[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 Tamilar Peruvila Book Back Solution

இயல் 2.3 – தமிழர் பெருவிழா

In this post, we present the answers to the lesson “தமிழர் பெருவிழா”. We have categorized the questions into one mark, two marks, and big marks and provided answers for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.3 ‘Tamilar Peruvila’.

This “தமிழர் பெருவிழா” lesson detailedly explains the culture of Tamil Peoples and also Pictrized Tamil festivels like பொங்கல், போகிப்பண்டிகை and so on.

தமிழர் பெருவிழா வினா விடைகள்

On this page, you will find the question answers for Lesson ‘Tamilar Peruvila’, the Seventh lesson of class 6 Tamil. In addition, there are more questions available that pertain to the topic of Tamilar Peruvila.

Previous Lesson: கண்மணியே கண்ணுறங்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.

  1. அறுவடை
  2. உரமிடுதல்
  3. நடவு
  4. களையெடுத்தல்

விடை : அறுவடை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

  1. செடி
  2. கொடி
  3. தோரணம்
  4. அலங்கார வளைவு

விடை : தோரணம்

3. பொங்கல்+ அன்று என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. பொங்கலன்று
  2. பொங்கல்அன்று
  3. பொங்கலென்று
  4. பொங்கஅன்று

விடை : பொங்கலன்று

4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. போகி + பண்டிகை
  2. போ+பண்டிகை
  3. போகு + பண்டிகை
  4. போகிப்+பண்டிகை

விடை : போகி + பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும்.

  1. புதியன
  2. புதுமை
  3. புதிய
  4. புதுமையான

விடை : புதியன

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.

  1. அயர்வு
  2. கனவு
  3. துன்பம்
  4. சோர்வு

விடை : துன்பம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ. பொங்கல்

விடை : பொங்கல் விழாவில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்

ஆ. செல்வம்

விடை : உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,

இ. பண்பாடு 

விடை : தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது

குறு வினா

1. பாேகிப் பண்டிகை எதற்காகக் காெண்டாடப்படுகிறது?

  • “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ஆன்றாேர் மாெழி. வீட்டில் உள்ள பயனற்ற பாெருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் பாேகித் திருநாள்.
  • இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
  • ஆகவே வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்?

மாடுகள் உழவர்களின் செல்வமாக விளங்குவதினாலும், உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் இருப்பதனாலும் உழவர்கள் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்.

சிறு வினா

1. காணும் பாெங்கலை மக்கள் எவ்வாறு காெண்டாடுகின்றனர்?

  • மாட்டுப் பாெங்கலுக்கு அடுத்த நாள் காணும் பாெங்கல் ஆகும்.
  • மக்கள் இந்நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் விடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்;
  • குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பாெழுதைக் கழிப்பர்;
  • மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்;
  • விளையாட்டுப் பாேட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

சிறு வினா

1. பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?

பொங்கல் விழாவின்போது எங்கள் ஊரில் நகைச்சுவை பட்டிமன்றம், விவாத மேடை, உரியடி விழா, மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுதல், பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, இளையோர்க்கான விளையாட்டுப் போட்டி, மூத்தோர்களுக்கான விளையாட்டுப் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், ஏறுதழுவுதல், வினாடி-வினா, மாட்டுவண்டி பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், கரகாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம்.

2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?

இன்றைய உலகம் அறிவியல் உலகம். தகவல் தொழில் நுட்பத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகம். சக மனிதர்களைக் கண்டு கொள்ளவோ, உரையாடவோ நேரம் இல்லா உலகம். அவற்றோடு சேர்ந்து மனிதனும் வேகமாக ஓடுகின்றான். தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கூட உரையாட நேரமில்லா மனிதன். ஓர் எந்திர வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவே மாறிவிட்டோம்.

