Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.1 Anantharangar Natkuripu Book Back Solution

இயல் 5.1 – ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ‘Anantharangar Natkuripu’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 5.1 Anantharangar Natkuripu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Anantharangar Natkuripu’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: படைபாக்க உத்திகள்

பலவுள் தெரிக

பொருந்தாதைத் தேர்க

அ) ஆனந்தரங்கர் எழுதி நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்.

இ) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள்கள் தேவைப்பட்டன

  1. அ, ஆ
  2. ஆ, இ
  3. அ, இ
  4. ஆ, ஈ

விடை : ஆ, ஈ

2. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?

  1. மொழிபெயர்ப்பாளர்
  2. இந்தியாவின்பெப்பிசு
  3. தலைமைத் துவிபாஷி
  4. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

விடை : உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

குறு வினா

ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக?

  • கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்
  • நீண்ட நாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.

சிறு வினா

ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதி வழி எடுத்துக்காட்டுக

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது.
  • பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது
  • சினமுற்ற ஆற்காடு நவாப் தம் மூத்த மகனை அனுப்பிப் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டது.
  • தேவனாம் பட்டணத்தை கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப் பல வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்கக, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்.

நெடு வினா

தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர் என்பதை நிறுவுக

காலப்பெட்டகமான நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும், அக்கால பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் வராற்ற்றுப் பேழையாகவும் உள்ளது. அந்த நாட்குறிப்பு நிகழ்வு, நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள், கிழமையோடு 12 தொகுதிகளாகள வெளிவந்துள்ளது.

காலப்பெட்டகமான நாட்குறிப்பு

அக்காலத்தில் நாணயம் அச்சடிக்க உரிமை பெற்றது. பிரெஞ்சு -ஆங்கிலப்படைகள் தங்களுக்கு இடையே நாடு பிடிக்கப்பட்டது. ஆற்காடு நவாப்பின் செயல்பாடுகள் முதலான அரசியல் நிகழ்வுகளையும் நாட்குறிப்பில் பதித்துள்ளார். 18-ம் நூற்றாண்டின் தமிழகத்தின் சமூகத்தில் நிலவிய பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பை பதிவு செய்துள்ளார்.

சமுதாய செய்தி

நீதி வழங்குதல் பல்வேறு காரணங்களுக்காக மரண தண்டணை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய அக்காலச் செயல்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வீடுகளில் திருடியவர்களைப் பிடித்துத் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கிலிட்டது. ஒருவருக்குத் காதறித்து,  ஐம்பது கசையடி கொடுத்து ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணகர் பலர் மூலம் கடல் வணிகம் செய்ததைத் தெளிவுபட எழுதியுள்ளார். ஐரோப்பியக் கப்பல்கள் ஆறு மாதம் பயணம் செய்து புதுவை வந்ததும், பீரங்கி முழங்கி வரேற்றதையும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பால் அறியமுடிகிறது.

வர்த்தகச் செய்தி

துணி வரத்தகம் செய்த முறை, புதுச்சேரியில் நாணயம் அச்சிட்ட செய்தி, 1742-ல் வீசிய பெங்காற்று, அதனால் மக்கள் பெற்ற துயர், வாடிய மக்களுக்கு ஒழுகரை கனகராயர் பெருஞ்சோறு அளித்தது, 1745-ல் கப்பல் வருகை இன்மையால் புதுவையில் ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடு, அதை நீக்க லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தது, மக்கள் அடைந்த மகிழ்ச்சி என, அனைத்தையும் பதித்துள்ளார். இவற்றை எல்லாம் நோக்கத் தம் நாட்குறிப்பை ஆனந்தரங்கர், தாம் வாழ்ந்த காலத்தின் நாகரிகப் புதையலாகப் பயன்பட வைத்துள்ளமை புலப்படும். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. 18-ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிய கிடைத்த அரிய பெட்டகம்

  1. வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
  2. துய்ப்ளே நாட்குறிப்பு
  3. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  4. சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு

விடை : ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

2. நாட்குறிப்பை ஆங்கிலத்தில் எவ்வாறு என அழைப்பர்.

  1. டைஸ்
  2. டைரியம்
  3. டைரி
  4. எபிமரிடிஸ்

விடை : டைரி

3. டைரி என்னும் சொல் __________ என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான டைஸ் என்ற சொல்லில் இருந்து உருவாயிற்று.

  1. டைஸ்
  2. டைரோஸ்
  3. டைரியம்
  4. எபிமரிடிஸ்

விடை : டைரியம்

4. நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழும் EPHEMERIDES என்பது

  1. கிரேக்க குறிப்பேடு
  2. இலத்தீன் குறிப்பேடு
  3. ஆங்கிலக் குறிப்பேடு
  4. பிரெஞ்சுக் குறிப்பேடு

விடை : கிரேக்க குறிப்பேடு

5. EPHEMERIDES என்பதற்கான பொருள்.

  1. நான்கு நாளுக்கான முடிவு
  2. மூன்று நாளுக்கான முடிவு
  3. இரண்டு நாளுக்கான முடிவு
  4. ஒரு நாளுக்கான முடிவு

விடை : ஒரு நாளுக்கான முடிவு

6. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தையாக கருதப்படுபவர்

  1. வாஸ்கோடகாமா
  2. சாமுவேல் பெப்பிசு
  3. கீட்ஸ்
  4. ஜான்ரஸ்கின்

விடை : சாமுவேல் பெப்பிசு

7. ஆனந்தரங்கர் தமிழில் எழுதிய நாட்குறிப்பு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது.

  1. 8
  2. 10
  3. 12
  4. 14

விடை : 12

8. முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கமானது யாருடைய காலம் முதல் வழக்கத்தில் இருந்தது.

  1. பாபர்
  2. சலீம்
  3. அக்பர்
  4. ஒளரங்கசீப்

விடை : பாபர்

9. ஆனந்தரங்கர் நாட்குறிப்பானது தென்னிந்தியாவின் ___________ ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது.

  1. 10
  2. 15
  3. 20
  4. 25

விடை : 25

9. லல்லி சென்னைக் கோட்டையை ___________-ல் முற்றுகையிட்டுத் தாக்கியது

  1. 1757
  2. 1758
  3. 1759
  4. 1760

விடை : 1758

10. மேஸ்தர்பிகட் _____________ ஆண்டில் சென்னை கோட்டையின் கவர்னராக இருந்துள்ளார்

  1. 1755
  2. 1756
  3. 1757
  4. 1758

விடை : 1758

11. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி ____________ செய்திகளையே விவரித்துள்ளது.

  1. வணிகச்
  2. வரலாற்றுச்
  3. அரசியல்
  4. இலக்கியச்

விடை : வணிகச்

12. துணிவர்த்தகம்  சார்ந்த வணிகக் கழகத்தின் அதிகாரி

  1. லல்லி
  2. அலனுவார்
  3. கொர்னே
  4. லெபூர்தானே

விடை : கொர்னே

13. புதுச்சேரிக்கு கப்பலின் வருகை தடைபட்டு பெரும் பொருளாதார தட்டுப்பாடு தோன்றிய ஆண்டு

  1. 1743
  2. 1745
  3. 1742
  4. 1744

விடை : 1745

14. புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் அழகப்பன் ஆற்றிய பணி

  1. ஆளுநராக
  2. பணியாளாக
  3. மாலுமியாக
  4. எடுபிடியாக

விடை : மாலுமியாக

15. நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பெற்ற கழகம்

  1. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கழகம்
  2. போர்ச்சுக்கீசிய கிழக்கிந்தியக் கழகம்
  3. ஆங்கில கிழக்கிந்தியக் கழகம்
  4. டச்சு கிழக்கிந்தியக் கழகம்

விடை : பிரெஞ்சு கிழக்கிந்தியக் கழகம்

16. யாருடைய ஆட்சி காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது.

  1. பாபர்
  2. சலீம்
  3. அக்பர்
  4. ஒளரங்கசீப்

விடை : ஒளரங்கசீப்

17. இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்த மாலுமி வாஸ்கோடகாமா ___________ நாட்டைச் சேர்ந்தவர்.

  1. முகலாய
  2. பிரெஞ்சு
  3. ஆங்கிலேய
  4. போர்ச்சுகீசிய

விடை : போர்ச்சுகீசிய

18. பெருங்காற்று புதுச்சேரியை சூறையாடிய ஆண்டு

  1. 1741
  2. 1736
  3. 1717
  4. 1745

விடை : 1745

19. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்பட்டவர்

  1. சாமுவேல்
  2. ஆனந்தரங்கர்
  3. துய்ப்ளே
  4. இராபர் கிளைவ்

விடை : ஆனந்தரங்கர்

குறு வினா

1. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தையென அழைக்கப்படுபவர் யார்?

சாமுவேல் பெப்பிசு

2. முகலாய மன்னர் கால நாட்குறிப்புப் பற்றி அறியும் செய்திகள் யாவை?

  • முகலாய மன்னர்களுள் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்துள்ளது.
  • ஒளரங்கசீப் ஆட்சியின் போது இம்முறை தடை செய்யப்பட்டது.

3. நாட்குறிப்பு என்பது என்ன?

  • ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையோ, பணிகளையோ பதிவு செய்யும் ஏடு நாட்குறிப்பு எனப்படும்.

4. டைரி என்பதன் மூலச்சொல் யாது?

இலத்தீன் மொழியின் மூலச்சொல்லான “டைஸ் என்பதில் உருவான “டைரியம்” என்பது “டைரி”க்கு மூலச்சொல் ஆகும்.

5. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எதனைப் பற்றி அறியும் வரலாற்றுக் கருவூலமாக திகழ்கிறது?

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாக திகழ்கிறது.

6. ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் எவற்றை பதிவு செய்துள்ளார்?

தமிழ்நாட்டின் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைத் ஆனந்தரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

7. ஆனந்தரங்கர் எதற்கு பின் செய்திகளை எழுதியுள்ளார்?

ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றை குறப்பிட்ட பின் செய்திகளை எழுதியுள்ளார்.

8. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் சிறப்பு யாது?

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 12 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன.
  • ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றை குறப்பிட்ட பின் செய்திகளை எழுதியுள்ளார்.
  • ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பே இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • இவரின் நாட்குறிப்பு தென்னிந்தியாவின் 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகின்றன
  • சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழ்கின்றன.

9. ஆனந்தரங்கர் இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படக் காரணம் என்ன?

  • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சாமுவேல் பெப்பிசு ஆவார்
  • இவர் ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றியவர்
  • இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளை இவர்
  • நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இதுவே முதல் நாட்குறிப்பு
  • இவரைப் போல ஆனந்தரங்கரும் தம் கால நிகழ்வுகளை, நாட்குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இந் நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • எனவே இந்தியாவின் பெப்பிசு என ஆனந்தரங்கர் அழைக்கப்பட்டார்.

10. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி உ.வே.சா, மகாகவி பாரதியார் கூறியவை பற்றி எழுதுக

உ.வே.சா-வின் கருத்து

நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரிசீல் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன

மகாகவி பாரதியாரின் கருத்து

அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்

Leave a Comment