[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 Ani Ilakkanam Book Back Solution

இயல் மூன்று – அணி இலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.5 ‘Ani Ilakkanam’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 1.5 அணி இலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.5 Ani Ilakkanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

அணி இலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ani Ilakkanam’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Ani Ilakkanam subject.

Next Lesson: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

குறு வினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமாகம் என்பர்.

உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். “போல” “போன்ற” என்பவை உவம உருபுகளாகும்.

2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி

உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி

கற்பவை  கற்றபின்

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.

1. மலரன்ன பாதம்

  • உவமை – மலர்
  • உவமேயம் – பாதம்
  • உவம உருபு – அன்ன

2. தேன் போன்ற தமிழ்

  • உவமை – தேன்
  • உவமேயம் – தமிழ்
  • உவம உருபு – போன்ற

3. புலி போலப் பாய்ந்தான் சோழன்

  • உவமை – புலி
  • உவமேயம் – பாய்ந்தான் சோழன்
  • உவம உருபு – போலப்

4. மயிலொப்ப ஆடினாள் மாதவி

  • உவமை – மயில்
  • உவமேயம் – ஆடினாள் மாதவி
  • உவம உருபு – ஒப்ப

மொழியை  ஆள்வோம்!

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பனை மரமே பனை மரமே
ஏன் வளந்தே இத் தூரம்?
குடிக்கப் பதனியானேன்!
கொண்டு விற்க நுங்கானேன்!
தூரத்து மக்களுக்குத்
தூதோலை நானானேன்!
அழுகிற பிள்ளைகட்குக்
கிலுகிலுப்பை நானானேன்!
கைதிரிக்கும் கயிறுமானேன்!
கன்றுகட்டத் தும்புமானேன்!

– நாட்டுப்புறப்பாடல்

வினாக்கள்

1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?

பதனி, நுங்கு

2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத் தரும்?

பனைமரம் அழகின்ற பிள்ளைகளுக்கு கிலுகிலுப்பையைத் தரும்

3. தூதோலை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

தூது + ஓலை

4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.

பதனி, நுங்கு, ஓலை, கிலுகிலுப்பை, கயிறு, தும்பு

5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

பனைமரம்

மொழியோடு  விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையும் அவற்றின் சிறப்பையும் அறிவோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Ani Ilakkanam Book Back Solution Kurukelithu Puthir

இடமிருந்து வலம்

1. பின்னலாடை நகரம்

  • திருப்பூர்

2. மலைகளின் அரசி

  • ஊட்டி

6. தமிழகத்தின் தலைநகரம்

  • சென்னை

13. நெற்களஞ்சியம்

  • தஞ்சாவூர்

வலமிருந்து இடம்

3. மலைக்கோட்டை நகரம்

  • திருச்சி

5. ஏழைகளின் ஊட்டி

  • ஏற்காடு

8. மாங்கனித் திருவிழா

  • காரைக்கால்

11. மஞ்சள் மாநகரம்

  • ஈரோடு

மேலிருந்து கீழ்

1. பூட்டு நகரம்

  • திண்டுக்கல்

3. தேர் அழகு நகரம்

  • திருவாரூர்

4. தெற்கு எல்லை

  • கன்னியாகுமரி

7. புலிகள் காப்பகம்

  • முண்டந்துறை

கீழிருந்து மேல்

9. பட்டாசு நகரம்

  • சிவகாசி

10. தூங்கா நகரம்

  • மதுரை

12. மலைகளின் இளவரசி

  • கொடைக்கானல்

14. கர்மவீரர் நகரம்

  • விருதுநகர்

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை _____________ காத்து வளர்த்தார். (கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல)

விடை: கண்ணை இமை காப்பது போல

2. நானும் என் தோழியும் ______________ இணைந்து இருப்போம். (இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல)

விடை: நகமும் சதையும் போல

3. திருவள்ளுவரின் புகழை ______________ உலகமே அறிந்துள்ளது. (எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)

விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல

4. அப்துல் கலாமின் புகழ் ______________________ உலகெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல / குடத்துள் இட்ட விளக்கு போல)

விடை: குன்றின்மேலிட்ட விளக்கு போல

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் _______________ என் மனத்தில் பதிந்தன. (கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல)

விடை: பசுமரத்தாணி போல

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

1. திருநெல்வேலி

விடை: திரு, நெல், வேலி, வேல்

2. நாகப்பட்டினம்

விடை: நாகம், பட்டினம். நாடி. கட்டி, கடி, படி

3. கன்னியாகுமரி

விடை: கன்னி, கனி, குமரி, மரி, கரி, மன்னி

4. செங்கல்பட்டு

விடை: செங்கல், கல், பட்டு, படு, செல், பல்

5. உதகமண்டலம்

விடை: மண்டலம், மண், கண், கலம், உலகம், உண்

6. பட்டுக்கோட்டை

விடை: பட்டு, கோட்டை, கோடை, படை, கோடு, படு

நிற்க  அதற்குத்  தக…

கலைச்சொல் அறிவோம்.

  • நாகரிகம் – Civilization
  • நாட்டுப்புறவியல் – Folklore
  • அறுவடை – Harvest
  • நெற்பயிர் – Paddy
  • பயிரிடுதல் – Cultivation
  • வேளாண்மை – Agriculture
  • கவிஞர் – Poet
  • அயல்நாட்டினர் – Foreigner
  • நீர்ப்பாசனம் – Irrigation
  • உழவியல் – Agronomy

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “அணி இலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அணி என்னும் சொல்லுக்கு _________ என்பது பொருள்.

  1. அழகு
  2. பொருள்
  3. அலகு
  4. அளவு

விடை: அழகு

2.  _________  உவம உருபு

  1. நனி
  2. கவி
  3. போல
  4. கூறு

விடை: போல

1. அணி என்பது யாது?

ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தல் அணி ஆகும்.

2. இல்பொருள் உவமை அணி சான்றுடன் விளக்குக

உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்று பெயர்

எ.கா:-

மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.

காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.

இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போல’ என்னும் உவமைகள் வந்துள்ளன.

உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை.

கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.

இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

3. எடுத்துக்காட்டு உவமை அணியை சான்றுடன் விளக்குக

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை. மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

4. உவமை அணியை சான்றுடன் விளக்குக

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

  • இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
  • நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்).
  • ‘போல’ என்பது உவம உருபு.

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.

5. உவம உருபுகளை கூறுக

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ

Leave a Comment