அப்படி இருக்கும் போது, காணும் பொங்கல் நாளில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து உரையாடும்போதும், வீடுகளுக்குச் சென்று உறவாடும் போதும் கட்டாயம் ஒற்றுமை வளரதானே செய்யும். உறவாடும் தங்களது பழைய நினைவுகளையும் மகிழ்சசியானத் தருணங்களையும் நினைக்கும்போது பகிரும்போதும் உறவு மேம்படுகிறது. ஒற்றுமை வளர்கிறது. பல உறவுகளும் அறிமுகமாகின்றது. கலை நிகழ்ச்சிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறது. போட்டி உணர்வு குறைந்து குழு உணர்வு ஏற்படுகிறது. விரும்பிய இடங்களுக்கு செல்லும்போது பல உறவுகள் அறிமுகமாகின்றன. நட்புறவும் ஏற்படுகிறது. பெரியோர்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. ஆகவே காணும் பொங்கல் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் ஆறாம் வகுப்பு “தமிழர் பெருவிழா” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. லோரி திருவிழா கொண்டப்படும் மாநிலம்

  1. ஆந்திரம்
  2. கர்நாடகம்
  3. மகாராஷ்டிர்ம்
  4. பஞ்சாப்

விடை : பஞ்சாப்

2. மாடு பிடித்தல் – வேறு பெயர்

  1. ஏறு நழுவுதல்
  2. ஏறு பிடி
  3. ஏறு தழுவுதல்
  4. ஏறு விரட்டு

விடை : ஏறு தழுவுதல்

3. தை முதல் நாள் ______________ திருவிழா கொண்டாடப்படுகிறது

  1. பொங்கல்
  2. மாட்டு பொங்கல்
  3. போகிப்பண்டிகை
  4. திருவள்ளுவர் தினம்

விடை : பொங்கல்

4. கோலமிடுவர் என்பதனை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. கோலம் + மிடுவர்
  2. கோல + இடுவர்
  3. கோல + மிடுவர்
  4. கோலம் + இடுவர்

விடை : கோலம் + இடுவர்

5. இலையிட்டு என்பதனை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. இலை + யிட்டு
  2. இலை + இட்டு
  3. இலைய் + இட்டு
  4. இலையி + ட்டு

விடை : இலை + இட்டு

6. நன்றியோடு என்பதனை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. நன்றி + ய்யோடு
  2. நன்றி + ஓடு
  3. நன்றி + யோடு
  4. நன்றிய் + ஓடு

விடை : நன்றி + ஓடு

7.  _____________ தமிழர் திருநாள் என போற்றப்படுவது

  1. போகிப்பண்டிகை
  2. பொங்கல் விழா
  3. மாட்டுப் பொங்கல்
  4. காணும் பொங்கல்

விடை : பொங்கல் விழா

8. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா

  1. போகிப்பண்டிகை
  2. தீபாவளி
  3. பங்குனி உத்திரம்
  4. பொங்கல் விழா

விடை : பொங்கல் விழா

9. பாெ.ஆ.மு. 31-ல் பிறந்தவர்

  1. ஒளவையார்
  2. ஒட்டக்கூத்தர்
  3. திருவள்ளுவர்
  4. காவற்பெண்டு

விடை : திருவள்ளுவர்

10. மாடு என்ற சொல்லின பொருள்

  1. வளையம்
  2. அணிகலன்
  3. செல்வம்
  4. கலன்

விடை : செல்வம்

குறு வினா

1. மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு எவ்வாறு கூறுவர்?

மஞ்சுவிரட்டு

2. மஞ்சுவிரட்டு விளையாட்டினை குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?

மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்

3. பொங்கல் விழா எவ்வாறு விளங்குகிறது?

பொங்கல் விழாவானது இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றை போற்றும் விதமாக விளங்குகிறது

4. அக்காலத்தில் போகிப்பண்டிகை எவ்விழாவாக கொண்டாடினார்கள்?

அக்காலத்தில் போகிப்பண்டிகையை இந்திர விழாவிவாக கொண்டாடினார்கள்

5. மகரசங்கராந்தி கொண்டாடப்படும் மாநிலங்களை கூறுக

ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம்

6.குஜராத்தில் பொங்கல் விழா எப்பெயரில் கொண்டாடப்படுகிறது?

குஜராத்தில் பொங்கல் விழா உத்தராயன் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

6th Tamil Text Books Pdf

Leave a Comment