Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 Malaigal Ida Peyargal Book Back Solution

இயல் 3.1 – மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.1 ‘Malaigal Ida Peyargal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.1 மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.1 Malaigal Ida Peyargal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Malaigal Ida Peyargal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: புணர்ச்சி விதிகள்

பலவுள் தெரிக

கூற்று : கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை பொருள்களும் உண்டு

  1. கூற்று சரி, விளக்கம் தவறு
  2. கூற்று சரி, விளக்கமும் சரி
  3. கூற்று தவறு, விளக்கம் சரி
  4. கூற்று தவறு, விளக்கம் தவறு

விடை : கூற்று சரி, விளக்கமும் சரி

குறு வினா

கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் சொல், கோட்ட, கோடு, கோண்டே, க்வாட் என எடுத்தாளப்பட்டுள்ளது

சிறு வினா

மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க?

  • மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை
  • மலைநிலத்தைத் தமிழ் இலக்கியம் “குறவஞ்சி” என்றே குறிப்பிடுகிறது.
  • திராவிடர்களைக் கமில் சுவலபில், “மலைநில மனிதர்கள்” என்கிறார்.
  • இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
  • பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகளை ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
  • அவை பழங்குடியினரின் மலை சார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலை தருகின்றன.

நெடு வினா

இயற்கையோடு இயைந்த வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன கூற்றினை மெய்பிக்க

மனிதன் தோன்றிது மலைநிலம்

  • மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும், தமிழரின் பண்டைப் பதிவுகள், கடவுளையும், மலையையும் வாழ்வில் தொடர்புபடுத்துவனவாக விளங்குகின்றன.
  • மலை, தமிழ் இலக்கியங்களில் “குறவஞ்சி” எனக் குறிக்கப்படுகிறது. திராவிட இனக்குழுப் பெயர்கள், மலைசார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
  • இயற்கையோடு இயைந்த வாழ்வு
  • பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். தம் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் நீர் எடுத்துப் பருகினர்.
  • மலை உச்சியில் அமைந்த பழங்குடித் தலைவரின் வீடு, வாழ்விட வடிவமைப்பு வாழ்வியல் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தை காட்டுகின்றன.

சொல்வழக்கு

  • சிந்துவெளி, திராவிட மலைவாழ் மக்களின் அன்றாடப் புழங்கு சொற்களின் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கதாகும்.
  • தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை, மலா, மலே என்னும் செற்கள் வழங்குகின்றன.
  • “மலை”, “குன்று” என்னும் சொல்லாட்சி, மலை சார்ந்த மக்களிடம் வழங்குகிறது சிறப்பாகும்.

கோட்டை

“கோட்டை” என்னும் சொல், செயற்கையான காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியல் தோன்றின என்பதை விட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை

மலைப் பெயர்களின் நீட்சி

  • வடமேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட சான்றுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக உள்ளன. அப்பகுதியில் திராவிடர் வாழ்ந்த சான்றுகளை உறுதி செய்கின்றன.
  • இவற்றால், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வினால் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தமை புலப்படும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மலை இடப்பெயர்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மனித சமூகத்தின் ஆதி நிலம் _________

  1. காடு
  2. மலை
  3. வயல்
  4. பாலைவனம்

விடை : மலை

2. பொருத்தமில்லாதவைக் கண்டறி

  1. மலை – குறிஞ்சி
  2. காடு – முல்லை
  3. வயல் – மருதம்
  4. கடல் – பாலை

விடை : கடல் – பாலை

3. Orology என்பது _____________ பற்றிய ஆய்வு

  1. தாவரங்கள், விலங்குகள்
  2. மலைகள், குன்றுகள்
  3. ஆறுகள், கடல்கள்
  4. பறவைகள், வண்டுகள்

விடை : மலைகள், குன்றுகள்

4. திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தவர்கள்

  1. கால்டுவெல்
  2. கமல்சுவலபில்
  3. மாக்ஸ்முல்லர்
  4. சீகன் பால்க்

விடை : கமல்சுவலபில்

5. சேயோன் மேய மைவரை உலகம் என்று குறிப்பிடும் நூல்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. தொல்காப்பியம்
  4. பரிபாடல்

விடை : தொல்காப்பியம்

6. கர்நாடகத்தை சார்ந்த இனம்

  1. மல பணிக்கர்
  2. மலயன்
  3. மல வேடா
  4. மலேரு

விடை : மலேரு

7. விண்பெரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ என்னும் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. நற்றிணை
  2. திருமுருகாற்றுப்படை
  3. தொல்காப்பியம்
  4. பரிபாடல்

