இயல் இரண்டு – பராபரக்கண்ணி
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.1 ‘Barabarakani’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 2.1 பராபரக்கண்ணி
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 2.1 Barabarakani Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.
பராபரக்கண்ணி பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Barabarakani’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Barabarakani subject.
பராபரக்கண்ணி பாடல்
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! – தாயுமானவர் |
பாடலின் பொருள்
- அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
- அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
- எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.
நூல் வெளி
- பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
- திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
- இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
- இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
- இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன.
- ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
சொல்லும் பாெருளும்
- தண்டருள் – குளிர்ந்த கருணை
- கூர் – மிகுதி
- செம்மையருக்கு – சான்றோருக்கு
- ஏவல் – தாெண்டு
- பராபரமே – மேலான பொருள்
- பணி – தொண்டு
- எய்தும் – கிடைக்கும்
- எல்லாரும் – எல்லா மக்களும்
- அல்லாமல் – அதைத்தவிர
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- தம்முயிர்
- தமதுயிர்
- தம்உயிர்
- தம்முஉயிர்
விடை : தம்முயிர்
2. இன்புற்று + இருக்கை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________-
- இன்புற்றிருக்கை
- இன்புறுறிருக்கை
- இன்புற்றுஇருக்கை
- இன்புறுஇருக்கை
விடை : இன்புற்றிருக்கை
3. தானென்று என்பதனை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- தானெ + என்று
- தான் + என்று
- தா + னென்று
- தான் + னென்று
விடை : தான் + என்று
4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________
- அழிவு
- துன்பம்
- சுறுசுறுப்பு
- சோகம்
விடை : சுறுசுறுப்பு
நயம் அறிக
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனைச் சொற்கள்
- தம்உயிர்போல் – தண்டருள்
- செம்மையருக்கு – செய்வேன்
- இன்புற்று – இருக்க
- அல்லாமல் – அறியேன்
எதுகைச் சொற்கள்
- தம்உயிர் – செம்மையருக்கு
- செய்யஎனை – எய்தும்
- அன்பர்பணி – இன்பநிலை
- எல்லாரும் – அல்லாமல்
குறு வினா
1. யாருக்குத் தாெண்டு செய்ய வேண்டும்?
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும்.
2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?
அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும்.
சிறு வினா
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.
சிந்தனை வினா
குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
குளிரால் வாடுபவர்களுக்கு வீடுகள் கட்டுக் கொடுப்பேன். ஆடைகள் வாங்கிக் கொடுப்பேன். தேநீர், காபி வாங்கிக் கொடுப்பேன். பாய், போர்வை, ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, குல்லா, மப்ளர் போன்றவைகள் வாங்கிக் கொடுப்பேன். வீட்டில் அடைக்கலம் தருவேன். நெருப்பு மூட்டி குளிரைப் போக்குவேன்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “பராபரக்கண்ணி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மேலான பொருள் என பொருள் தரும் சொல்
- மிகுதி
- சான்றோருக்கு
- பராபரமே
- தொண்டு
விடை : மேலான பொருள்
2. தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் ___________ உள்ளது
- பராபரக்கண்ணி
- குயில்பாட்டு
- இன்பத்தேன்
- வளவன் பாடல்
விடை : பராபரக்கண்ணி
4. தமிழ் மொழி உபநிடதம் என்று போற்றப்படுவது _______________
- திருக்குறள்
- பராபரக்கண்ணி
- திருமந்திரம்
- திருவாசகம்
விடை : பராபரக்கண்ணி
5. கூர் என்பதனை சொல்லை குறிக்கும் சொல் _______________
- மிகுதி
- கருணை
- குறைவு
- தொண்டு
விடை : மிகுதி
6. எவ்வுயிரும் என்ற சொல்லை பிரிதெழுதக் கிடைப்பது
- எவ் + உயிரும்
- எ + வுயிரும்
- எ + உயிரும்
- எவ் + வுயிரும்
விடை : எ + உயிரும்
7. இன்பநிலை என்ற சொல்லை பிரிதெழுதக் கிடைப்பது
- இன்ப + நிலை
- இன்பம் + நிலை
- இன்பந் + இலை
- இன்ப்பம் + நிலை
விடை : இன்பம் + நிலை
8. வந்து + எய்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
- வந்தெய்தும்
- வந்துஎய்தும்
- வந்துதெய்தும்
- வந்த்எய்தும்
விடை : வந்தெய்தும்
குறுவினா
1. அற இலக்கியங்கள் உள்ளடக்கியவை எது?
அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை.
2. அற இலக்கியங்கள் விளக்குபவைகளை கூறு
அற இலக்கியங்கள் வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.
3. உலகம் முழுமைக்கும் பொதுவானவை யாவை?
நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை.
4. எது சிறந்து வாழ்வு ஆகும்?
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவற்றை நாமும் பின்பற்றி வாழ்வை வளமாக்குவோம்.
5. தாயுமானவர் எதையும் நினைக்க மாட்டேன் என்று கூறக்காரணம் யாது?
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். எனவே வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் கூறுகிறார்.
6. தாயுமானவர் பற்றி குறிப்பு எழுதுக
- பராபரக்கண்ணி என்னும் நூலை எழுதியவர் தாயுமானவர்
- திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காராகப் பணி புரிந்தவர்.
7. கண்ணி என்பது யாது?
‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.