[Term-2] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.1 Moothurai Book Back Solution

இயல் 1.1 – மூதுரை

Hello, students! We warmly welcome you to our comprehensive guide on Samacheer Kalvi 6th Tamil Chapter 1.1, titled ‘Moothurai.’ This guide contains solutions to all the questions presented in the 6th Standard Tamil Book Term 2 Lesson 1.1, மூதுரை. We hope you find it helpful.

மூதுரை வினா விடை

On this page, you will find the question answers for the Lesson ‘Moothurai ‘ which is the first lesson of Term 2 Class 6 Tamil. Additionally, you can also access extra questions related to the lesson Moothurai.

Previous Lesson: இன்பத்தமிழ்

மூதுரை பாடல்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லோல் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு

ஒளவையார்

பாடலின் பொருள்

  • மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

ஆசிரியர் குறிப்பு

  • மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார்
  • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

நூல் குறிப்பு

  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
  • சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

சொல்லும் பொருளும்

  • மாசற – குறைஇல்லாமல்
  • சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
  • தேசம் – நாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.

  1. மேலோட்டமாக
  2. மாசற
  3. மாசுற
  4. மயக்கமுற

விடை : மாசற

2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. இடம் + மெல்லாம்
  2. இடம் + எல்லாம்
  3. இட + எல்லாம்
  4. இட + மெல்லாம்

விடை : இடம் + எல்லாம்

3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. மாச + அற
  2. மாசு + அற
  3. மாச + உற
  4. மாசு + உற

விடை : மாசு + அற

4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. குற்றமில்லாதவர்
  2. குற்றம்இல்லாதவர்
  3. குற்றமல்லாதவர்
  4. குற்றம் அல்லாதவர்

விடை : குற்றமில்லாதவர்

5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. சிறப்புஉடையார்
  2. சிறப்புடையார்
  3. சிறப்படையார்
  4. சிறப்பிடையார்

விடை : சிறப்புடையார்

குறுவினா

கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

  • மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

சிந்தனை வினா

1. கல்லாதவர்க்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக

  • மனிதனுக்குக் கல்வி கண் போன்றது. கண் இல்லை என்றால் இவ்வுலகமே இருள் மயமாகி விடும். கற்றவரே கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்.
  • கல்லாதவர் விலங்களுக்கும், மரத்துக்கும் ஒப்பாவார்
  • கல்லாதவரால் நாட்டிற்கு பயனில்லாமல் போகும்
  • கல்லாதவரை பெற்றோர்கள். உடன் பிறந்தோர், மனைவி, தம்மக்கள், உற்றார் உறவினர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், ஊரார் மதிக்கமாட்டார்கள்.

2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

  • அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்கச் செய்வது கல்வியே. கல்வியால் மனிதன் விண்ணையும் மண்ணையும்  அளக்க அறிநது கொண்டான்.
  • இன்றைய உலகில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிய வண்ணமாக உள்ளன. ஒருவனுக்குள் புதைந்து கிடைக்கும் அறியாமையைத் தோண்டி எடுப்பதே கல்வியாகும்.
  • உள்ளத்தை அறிவான் நிலப்பி ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதனாக வாழந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.

Go to Homepage click here

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மூதுரை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆத்திச்சூடி நூலின் ஆசிரியர் ________________

  1. பாரதியார்
  2. ஒளவையார்
  3. நெல்லை சு.முத்து
  4. பாரதிதாசன்

விடை : ஒளவையார்

2. மன்னன் – வேறு பெயர்

  1. சோ
  2. கா
  3. சே
  4. கோ

விடை : கோ

3. மூதுரையின் பாடல்கள் எண்ணிக்கை

  1. 32
  2. 31
  3. 131
  4. 132

விடை : 31

4. மன்னனை விட சிறந்தவர்.

  1. மக்கள்
  2. கற்றவர்கள்
  3. புலவர்கள்
  4. அமைச்சர்கள்

விடை : கற்றவர்கள்

5. இடமெல்லாம் என்பதனை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. இட + மெல்லாம்
  2. இடம் + எல்லாம்
  3. இடமெ + எல்லாம்
  4. இடம் + மெல்லாம்

விடை : இடமெல்லாம்

5. சிறப்பில்லை என்பதனை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. சிறப்ப + இல்லை
  2. சிறப்பு + இல்லை
  3. சிறப் + பில்லை
  4. சிறப் + இல்லை

விடை : சிறப்பு + இல்லை

குறுவினா

1. மூதுரை என்பதன் பொருள் யாது?

மூத்தோர் கூறும் அறிவுரை

2. ஒளவையார் எழுதிய நூல்களை கூறுக

  • மூதுரை
  • ஆத்திச்சூடி
  • கொன்றை வேந்தன்
  • நல்வழி

6th Tamil Text Books Pdf

Leave a Comment