தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.5 ‘Tamil Ezhuthukalin Vagai Thogai’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 1.5 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
எழுத்துக்களின் வகை தொகை
எழுத்துக்களின் வகை | எண்ணிக்கை |
உயிர் எழுத்துக்கள் | 12 |
மெய் எழுத்துக்கள் | 18 |
உயிர் மெய் எழுத்துக்கள் | 216 |
ஆய்த எழுத்து | 01 |
மொத்தம் | 247 |
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் பாட வினா விடைகள் 2024
On this page, you will find the question answers for the Lesson ‘ Tamil Ezhuthukalin Vagai Thogai’ which is the fifth lesson of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamil Ezhuthukalin Vagai Thogai lesson.
மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அது
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்
விடை : தீ
3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல்
விடை : கண்டேன்
4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
விடை : நண்பகல்
5. 4 மாத்திரை அளவுள்ள இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
விடை : வாழ்த்து
6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
விடை : அஃது
சிறு வினாக்கள்
1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
2. உயிர்மெய் எழுத்துகளை எத்தனை வகைப்படுத்தலாம்?
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க்குறில் தோன்றுகிறது.
- மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
- உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்
3. எழுத்தை ஒலிக்கும் காலஅளவு வகைப்படுத்துக
- குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை
- மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு – ½ மாத்திரை
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு½ மாத்திரை
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஒலி வடிவாக எழுதப்டுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எனப்படுகிறது.
விடை : எழுத்து
2. குறுகி ஒலிக்கும் ____________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
விடை : அ, இ, உ, எ, ஒ
3. நீண்டு ஒலிக்கும் _________________ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
விடை: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
4. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ________________
விடை: அரை மாத்திரை
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு சொல்வது
- விரிவாகச்
- சுருங்கச்
- பழமையைச்
- பல மொழிகளில்
விடை: சுருங்கச்
2. நோயற்ற வாழ்வைத் தருவது ________________
விடை: சுத்தம்
3. உடல் ஆரோக்கியமே அடிப்படை ________________
விடை: உழைப்பு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை, உறைவிடம்
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
சுத்தம்
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை: எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
விடை: பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க
மொழியோடு விளையாடு
திரட்டுக
“மை” என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.
- உண்மை
- பொய்மை
- பெண்மை
- மெய்மை
- வெண்மை
- நேர்மை
- கருமை
- பொறுமை
- மேன்மை
- பன்மை
கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக
1. கரும்பு
விடை: கரு, கம்பு
2. கவிதை
விடை: கவி, விதை, கதை
3. பதிற்றுப்பத்து
விடை: பதி, பத்து, பற்று, துதி
4. பரிபாடல்
விடை: பரி, பாடல், பாரி, பல்,பால்
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)
விண்மீன் | கண்மணி |
மணிமாலை | எழுதுகோல் |
நீதிநூல் | தமிழ்மொழி |
விண்வெளி | நீதிமொழி |
தமிழ்மாலை | விண்மீன் |
தமிழ்மாலை | தமிழ்நூல் |
நீதிமணி | நீதிமாலை |
மணிமொழி | தமிழ்வெளி |
மீன்கண் |
பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு
1. ________________ தருவது தமிழ்
விடை : அன்பு
2. ________________ தருவது தமிழ்
விடை : ஏற்றம்
3. ________________ தருவது தமிழ்
விடை : இன்பம்
4. ________________ இல்லாதது தமிழ்
விடை : ஈடு
5. ________________ தருவது தமிழ்
விடை : ஆற்றல்
6. ________________ தருவது தமிழ்
விடை : ஊக்கம்
7. ________________ வேண்டும் தமிழ்
விடை : என்றும்
8. ________________ தருவது தமிழ்
விடை : உணர்வு
கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க
பா | ர | தி | தா | ச | ன் | க |
ர | ம | தா | ர | சு | ச | ம் |
தி | ரு | வ | ள் | ளு | வ | ர் |
யா | பா | தை | ஒள | வை | யா | ர் |
ர் | ன் | ச | தா | ணி | வா | ன் |
- பாரதிதாசன்
- பாரதியார்
- திருவள்ளளுவர்
- ஒளவையார்
- வாணிதாசன்
- கம்பர்
கலைச்சொல் அறிக
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
குறுவினா
1. உயிர் எழுத்துக்கள் பிறப்பது எப்படி?
இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.
2. மெய் எழுத்துகள் என்றால் என்ன?
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்
3. மெய் எழுத்துகளின் வகைகளை கூறுக?
- வல்லினம் – க், ச், ட், த், ப், ற்
- மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள்
4. உயிர்மெய் எழுத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன?
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
5. ஆய்த எழுத்து என்பது யாது?
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
6. எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவுகளை கூறுக?
- குறில் எழுத்து – 1 மாத்திரை
- நெடில் எழுத்து – 2 மாத்திரை
- ஆய்த எழுத்து – ½ மாத்திரை