[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 Kanmaniye Kannurangu Book Back Solution

இயல் 2.2 – கண்மணியே கண்ணுறங்கு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.2 ‘Kanmaniye Kannurangu’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 2 Chapter 2.2 கண்மணியே கண்ணுறங்கு

கண்மணியே கண்ணுறங்கு வினா விடை

On this page, you will find the question answers for the Lesson ‘Kanmaniye Kannurangu’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the lesson Kanmaniye Kannurangu.

Previous Lesson: ஆசாரக்கோவை

கண்மணியே கண்ணுறங்கு பாடல்

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோநந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!தந்தத்திலே தொட்டில் கட்டித்
தங்கத்திலே பூ இழைத்துச்
செல்லமாய் வந்து உதித்த
சேரநாட்டு முத்தேனோ!

வாழை இலை பரப்பி
வந்தாரைக் கை அமர்த்திச்
சுவையான விருந்து வைக்கும்
சோழநாட்டு முக்கனியோ!

குளிக்கக் குளம் வெட்டிக்
குலம்வாழ அணை கட்டிப்
பசியை போக்க வந்த
பாண்டிநாட்டு முத்தமிழோ!

கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு!

பாடலின் பொருள்

    தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
  • தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ!
  • குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!  கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

சொல்லும் பொருளும்

  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பார்  – உலகம்
  • பண் – இசை
  • இழைத்து – செய்து

தொகைச்சொற்களின் விளக்கம்

  • முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
  • முக்கனி – மா, பலா, வாழை
  • முத்தமிழ் – இயல், இசை, நாடகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. பாட்டி + சைத்து
  2. பாட்டி + இசைத்து
  3. பாட்டு + இசைத்து
  4. பாட்டு+சைத்து

விடை : பாட்டு + இசைத்து

2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. கண் + உறங்கு
  2. கண்ணு + உறங்கு
  3. கண் + றங்கு
  4. கண்ணு + றங்கு

விடை : கண் + உறங்கு

3. வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. வாழையிலை
  2. வாழைஇலை
  3. வாழலை
  4. வாழிலை

விடை : வாழையிலை

4. கை + அமர்த்தி என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. கைமர்த்தி
  2. கைஅமர்த்தி
  3. கையமர்த்தி
  4. கையைமர்த்தி

விடை : கையமர்த்தி

5. உதித்த என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________

  1. மறைந்த
  2. நிறைந்த
  3. குறைந்த
  4. தோன்றிய

விடை : மறைந்த

குறுவினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது.

3. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • ந்தவன் – ற்றமிழ்
  • பாட்டிசைத்து – பார்
  • ந்தத்திலே – ங்கத்திேல
  • குளிக்க – குளம்
  • ண்ணே – ண்ணுறங்கு

சிறுவினா

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!

தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.

சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

  1. கதைகள்
  2. கதைப்பாடல்கள்
  3. பாடல்கள்
  4. பழமொழிகள்
  5. விடுகதைகள்
  6. புராணக் கதைகள்

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக.

  • நிலவே
  • ஓவியமே
  • பெருங்கடலே
  • கிளியே
  • பொன்னே
  • மாணிக்கமே
  • இரத்தினமே
  • குழலே
  • மாதுளையே
  • அமுதமே
  • அனிச்சமே
  • மழையே
  • கற்பூரமே
  • அல்லியே
  • அரும்பே
  • மணிப்புறாவே
  • சித்திரமே
  • பிடியே
  • நட்சத்திரமே
  • அன்னமே
  • பூவே
  • நந்தவனமே
  • கனியே
  • முத்தே
  • களிறே
  • சூரியனே
  • மயிலே
  • கண்ணே
  • வைரமே
  • கண்மணியே
  • தேனே
  • கரும்பே
  • பெட்டகமே
  • ஆருயிரே
  • முகிலே
  • தெய்வமே
  • மல்லியே
  • கனிச்சாறே
  • மாடப்புறாவே
  • மரகதமே
  • வைடூரியமே
  • மாம்பழமே
  • அழகே
  • தென்றலே
  • ரோஜாவே
  • தாமரையே

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் ஆறாம் வகுப்பு “கண்மணியே கண்ணுறங்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உலகம் என பொருள் தரும் சொல்லில் பொருந்தாதது

  1. வையகம்
  2. புடவி
  3. கானகம்
  4. பார்

விடை : கானகம்

2. பண் என்று பொருள் தரும் சொல்

  1. இயல்
  2. இசை
  3. நாடகம்
  4. கூத்து

விடை : இசை

3. தால் என்னும் சொல் தரும் பொருள் ____________

  1. நாக்கு
  2. கண்
  3. வாய்
  4. காது

விடை : நாக்கு

5. குழந்தையின் அழுகையை நிறுத்த பாடப்படும் பாட்டு

  1. தாலாட்டு பாடல்கள்
  2. வழிபாட்டு பாடல்கள்
  3. தொழில் பாடல்கள்
  4. விளையாட்டுப் பாடல்கள்

விடை : தாலாட்டு பாடல்கள்

7. பூஞ்சோலை என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. பூ + சோலை
  2. பூஞ் + சோலை
  3. பூச் + சோலை
  4. பூஞ்ச் + சோலை

விடை : பூ + சோலை

7. நற்றமிழ் என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. நன் + தமிழ்
  2. நன்மை + தமிழ்
  3. நற்ற + தமிழ்
  4. நல்ல + தமிழ்

விடை : பூ + சோலை

8. தால் + ஆட்டு என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. தால்லாட்டு
  2. தாலாஆட்டு
  3. தாலாட்டு
  4. தால்ஆட்டு

விடை : தால் + ஆட்டு

குறு வினா

1. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் கூறப்படும் முந்நாடுகளின் சிறப்புகளை கூறுக

  • சேரநாடு – முத்து
  • சோழ நாடு – முக்கனி
  • பாண்டிய நாடு – முத்தமிழ்

2. முத்தமிழ் என்பவை யாவை?

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

சிறு வினா

1. தாலாட்டு – குறிப்பு வரைக

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள். நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு

2. முத்தேன், முக்கனி, முத்தமிழ் தொகைச்சொற்களின் விளக்கத்தை கூறு

  • முத்தேன் : கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
  • முக்கனி : மா, பலா, வாழை
  • முத்தமிழ் : இயல், இசை, நாடகம்

6th Tamil Text Books Pdf

Leave a Comment