இயல் 2.5 – மயங்கொலிகள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.5 ‘Mayangoligal‘. Here, you’ll find solutions to all the GRAMMER topics from the 6th Standard Tamil Book Term 2 Lesson 2.5 மயங்கொலிகள் / Mayangoli Ezhuthukal.
மயங்கொலிகள் வினா விடை
The lesson “மயங்கொளிகள்” holds a significant place as one of the fundamental and important aspects of Tamil literature. If you aspire to write Tamil without errors, it’s imperative to have a deep understanding of the topic of “Mayangoli Sorkal.” In this context, we have compiled a set of question-answers pertaining to the lesson ‘Mayangoligal’. Let’s take a look.
Previous Lesson: மனம் கவரும் மாமல்லபுரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சிரம் என்பது ______________ (தலை / தளை)
விடை : தலை
2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை)
விடை : தழை
3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை)
விடை : காளை
4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை)
விடை : பரவை
5. பறவை வானில் ______________ (பரந்தது / பறந்தது)
விடை : பறந்தது
6. கதவை மெல்லத் ______________ (திரந்தான் / திறந்தான்)
விடை : திறந்தான்
7. பூ ______________ வீசும். (மணம் / மனம்)
விடை : மணம்
8. புலியின் ______________ சிவந்து காணப்படும். (கன் / கண்)
விடை : கண்
9. குழந்தைகள் ______________ விளையாடினர். (பந்து / பன்து)
விடை : பந்து
10. வீட்டு வாசலில் ______________ போட்டர். (கோளம் / கோலம்)
விடை : கோலம்
மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக
1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
விடை: என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.
விடை: தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.
3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
விடை: வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
குறுவினாக்கள்
1. மயங்கொலி எழுத்துகள் யாவை?
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
- ண, ன, ந
- ல, ழ, ள
- ர, ற
ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
2. ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக
எழுத்து | பிறக்கும் முறை |
ண | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. |
ன | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. |
ந | நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. |
மொழியை ஆள்வோம்
பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க
முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்து கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவை கொண்டாடுவான்
(எ. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?
- முகிலன் தாத்தா வீட்டிற்கு சென்றதன் காரணம் யாது?
- தாத்தா வீட்டில் முகிலனுக்கு மிகவும் பிடித்தது எது?
- தாத்தா வீட்டின் பின்புறம் என்ன இருந்தது?
- முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?
- முகிலன் யாருடன் பொங்கல் விழாவினை கொண்டாடினான்?
சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக
- கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
- மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
- கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
- மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
விடை – கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
உரையாடலை நிரப்புக
செல்வன் : வாங்க மாமா, நல்மாக இருக்கின்றீர்களா?
மாமா : நலமாக உள்ளேன். நீ எப்படி இருக்கிறாய்?
செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.
மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?
செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள் மாமா
மாமா : அப்படியா, நீ எப்படி படிக்கிறாய்?
செல்வன் : நன்றாக படிக்கிறேன் மாமா.
மாமா : நாளை சுதந்திர தின விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வன் : ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா : வெற்றி பெற வாழ்த்துக்கள்
செல்வன் : நன்றி மாமா
நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக
இன்பம் கொடுப்பது நட்பு
அன்பை அளிப்பது நட்பு
உறவை வளர்ப்பது நட்பு
உலகில் உயர்ந்தது நட்பு
மொழியோடு விளையாடு
கீழே உள்ள சொற்களைச் சேர்த்து புதிய சொற்களை உருவாக்கு
உண்டு
- கல் + ல் + உண்டு = கல்லுண்டு
- பல் + ல் + உண்டு = பல்லுண்டு
- மின் + ல் + உண்டு = மின்னுண்டு
- மண் + ல் + உண்டு = மண்ணுண்டு
இல்லை
- கல் + ல் + இல்லை = கல்லில்லை
- பல் + ல் + இல்லை = பல்லில்லை
- மின் + ல் + இல்லை = மின்னில்லை
- மண் + ல் + இல்லை = மண்ணில்லை
கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக
க | த | ஞ் | சா | வூ | ர் | மா |
ன் | மி | டு | கா | ற் | ஏ | ம |
னி | க | ல் | ல | ணை | ல் | ல் |
யா | மை | ளி | ரு | சு | ம் | ல |
கு | ற் | றா | ல | ம் | டி | ப |
ம | து | ரை | க | ரு | ட் | ர |
ரி | சி | ஞ் | செ | அ | ஊ | ம் |
விடை:-
குற்றாலம், ஊட்டி, செஞ்சி, கல்லணை, கன்னியாகுமரி, மாமல்லபுரம், மதுரை, சுருளி, ஏற்காடு, தஞ்சாவூர்
நிற்க அதற்குத் தக…
தமிழ்ச்சொல் அறிவோம்
- நல்வரவு – Welcome
- ஆயத்த ஆடை – Readymade Dress
- சிற்பங்கள் – Sculptures
- ஒப்பனை – Makeup
- சில்லுகள் – Chips
- சிற்றுண்டி – Tiffin
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் ஆறாம் வகுப்பு “மயங்கொலி எழுத்துக்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
1. மயங்கொலி எழுத்துகள் எத்தனை உள்ளன?
மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எட்டு உள்ளன
ண, ன, ந, ல, ழ, ள, ர, ற
2. ண, ன இடம் பெறும் வகை பற்றி எழுதுக
“ட” என்னும் எழுத்துக்கு முன் “ண்” வரும்
எ.கா.: கண்டம், வண்டி, நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
எ.கா. : மன்றம், நன்றி, கன்று
3. இலை, இளை, இழை – பொருள் வேறுபாடு கூறுக.
- இலை – செடியின் இலை
- இளை – மெலிந்து போதல்
- இழை – நூல் இழை
4. விலை, விளை, விழை – பொருள் வேறுபாடு கூறுக.
- விலை -பொருளின் மதிப்பு
- விளை – உண்டாக்குதல்
- விழை – விரும்பு
5. ஏரி, ஏறி – பொருள் வேறுபாடு கூறுக.
- ஏரி – நீர்நிலை
- ஏறி – மேலே ஏறி
6. கூரை, கூறை – பொருள் வேறுபாடு உணர்க.
- கூரை – வீட்டின் கூரை
- கூறை – புடவை
7. வாணம், வானம் – பொருள் வேறுபாடு அறிக.
- வாணம் – வெடி
- வானம் – ஆகாயம்
8. பணி, பனி – பொருள் வேறுபாடு அறிக.
- பணி – வேலை
- பனி – குளிர்ச்சி