Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 Kalakanitham Book Back Solution

இயல் 8.3 – காலக்கணிதம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 8.3 ‘Kalakanitham’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 8.3 காலக்கணிதம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 8.3 Kalakanitham Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

காலக்கணிதம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kalakanitham’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: ஞானம்

காலக்கணிதம் பாடல்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

நூல் வெளி

  • “காலக்கணிதம்” என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • “முத்தையா” என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
  • இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
  • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
  • திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
  • சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

பலவுள் தெரிக.

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்

  1. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
  2. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
  3. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
  4. என்மனம் இறந்துவிடாது இகழ

விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

குறு வினா

‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.

கொள்வோர் – உள்வாய்

ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க

கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

நெடு வினா

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

– கண்ணதாசன்

திரண்ட கருத்து:-

கவிஞன் நானே காலத்தை கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்த ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம் பொன்னை விட விலையுயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:-

காட்டுக்கு யானை, பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

விஞன் – ருப்போடு, இவை சரி – இவை தவறாயின்

என மோனை நயமும் உள்ளது.

எதுகை நயம்:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

ருப்படு – பொருளை – உருப்பட

என எதுகை நயமும் உள்ளது.

முரண்:-

நாட்டுக்கு அரண், பாட்டுக்கு முரண்

செய்யுளில் அடியிலோ, சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும்

ஆக்கல் X அழித்தல்

என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுந்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:-

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத்தொடுப்பது இயைபு ஆகும்

…. புகழுடைத் தெய்வம் – …. பொருளென் செல்வம் – என இயைபு நயமும் உள்ளது

அணி நயம்:-

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக

யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்

என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:-

சந்தம் தமிழக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

கவிதைகள்…

கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும்
நதியின் பிழையன்று
நறும்புனலின்மை அன்றே
பதியின் பிழையன்று
பயந்த நம்மைப் புரந்தான்
மதியின் பிழையன்று
மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழை நீ
இதற்கென்னை வெகுண்டதென்றன்

– கம்பன்

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு – யாரம்மா!

– கண்ணதாசன்

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காலக்கணிதம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கண்ணதாசனின் இயற்பெயர்

  1. முத்தரசன்
  2. முத்தையா
  3. முத்துக்குமார்
  4. முத்துசாமி

விடை : முத்தையா

2. கண்ணதாசன் __________ மாவட்டத்தில் பிறந்தவர்

  1. சிவகங்கை
  2. நெல்லை
  3. புதுக்கோட்டை
  4. இராமநாதபுரம்

விடை : சிவகங்கை

3. கண்ணதாசன் __________ ஊரில் பிறந்தவர்

  1. முக்கூடல்
  2. சிவகங்கை
  3. கூடல் மாநகர்
  4. சிறுகூடல்பட்டி

விடை : சிறுகூடல்பட்டி

4. கண்ணதாசன் முதன் முதலாக திரைப்படத்திற்காக பாடல் எழுதிய ஆண்டு

  1. 1939
  2. 1949
  3. 1959
  4. 1969

விடை : 1949

5. கண்ணதாசன் __________ என்னும் பாடலை முதல் திரைப்படப் பாடலாக எழுதியுள்ளார்

  1. வாழ நினைத்தால் வாழலாம்
  2. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
  3. மலர்களைப் போல் தங்கை
  4. கலங்காதிரு மனமே

விடை : கலங்காதிரு மனமே

6. கண்ணதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

  1. மாங்கனி
  2. சேரமான்காதலி
  3. இயேசு காவியம்
  4. சிவகங்கைச் சீமை

விடை : சேரமான்காதலி

7. கண்ணதாசன் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு

  1. 1978
  2. 1980
  3. 1982
  4. 1984

விடை : 1980

8. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர்

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. கண்ணதாசன்
  4. மேத்தா

விடை : கண்ணதாசன்

9. கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த ஆண்டு

  1. 1976
  2. 1978
  3. 1980
  4. 1982

விடை : 1978

10. மாற்றம் எனது மானிடத் தத்துவம் என்னும் வரிகளை கூறியவர்

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. கண்ணதாசன்
  4. மேத்தா

விடை : கண்ணதாசன்

11. கவிஞன் யானோர் காலக் கணிதம் என்னும் வரிகளின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. மேத்தா
  4. கண்ணதாசன்

விடை : கண்ணதாசன்

12. திரைப்படப் பாடல்கள் வழியாக மக்களுக்கு மெய்யியலை உணர்த்தியவர்

  1. பாரதியார்
  2. வைரமுத்து
  3. மேத்தா
  4. கண்ணதாசன்

விடை : கண்ணதாசன்

13. பொருந்தாதவற்றை தேர்க

  1. ஆக்கல் – தொழிற்பெயர்
  2. கொள்க – வியங்கோள் வினைமுற்று
  3. கொள்வோர் – வினையாலணையும் பெயர்
  4. அறிந்து – உருவகம்

விடை : அறிந்து – உருவகம்

குறு வினா

1. கண்ணதாசனின் புனைப் பெயர்கள் சிலவற்றைக் கூறுக

காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி

2. கண்ணதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்களை எழுதுக

கவியரசு, கவிச்சக்ரவர்த்தி, குழந்தை மனம் கொண்ட கவிஞர்

3. கண்ணதாசன் சிறு குறிப்பு வரைக

  • இயற்பெயர்: முத்தையா
  • பிறந்த இடம்: சிறுகூடல்பட்டி (சிவகங்கை மாவட்டம்)
  • பெற்றோர்: சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
  • முதல் திரைப்படப்பாடல்: கலங்காதிரு மனேம (1949)
  • சிறப்பு: சிறந்த கவியரங்கக் கவிஞர், பேச்சாளர், தமிழக அரசவைக் கவிஞர்
  • விருது: சாகித்திய அகாதெமி (சேரமான் காதலி)
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய காெண்டு சேர்த்தவர்.

Leave a Comment