விடை : திருமுருகாற்றுப்படை

8. கோட்டா இனமக்கள் வாழும் இடம்

  1. நீலகிரி
  2. பாலக்காடு
  3. இடுக்கி
  4. ஆந்திரப்பிரதேசம்

விடை : நீலகிரி

9. கொண்டாதேரா இனமக்கள் வாழும் மாநிலம்

  1. தமிழ்நாடு
  2. ஆந்திரப்பிரதேசம்
  3. ஜாரக்கண்ட்
  4. சிக்கிம்

விடை : ஆந்திரப்பிரதேசம்

10. பால் எருமைக் கொட்டில்களை ____________ புனித இடமாக கருதுகின்றன

  1. குறும்பர்
  2. ஜதாப்பு
  3. கோட்டா
  4. தோடர்

விடை : தோடர்

11. கடையெழு வள்ளல்கள் ________ வாழ்ந்து வந்தனர்

  1. பாலை
  2. மலை
  3. காடு
  4. தீவு

விடை : மலை

12. வீடுகளில் மேடைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுத்தோர்

  1. குறும்பர்
  2. தோடர்
  3. ஜதாப்பு
  4. கோட்டா

விடை : தோடர்

13. குறும்பர்களில் தாழ்வாரத்தை _________ எனக் குறிப்பிட்டனர்

  1. மெட்டு
  2. மொட்டு
  3. காடு
  4. கோடு

விடை : மெட்டு

14. மலை என்னும் திராவிடச் சொல் வடமொழியில் __________ எனவும் வழங்கப்படுகிறது.

  1. நுனி
  2. மலய
  3. வரை
  4. அடி

விடை : மலய

15. கேரள மாநிலத்தின் ________ மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன

  1. 8
  2. 10
  3. 12
  4. 9

விடை : 10

16. வரை என்ற சொல்லின் பொருள்

  1. நுனி
  2. முதல்
  3. விளிம்பு
  4. அடி

விடை : வரை

17. காவல்மிகு காப்பரண் கொண்ட மதில் சூழந்த கட்டமைப்பு ________  என கூறப்பட்டது.

  1. தோணிமலை
  2. மலையரண்
  3. காட்டரண்
  4. கோட்டை

விடை : கோட்டை

18. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு கட்டுரை இடம் பெற்றுள்ள நூல்

  1. கொற்கை, வஞ்சி, தொண்டி வளாக ஆய்வு
  2. சிந்துவெளிப் பண்பாட்டின்  திராவிட அடித்தளம்
  3. அன்புள்ள அம்மா
  4. சிறகுக்குள் வானம்

விடை : சிந்துவெளிப் பண்பாட்டின்  திராவிட அடித்தளம்

குறு வினா

1. மலை, கோட்டை என்னும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள திராவிட இனப்பெயர்கள் யாவை?

  • மால் பஹாடியா – ஜார்கண்ட்
  • மல அரயன் – மேற்குத்தொடர்ச்சி மலைகள் – (கேரளம்)
  • மல குறவன் – நெடுமங்காடு (கேரளம்)
  • மல மூத்தன் – எர்நாட் (கேரளம்)
  • மல கணிக்கர் – வட கேரளம்
  • மலயன் – பாலக்காடு (கேரளம்)
  • மல வேடா – இடுக்கி (கேரளம்)
  • மலேரு – தட்சிண கன்னா (கர்நாடகம்)
  • கோட்டா – நீலகிரி (தமிழ்நாடு)
  • கொண்டா தோரா – ஆந்திரப்பிரதேசம்
  • கோண்டு, கொய்ட்டெர் – ஒடிஸா

2. வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப்பெயர்கள் அட்டவணைப்படுத்துக

மலை

  • உத்திராஞ்சல் – சமோலி
  • ஜார்கண்ட் – கும்லா
  • உத்திரப்பிரதேசம் – ஜவுன்பூர்

வரை

  • குஜராத் – வல்ஸ்ட்
  • மஹாராஷ்டிரா – தாணே
  • ஹிமாசலப்பிரதேசம் – காங்க்ரா

மலா

  • பஞ்சாப் – ஜலந்தர்
  • ராஜஸ்தான் – அஜ்மீர்
  • கர்நாடகம் – உடுப்பி

 

Leave a Comment