இயல் 4.4 – தொல்காப்பியம்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 4.4 ‘Tholkappiyam’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 4.4 தொல்காப்பியம்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 4.4 Tholkappiyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.
தொல்காப்பியம் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Tholkappiyam’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
நூல் வெளி
- நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
- இதன் ஆசிரியர் தொல்காப்பியர்
- இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது.
- தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களை கொண்டுள்ளது.
- தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.
- அவர்களுள் பழைமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர்.
- நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரை விளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுளளது.
சொல்லும் பொருளும்
- இக்கும் – நீக்கும்
- இழுக்கு – குற்றம்
- வினாயவை – கேட்டவை
இலக்கணக் குறிப்பு
- அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்
- நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
விடுத்தல் = விடு+ த் + தல்
- விடு- பகுதி
- த் – சந்தி
- தல் – தொழில்பெயர் விகுதி
அறிந்து = அறி + த்(ந்) + த் + உ
- அறி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
புணர்ச்சி விதிகள்
இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” விதிப்படி இழுக்க் + இன்றி என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இழுக்கின்றி என்றாயிற்று.
முறையறிந்து = முறை + அறிந்து
- “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி முறை + ய் + அறிந்து என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி முறையறிந்து என்றாயிற்று.
பலவுள் தெரிக
தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை
- 9
- 3
- 27
- 2
விடை : 27
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “தொல்காப்பியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. நமக்கு கிடைத்த பழமையான இலக்கண நூல்
- நன்னூல்
- அகத்தியம்
- வீரகோழியம்
- தொல்காப்பியம்
விடை : தொல்காப்பியம்
2. தொல்காப்பியம் இலக்கண நூலின் ஆசிரியர்
- தண்டி
- அகத்தியர்
- தொல்காப்பியர்
- பவணந்தி அடிகள்
விடை : தொல்காப்பியர்
3. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்
- இளம்பூரணர், பரிமேலழகர்
- மணக்குடவர், சேனாவரையர்
- இளம்பூரணர், சேனாவரையர்
- நச்சினார்க்கினியார், பரிமேலழகர்
விடை : நற்றிணை
4. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்
- 2
- 3
- 4
- 5
விடை : 3
5. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் பொருந்தாதது
- எழுத்து
- சொல்
- பொருள்
- யாப்பு
விடை : யாப்பு
6. தொல்காப்பியத்தில் வாழ்வியல் இலக்கணத்தை __________ கூறுகிறது.
- பொருளதிகாரம்
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- யாப்பதிகாரம்
விடை : பொருளதிகாரம்
7. தொல்காப்பியம் முழுமைக்கும் ___________ உரை எழுதியுள்ளார்.
- கல்லாடனார்
- பேராசிரியர்
- இளம்பூரணர்
- சேனாவரையர்
விடை : இளம்பூரணர்
8. தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் …………. இயல்களை கொண்டுள்ளது.
- 9
- 8
- 7
- 6
விடை : 9
9. தொல்காப்பியம் முதன் முதலில் பதிப்பித்த ஆண்டு
- 1847
- 1837
- 1827
- 1817
விடை : 1847
10. இழுக்கு என்பதன் பொருள்
- நன்மை
- குற்றம்
- செயல்
- தன்மை
விடை : குற்றம்
11. கேட்போன் இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- விணையாலணையும் பெயர்
- பெயரெச்சம்
விடை : விணையாலணையும் பெயர்
12. ஆசாற்சார்ந்து பொருந்தும் புணர்ச்சி விதிகளை கூறுக
- ஈறுபோதல்
- இனமிகல்
- ணனவல் லினம்வர டறவும்
- உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்
விடை : ணனவல் லினம்வர டறவும்
குறு வினா
1. தொல்காப்பியத்தின் பழைமையான உரையாசிரியர்களை கூறுக
இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர்
2. தொல்காப்பியம் குறிப்பு வரைக?
- ஆசிரியர்: தொல்காப்பியர்
- தமிழ்மொழியில் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் மிகப்பழமையான இலக்கணநூல்
- அதிகாரங்கள்: 3 (எழுத்து, சொல், பொருள்)
- இயல்கள்: 27