப்படுதல்

சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்

விடை: ராமு நுணங்கிய கேள்வியராக விளங்கினான்

ஆ. பேணாமை – பாதுகாக்காமை

விடை: உழவனால் பேணாத பயிர் வீணாகும்

இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு

விடை: செவிச்செல்வம் பெற்றவர் சாதனையாளராக உருவாகின்றனர்

ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்

விடை: காந்தியடிகள் அறனல்ல செய்கைகளைச் செய்யாதவர்

குறு வினா

1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

தன்னை இகழ்பவரிடம் நிலம் போலப் பொறுமை காக்கவேண்டும்

2. தீயவை தீய பயத்தலால் தீயவை
   தீயினும் அஞ்சப் படும் இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும

3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல் இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

எதுகை நயம்

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

  • ற்றொற்றித் – மற்றுமோர்
  • ற்றினால் – ஒற்றிக்

மோனை நயம்

முதலாம் எழுத்து ஒன்றி வருவது

  • ற்றொற்றித் – ற்றினால்
  • ற்றினால் – ற்றிக்

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிக்காது

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

விடை:-

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கலைச்சொல் அறிவோம்

  • அகழாய்வு – Excavation
  • புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
  • கல்வெட்டியல் – Epigraphy
  • பொறிப்பு – Inscription
  • நடுகல் – Hero Stone
  • பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. உவமையணி
  2. சொற்பொருள் பின்வருநிலையணி
  3. ஏகதேச உருவக அணி
  4. உருவக அணி

விடை: உவமையணி

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. உவமையணி
  2. சொற்பொருள் பின்வருநிலையணி
  3. ஏகதேச உருவக அணி
  4. உருவக அணி

விடை: சொற்பொருள் பின்வருநிலையணி

3. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. உவமையணி
  2. சொற்பொருள் பின்வருநிலையணி
  3. ஏகதேச உருவக அணி
  4. உருவக அணி

விடை: ஏகதேச உருவக அணி

4. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. ஏகதேச உவமையணி
  2. சொற்பொருள் பின்வருநிலையணி
  3. உவமையணி
  4. உருவக அணி

விடை: உவமையணி

5. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
 பாடலில் பயின்று வந்துள்ள அணி

  1. ஏகதேச உவமையணி
  2. சொற்பொருள் பின்வருநிலையணி
  3. உருவக அணி
  4. உவமை அணி

விடை: சொற்பொருள் பின்வருநிலையணி

குறு வினா

1. தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலத்தை வள்ளுவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலத்தினை தன்னை இகழ்பவரைப் பொறுப்பதுவுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

2. செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம் எதனை விட தலைசிறந்தது?

செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம் பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.

3. நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் எதனைப் பேசுவது அரிது.

நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

4. ஆராய்ந்து அறியும் உரைகல் எது?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.

5. திருக்குறளை குறிப்பிடும் வேறு பெயர்கள் யாவை?

முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை

6. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களை கூறுக

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

7. திருவள்ளுவரை குறிப்பிடு சில சிறப்பு பெயர்களை எழுதுக

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்பேதார், பெருநாவலர்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment