இயல் 3.4 – உழைப்பே மூலதனம்
Hello students! Welcome to our guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.4 ‘Ulaippe Moolathanam’. Here you will find answers to all questions from the 6th Standard Tamil Book Term 2 Lesson 3.4, உழைப்பே மூலதனம்.
உழைப்பே மூலதனம் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Ulaippe Moolathanam’. Additionally, you can also access additional questions related to the lesson Ulaippe Moolathanam.
Previous Lesson: வளரும் வணிகம்
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக
முன்னுரை:
“உழைப்பே உயர்வு தரும்” என்பார்கள் சான்றோர்கள், உழைப்பின் உயர்வை “உழைப்பே மூலதனம் கதை” என்னும் கதையில் காணலாம்.
அருளப்பரின் நிபந்தனை:
பூங்குளம் என்னுமு் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன், அமுதால எழிலன் ஆகிய மூவரையும் அழைத்து, நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் பணம் தருகிறேன். அதைக் கவனமாகப் பாதுகாத்து என்குத் திருப்பித்தரவேண்டும். எனக் கூறி பணம் கொடுத்து அருளப்பர் வெளிநாட்டிற்கு சென்றார்.
வாரிசுகளின் முயற்சி:
வளவன் உழவுத்தொழில் செய்யலாம் என்று முடிவு செய்து, காய்கறித் தோட்டத்தை அமைத்தான். பாதுகாத்துப் பராமரித்து வந்தான். தோட்டம் முழுவதும் அவரை, பாகல், வெண்டை, கத்தரி முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் ஈட்டினான்.
அமுதாவிற்கு ஆடுமாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம், நாட்டுப் பசுக்களை வாங்கி பராமரித்து, அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் குழி தோண்டி மூடி வைத்தான்.
அருளப்பரின் விசாரணை:
தம் பணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். தான் வேளாண்மை செய்து இருமடங்காக சேர்த்து வைத்து பணத்தைத் தந்தையின் முன் வைத்தான் வளவன். தந்தை மகிழ்ச்சி அடைந்து, அப்பணத்தை அவனையே வைத்துக் கொள்ளுமாறு கூறினான். தொடர்ந்து வேளாண்மை செய்ய ஊக்கமளித்தார்.
அடுத்து அமுதா தான் மாடுகள் வளர்ப்பு மூலமாக சேர்த்து வைத்த இரு மடங்கு பணத்தை தந்தையிடம் அளித்தாள். தந்தை மகிழ்ச்சி அடைந்து, அப்பணத்தை அவளையே வைத்துக் கொள்ளுமாறு கூறி, தொடர்ந்து பண்ணையை நடத்த ஊக்கமளித்தார்.
அருளப்பரின் அறிவுரை:
அடுத்தடுத்து எழிலனை அழைத்துப் பணத்தைக் கேட்க, புதைத்து வைத்திருந்து பணத்தை எழிலன் கொடுத்தான். தந்தை ஏமாற்றமடைந்தார். “நீ கடமையைச் செய்ய தவறி விட்டாய். நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கி விட்டாய். நீ என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக்கொள்”. என்று தந்தை கூறினார்.
முடிவுரை:
எழிலனும் தன் தவற்றை உணர்ந்து தொழில் கற்று முன்னேற முடிவு செய்தான். உழைப்பின் உன்னதத்தைப் புரிந்து கொண்டான் எழிலன்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “உழைப்பே மூலதனம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் எனக் கூறியவர்
- பாரதியார்
- சுரதா
- ஔவையார்
- கண்ணதாசன்
விடை : ஔவையார்
2. பிறருக்கு __________ வாழ வேண்டும்.
- தொந்தரவாக
- தொல்லையாக
- உதவியாக
- உதவாமல்
விடை : உதவியாக
3. ஐம்பதாயிரம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- ஐம்பதா + யிரம்
- ஐம்பது + யிரம்
- ஐம்பது + ஆயிரம்
- ஐம்பத் + ஆயிரம்
விடை : ஐம்பது + ஆயிரம்
4. இருமடங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- இரு + மடங்கு
- இரண்டு + அடங்கு
- இரண்ட் + மடங்கு
- இரண்டு + மடங்கு
விடை : இரண்டு + மடங்கு
5. வீணாக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- வீ + ஆக்கி
- வீண் + ஆக்கி
- வீண் + ணாக்கி
- வீ + ணாக்கி
விடை : வீண் + ஆக்கி
6. எதிர் + காலம் என்பதனைச் சேர் த்து எழுதக் கிடைக்கும் சொ ல் _________
- எதிர்க்காலம்
- எதிர்காலம்
- எதிரிகாலம்
- எதிர்கலம்
விடை : எதிர்காலம்