Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 Puthiyai Theetu Book Back Solution

இயல் 4.2 – புத்தியைத் தீட்டு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 4.2 ‘Puthiyai Theetu’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 4.2 புத்தியைத் தீட்டு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 4.2 Puthiyai Theetu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

புத்தியைத் தீட்டு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Puthiyai Theetu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the puthiyai Theetu subject.

Previous Lesson: கல்வி அழகே அழகு

புத்தியைத் தீட்டு பாடல்

கத்தியைத் தீட்டாதே – உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே – அதிலே
திறமையைக் காட்டு!ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு!

(கத்தியைத்)

மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா – இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா!

(கத்தியைத்)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!

(கத்தியைத்)

– ஆலங்குடி சோமு

நூல் வெளி

  • ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்

சொல்லும் பொருளும்

  • தடம் – அடையாளம்
  • அகம்பாவம் – செருக்கு
  • புத்தி – அறிவு
  • உள்ளம் – மனம்
  • லாபம் – பலன்
  • எண்ணி – நினை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _______________ இன்றி வாழ்ந்தார்.

  1. சோம்பல்
  2. அகம்பாவம்
  3. வருத்தம்
  4. வெகுளி

விடை : அகம்பாவம்

2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. கோ + அப்பா
  2. கோயில் + லப்பா
  3. கோயில் + அப்பா
  4. கோ + இல்லப்பா

விடை : கோயில் + அப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. பகைவென்றாலும்
  2. பகைவனென்றாலும்
  3. பகைவன்வென்றாலும்
  4. பகைவனின்றாலும்

விடை : பகைவனென்றாலும்

குறு வினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்

2. பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்

சிறு வினா

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

  • கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
  • ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
  • பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
  • மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
  • இதனை மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
  • வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
  • இவற்றை எண்ணிப் பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

சிந்தனை வினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

  • முதலில் வெறுப்புக்கு காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.
  • அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
  • நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புத்தியைத் தீட்டு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. புத்தியைத் தீட்டு என்ற கவிதையின் ஆசிரியர் _______________

  1. ஆலங்குடி சோமு
  2. ஆலங்குடி வங்கனார்
  3. வாணிதாசன்
  4. குமரகுருபரர்

விடை : ஆலங்குடி சோமு

2. புத்தி தீட்டு எனக் கூறியவர்

  1. ஆலங்குடி சோமு
  2. ஆலங்குடி வங்கனார்
  3. வாணிதாசன்
  4. குமரகுருபரர்

விடை : ஆலங்குடி சோமு

3. அடையாளம் என்ற பொருள் தரும் சொல்

  1. ஆணவம்
  2. தடம்
  3. சினம்
  4. செருக்கு

விடை : தடம்

4. ஆலங்குடி சோமு ___________  பெற்றுள்ளார்

  1. பத்மபூஷன்
  2. பாரதரத்னா
  3. பத்மவிபூஷன்
  4. கலைமாமணி

விடை : கலைமாமணி

5. எண்ணிப்பாரு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. எண்ணிப் + பாரு
  2. எண்ணி + பரு
  3. எண்ணி + பாரு
  4. எண்ணி + ப்பாரு

விடை : எண்ணி + பாரு

6. போகுமப்பா என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. போகும் + மப்பா
  2. போகும் + அப்பா
  3. போ + அப்பா
  4. போக்கு + அப்பா

விடை : போகும் + அப்பா

7. தெளிவாகும் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தெளி + ஆகும்
  2. தெளிவு + வாகும்
  3. தெளி + வாகும்
  4. தெளிவு + ஆகும்

விடை : தெளிவு + ஆகும்

குறு வினா

1. எதில் தம்முடைய திறமையைக் காட்ட வேண்டுமென கவிஞர் கூறுகிறார்?

கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

2. ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது எதற்கு வேலை கொடுக்க வேண்டும்?

ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்

3. நமக்குப் பெருமை என்பது எது?

அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை ஆகும்

4. ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக

  • ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்.
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

Leave a Comment