இயல் 8.4 – இராமானுசர் – நாடகம்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 8.4 ‘Ramanujar – Nadagam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 8.4 இராமானுசர் – நாடகம்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 8.4 Ramanujar – Nadagam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
இராமானுசர் – நாடகம் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Ramanujar – Nadagam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
நெடு வினா
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.
காட்சி – 1
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்
குகன் | செழியா! வந்துவிட்டாயா. |
செழியன் | வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்கு செல்வோமோ? |
குகன் | செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசியரைச் சந்திக்க முடியவில்லை. |
செழியன் | இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார். |
காட்சி – 1
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், ஆசிரியர்
மாணவர்கள் இருவரும் | வணக்கம் ஐயா |
ஆசிரியர் | வணக்கம் |
குகன் | ஐயா! உள்ளே வரலாமா? |
ஆசிரியர் | வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள். |
செழியன் | ஐயா வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே.. அதற்காகத்தான் வந்தோம். |
ஆசிரியர் | நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணஙகள் கூறப்போகின்றேன். முதலில் கொக்கைப் போல வாய்ப்பு கிட்டும் வரைக் கொக்கைப்போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான வள்ளுவர் “கொக்கொக்க” எனப் பாடியுள்ளார் |
குகன் | சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம். |
ஆசிரியர் | இரண்டாவதாக, “கோழியைப் போல!” |
செழியன் | ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….. |
ஆசிரியர் | கோழி, குப்பையக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான உணவை மட்டும் கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களை கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்கு தேவையான நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும். |
இருவரும் | நன்றாகப் புரிந்தது ஐயா! |
ஆசிரியர் | மூன்றாவதாக, உப்பைப் போல |
குகன் | ஆம், ஐயா “உப்பைப்போல்” என்பதன் விளக்கம் தாருங்கள் |
ஆசிரியர் | கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலம் அவர்களின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்த நடந்து கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பம் தான். உப்பு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம். |
இருவரும் | மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள். நன்றி! ஐயா! |
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “இராமானுசர் – நாடகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. சணபகம் __________ ஒரு முறை மலர்கிறது
- நாளுக்கு
- ஆண்டுக்கு
- பன்னிரண்டு ஆண்டுக்கு
- தலைமுறைக்கு
விடை : நாளுக்கு
2. பிரம்மகமலம் ___________ ஒருமுறை மலர்வது
- நாளுக்கு
- ஆண்டுக்கு
- பன்னிரண்டு ஆண்டுக்கு
- தலைமுறைக்கு
விடை : ஆண்டுக்கு
3. குறிஞ்சி பூ ___________ ஒருமுறை மலர்வது
- நாளுக்கு
- ஆண்டுக்கு
- பன்னிரண்டு ஆண்டுக்கு
- தலைமுறைக்கு
விடை : பன்னிரண்டு ஆண்டுக்கு
4. மூங்கில் ___________ ஒருமுறை மலர்வது
- நாளுக்கு
- ஆண்டுக்கு
- தலைமுறைக்கு
- பன்னிரண்டு ஆண்டுக்கு
விடை : தலைமுறைக்கு
5. தண்டு கொடிக்கு இணையானவர்கள் என கருதப்படுபவர்கள்
- பூரணர், கூரேசர்
- கூரேசர், இராமானுசர்
- இராமானுசர், முதலியாண்டாள்
- முதலியாண்டாள், கூரேசர்
விடை : முதலியாண்டாள், கூரேசர்
6. செளம்ய நாராயணன் ___________ என்பவரின் மகன்
- நாராயணன்
- பூரணர்
- செளம்ய ராஜன்
- முதலியாண்டான்
விடை : செளம்ய நாராயணன்
7. நான்மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன்
மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் என்ற கூற்றினை கூறியவர்
- இராமானுசர்
- பூரணர்
- கூரேசர்
- முதலியாண்டான்
விடை : இராமானுசர்
8. செளம்ய நாராயணன் ____________ அடைக்கலப்படுத்தப்பட்டான்
- பூரணர்
- கூரேசர்
- இராமானுசர்
- முதலியாண்டான்
விடை : இராமானுசர்
9. பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாகக் கருதப்படுவது
- திருமந்திரம்
- மந்திரம்
- திருநீறு
- துறவு
விடை : திருமந்திரம்
10. திருமகள் ______________ திருப்பாதங்களைப் புகலிடமாக கொள்பவள்
- சிவபெருமானின்
- பிரம்மனின்
- நாராயணனின்
- முருகனின்
விடை : நாராயணனின்
11. இராமானுசரை பூரணர் ______________யென அழைத்தார்?
- பெரியாழ்வாரே
- பெரியவரே
- இளையாழ்வாரே
- குணவாளனே
விடை : இளையாழ்வாரே
12. கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- அகநானூறு
- புறநானூறு
- நற்றிணை
- கலித்தொகை
விடை : புறநானூறு
13. பிரான் மலை _____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது
- திருச்சி
- திருநெல்வேலி
- சிவகங்கை
- திண்டுக்கல்
விடை : சிவகங்கை