இயல் 1.1 – அன்னை மொழியே
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 1.1 ‘Annai Mozhiye’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 1.1 அன்னை மொழியே
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 1.1 Annai Mozhiye Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.
அன்னை மொழியே பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘ Annai Mozhiye’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Annai Mozhiye Subject.
அன்னை மொழியே பாடல்
அழகார்ந்த செந்தமிழே! அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! செப்பரிய நின்பெருமை செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை உந்தி உணர்வவெழுப்ப உள்ளக் கனல்மூளச் |
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் க. சச்சிதானந்தன் |
நூல் வெளி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்பியவர்.
- உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
- இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.
- இவரது நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.
பலவுள் தெரிக
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
- எந் + தமிழ் + நா
- எந்த + தமிழ் + நா
- எம் + தமிழ் + நா
- எந்தம் + தமிழ் + நா
விடை : எம் + தமிழ் + நா
குறு வினா
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
சிறு வினா
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”
- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
நெடு வினா
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அறிமுக உரை:-
தாயே! தமிழே! வணக்கம்,
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.
என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
சுந்தரனார் | பெருஞ்சித்திரனார் |
நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,
பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும், நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும், தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார் |
குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!
பழமைக்கு பழமையானவளே! பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே! பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார். |
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….” | “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!” |
நிறைவுரை:-
இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “அன்னை மொழியே” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வவை உலகெங்கும் பரப்பியவர் ______________
- க. சச்சிதானந்தன்
- வாணிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கண்ணதாசன்
விடை : பெருஞ்சித்திரனார்
2. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் ______________
- க. சச்சிதானந்தன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
விடை : பெருஞ்சித்திரனார்
3. அன்னைமொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தர்களில் ஒருவர்
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்லவன்
விடை : பாண்டியன்
4. பெருஞ்சித்திரனார் படைப்புகளில் பொருந்தாவற்றைக் கூறுக
- பாவியக்கொத்து
- தென்தமிழ்
- நூறாசிரியம்
- பள்ளிப்பறவைகள்
விடை : தென்தமிழ்
5. பெருஞ்சித்திரனாரின் _______________ தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை
- பள்ளிப்பறவைகள்
விடை : திருக்குறள் மெய்ப்பொருளுரை
6. குறுந்தொகையின் அடைமொழி __________
- ஒத்த
- நல்ல
- ஓங்கு
- கற்றறிந்தார் ஏத்தும்
விடை : நல்ல
7. செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல பாடலில் பயின்று வந்துள்ள அணி
- உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- உவமையணி
- பொருள் பின்வரு நிலையணி
விடை : உவமையணி
8. சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று பாடியவர்
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- க.சச்சிதானந்தன்
- சுரதா
விடை : க.சச்சிதானந்தன்
9. செந்தமிழ் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- வேற்றுமைத் தொகை
- உம்மைத்தொகை
விடை : பெருஞ்சித்திரனார்
9. குடித்து இலக்கணக்குறிப்பு தருக
- வினையெச்சம்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
விடை : வினையெச்சம்
குறு வினா
1. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் சிலவற்றை கூறுக
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப் பறைவைகள்
2. இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே! இவ்டியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?
- பாப்பத்தே – பத்துப்பாட்டு – 10
- எண் தொகை – எட்டுத்தொகை – 8
- நற்கணக்கு – பதினெண்கீழ்கணக்கு – 18
3. பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக
- இயற்பெயர்: துரை. மாணிக்கம்.
- பெற்றோர்: துரைசாமி – குஞ்சம்மாள்
- காலம்: 10.03.1933 – 11.06.1995
- இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு
- படைப்புகள்: உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள்
- இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.