Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 Padai Velam Book Back Solution

இயல் 7.1 – படை வேழம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 7.1 ‘Padai Velam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 7.1 படை வேழம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 7.1 Padai Velam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

படை வேழம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Padai Velam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Padai Velam Varum Subject.

Previous Lesson: புணர்ச்சி

படை வேழம் பாடல்

கலிங்கப் படையின் நடுக்கம்

எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொொடு ஏழ்க லிங்கரே

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்

*வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே

மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே

– செயங்கொண்டார்

பாடலின் பொருள்

சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர். இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினர்.

அப்படி நடுங்கிய கலிங்க படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் நடுக்கடலில் குதித்து தப்பினர். சிலர் யானைகளின் பி்ன்னே மறைந்த கொணடனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர்கள் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

நூல்வெளி

  • செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
  • முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராக திகழந்தவர்.
  • பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவர் புகழ்ந்துள்ளார்.
  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல்
  • இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல்
  • இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது.
  • இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
  • கலித்தாழிசையால் பாடப் பெற்றது.
  • 599 தாழிசைகள் கொண்டது
  • போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

சொல்லும் பொருளும் 

  • மறலி – காலன்
  • வழிவர் – நழுவி ஓடுவர்
  • கரி – யானை
  • பிலம் – மலைக்குகை
  • தூறு – புதர்
  • மண்டுதல் – நெருங்குதல்
  • அருவர் – தமிழர்
  • இறைஞ்சினர் – வணங்கினர்
  • உடன்றன – சினந்து எழுந்தன
  • முழை – மலைக்குகை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் _______________யில் வாழும்.

  1. மாயை
  2. ஊழி
  3. முழை
  4. அலை

விடை : முழை

2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _______________

  1. வீரம்
  2. அச்சம்
  3. நாணம்
  4. மகிழ்ச்சி

விடை : அச்சம்

3. வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. வெம் + கரி
  2. வெம்மை + கரி
  3. வெண் + கரி
  4. வெங் + கரி

விடை : வெம்மை + கரி

4. என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. என் + இருள்
  2. எட்டு + இருள்
  3. என்ற + இருள்
  4. என்று + இருள்

விடை : என்று + இருள்

5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. போன்றன
  2. போலன்றன
  3. போலுடன்றன
  4. போல்உடன்றன

விடை : போலுடன்றன

குறு வினா

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?

தங்கள் உயிர்களை பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்

2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்?

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?

  • படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
  • கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்
  • யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றம் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.

சிறு வினா

சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

  • கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையோ” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரை பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
  • படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்த திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
  • ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
  • யானை பிளிறியதைக் கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

சிந்தனை வினா

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகீறிர்கள்?

  • ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கையாக அமைந்த அரண்களும்
  • நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்பு படை வீரர்களும்,
  • வேறுபட்ட சிந்தனை கொண்ட படைத் தலைவர்களும்,
  • திறமையான படை வீரர்களும் தேவை எனக் கருதுகிறேன்.

 

பின்வரும் பகுதியில் “கொங்குநாட்டு வணிகம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. செயங்கொண்டார் ____________ என்னும் ஊரினைச் சேர்ந்தவர்

  1. ஆலங்குடி
  2. மால்குடி
  3. வால்குடி
  4. தீபங்குடி

விடை : தீபங்குடி

2. செயங்கொண்டாரை ____________ அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்

  1. இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
  2. முதலாம் பரந்தாகச் சோழன்
  3. இரண்டாம் பரந்தாகச் சோழன்
  4. முதலாம் குலோத்துங்கச் சோழன்

விடை : முதலாம் குலோத்துங்கச் சோழன்

3. செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று __________________ புகழப்பட்டவர்

  1. புகழேந்திப்புலவர்
  2. பலபட்டடைச் சொக்கநாத புலவர்
  3. முதலாம் குலோத்துங்கச் சோழன்
  4. இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

விடை : பலபட்டடைச் சொக்கநாத புலவர்

4. தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் __________________

  1. தக்கயாகப்பரணி
  2. பாசவதைப்பரணி
  3. கலிங்கத்துப்பரணி
  4. இரணி வதைப் பரணி

விடை : கலிங்கத்துப்பரணி

5. கலிகத்துப்பரணி __________________ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

  1. 96
  2. 95
  3. 24
  4. 18

விடை : 96

6. தென்தமிழ் தெய்வப்பரணி என்று கலிகத்துப் பரணியைப் புகழந்தவர்

  1. புகழேந்திப்புலவர்
  2. ஒட்டக்கூத்தர்
  3. முதலாம் குலோத்துங்கச் சோழன்
  4. பலபட்டடைச் சொக்கநாத புலவர்

விடை : ஒட்டக்கூத்தர்

7. கலிகத்துப்பரணி _____________ தாழிசைகள் கொண்டது.

  1. 599
  2. 598
  3. 499
  4. 498

விடை : 599

8. சிதைந்தோடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சிதைந்து + ஓடல்
  2. சிதைந்த் + ஓடல்
  3. சிதைந்து + ஒடல்
  4. சிதைந்த்து + ஓடல்

விடை : சிதைந்து + ஓடல்

8. என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. என்று + இருள்
  2. என்றி + இருள்
  3. என்று + ஈருள்
  4. என்றி + ஈருள்

விடை : என்று + இருள்

8. போல் + உடன்றன என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. போல் உடன்றன
  2. போலுடன்றன
  3. போலூடன்றன
  4. போல்லுடன்றன

விடை : போலுடன்றன

சிறு வினா

1. கலிகத்துப்பரணி எதனை பற்றி பேசுகிறது

கலிகத்துப்பரணி கலிங்கப்போர் வெற்றியை பற்றி பேசுகிறது.

2. பரணி இலக்கியம் என்றால் என்ன?

போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

3. செயங்கொண்டார் சிறுகுறிப்பு வரைக

  • செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
  • முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவர்
  • பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவரால் புகழப்பட்டவர்

4. கலிகத்துப்பரணி  பற்றி குறிப்பு வரைக

  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல்
  • இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல்
  • இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது.
  • இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
  • கலித்தாழிசையால் பாடப் பெற்றது.
  • 599 தாழிசைகள் கொண்டது

Leave a Comment