[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 Tamil Olir Idangal Book Back Solution

இயல் மூன்று – தமிழ் ஒளிர் இடங்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.4 ‘Tamil Olir Idangal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.4 Tamil Olir Idangal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

தமிழ் ஒளிர் இடங்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamil Olir Idangal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamil Olir Idangal subject.

Next Lesson: பேசும் ஓவியங்கள்

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

சரசுவதி மகால் நூலகம்

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்

செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம்
அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படடையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “ தமிழ்நாடு “ எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ள து . 5 புலங்களும் 25 துறைகளும் உள்ளன.

உ.வே.சா நூலகம் – சென்னை

கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941
தமிழ் நூல்களும் உள்ளன.

வள்ளுவர் கோட்டம் – சென்னை

இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. சிலையின் எடை 7000 டன் எடை கொண்டது. தமிழிரின் அடையாளம் இது.

சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார்

இது அதான் பூம்புகார் சிற்ப கலைக்கூடம் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலைநகரம். இக்கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழ் ஒளிர் இடங்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் _____________ முதல் இயங்கி வருகிறது

  1. கிபி 1123
  2. கிபி 1122
  3. கிபி 1223
  4. கிபி 1232

விடை : கிபி 1122

2. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு ___________

  1. 1980
  2. 1981
  3. 1982
  4. 1983

விடை : 1981

3. உ.வே.சா நூலகத்தில் ___________ ஓலைச்சுவடிகளும் ____________ தமிழ் நூல்களும் உள்ளன.

  1. 2124, 2947
  2. 2425, 2945
  3. 2126, 2943
  4. 2128, 2941

விடை : 2128, 2941

4. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வரும் நூலகம்

  1. சரசுவதி மகால் நூலகம்
  2. கீழ்த்திசை நூலகம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. உ.வே.சா நூலகம்

விடை : கீழ்த்திசை நூலகம்

5. வள்ளுவர் கோட்டத்தின் உயரம் ___________

  1. 128
  2. 130
  3. 129
  4. 131

விடை : 128

6. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு  ___________ கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  1. 3,680
  2. 3,681
  3. 3,682
  4. 3,683

விடை : 3,681

7. பொருத்தாதவற்றை தேர்க

  1. தமிழ்ப் பல்கலைக்கழகம் – 1981
  2. உ.வே.சா நூலகம் – 1924
  3. கீழ்த்திசை நூலகம் – 1869
  4. கன்னிமாரா நூலகம் – 1896

விடை : உ.வே.சா நூலகம் – 1924

8. பொருத்தாதவற்றை தேர்க

  1. திருவள்ளுவர் சிலை – 2000
  2. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் – 1222
  3. மதுரை உலகத்தமிழ் மாநாடு – 1981
  4. உலகத்தமிழ் சங்கம் – 2016

விடை : தஞ்சை சரசுவதி மகால் நூலகம் – 1222

9. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் ___________ குறிப்பிடுகிறது.

  1. மணிமேலை
  2. சீவகசிந்தாமணி
  3. குண்டலகேசி
  4. சிலப்பதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

குறு வினா

1. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பற்றி எடுத்துரைக்க

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

2. கீழ்த்திசை நூலகம் – குறிப்பு வரைக

இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம் பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.

3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எவ்வித நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது?

இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ப் பல்கலைக்கழகமானது அமைக்கப்பட்டுள்ளது

4. உ.வே.சா நூலகம் – சிறுகுறிப்பு எழுதுக

கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன . இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

5. கன்னிமாரா நூலகம் பற்றி குறிப்பு எழுதுக

கி.பி. (பொ.ஆ.) 1 896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ் நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.

6. வள்ளுவர் கோட்டம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

7. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தை பற்றி கூறுக 

இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment