Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 Punarchi Book Back Solution

இயல் 6.5 – புணர்ச்சி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 6.4 ‘Punarchi’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 6.5 காலம் உடன் வரும்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 6.5 Punarchi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

புணர்ச்சி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Punarchi’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Punarchi Varum Subject.

Previous Lesson: காலம் உடன் வரும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விகாரப் புணர்ச்சி ____________ வகைப்படும்.

 1. ஐந்து
 2. நான்கு
 3. மூன்று
 4. இரண்டு

விடை : மூன்று

2. பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ____________

 1. இயல்பு
 2. தோன்றல்
 3. திரிதல்
 4. கெடுதல்

விடை : இயல்பு

பொருத்துக

 1. மட்பாண்டம் –  தோன்றல் விகாரம்
 2. மரவேர் –  இயல்புப் புணர்ச்சி
 3. மணிமுடி –  கெடுதல் விகாரம்
 4. கடைத்தெரு –  திரிதல் விகாரம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

சிறு வினா

1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

நிலைமொழியும் வரும் மொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்

சான்று : தாய் மொழி

தாய் + மொழி = தாய் மொழிக இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே இது இயல்பு புணர்ச்சி

2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

மரம் + கட்டில் – திரில் விகாரப்புணர்ச்சியின் படி “ம்” என்பது “க்” ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்து, இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு.

கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து தோன்றல் விகாரத்தின் படி “க்” என்ற மெய்யெழுத்து தோன்றியது.

மொழியை ஆள்வோம்!

மரபுத்தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப்பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.

கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

2. அவர் ஓர் அவசரக்குடுக்கை.

அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

1. ஆயிரங்காலத்துப் பயிர் – அ. இயலாத செயல்
2. கல்லில் நார் உரித்தல் – ஆ. ஆராய்ந்து பாராமல்
3. கம்பி நீட்டுதல் – இ. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது
4. கானல்நீர் – ஈ. நீண்டகாலமாக இருப்பது
5. கண்ணை மூடிக்கொண்டு – உ. விரைந்து வெளியேறுதல்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 –  ஆ

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. வாழையடி வாழையாக

விடை: வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

2. முதலைக்கண்ணீர்

விடை: காவலரிடம் மாட்டிக் கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.

3. எடுப்பார் கைப்பிள்ளை

விடை: நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.

மொழியோடு விளையாடு

ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!

Samacheer Kalvi 8th Tamil Guide punarchi - Kurukeluthu Puthir

இடமிருந்து வலம் :-

1. சிவகாசி 

விடை: பட்டாசு

5. திருபாச்சி

விடை: அரிவாள்

7. திருநெல்வேலி

விடை: அல்வா

12. கோவில்பட்டி

விடை: கடலைமிட்டாய்

வலமிருந்து இடம் :-

3. மதுரை

விடை : மல்லிகை

4. பண்ருட்டி

விடை: பலாப்பழம்

9. தஞ்சாவூர்

விடை: தலையாட்டி பொம்மை

10. மணப்பாறை

விடை: முறுக்கு

மேலிருந்து கீழ் :-

1. காஞ்சிபுரம்

விடை: பட்டுப்புடவை

2. சேலம்

விடை: மாம்பழம்

4. பழனி

விடை: பஞ்சாமிர்தம்

கீழிருந்து மேல் :-

6. தூத்துக்குடி

விடை: உப்பு

8. ஸ்ரீவில்லிப்புத்தூர்

விடை: பால்கோவா

11. திண்டுக்கல்

விடை: பூட்டு

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

 • நூல் – Thread
 • பால்பண்ணை – Dairy farm
 • தறி – Loom
 • சாயம் ஏற்றுதல் – Dyeing
 • தையல் – Stitch
 • தோல் பதனிடுதல் – Tanning
 • ஆலை – Factory
 • ஆயத்த ஆடை – Readymade Dress

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புணர்ச்சி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நிலை மொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது ___________ ஆகும்.

 1. புணர்ச்சி
 2. எச்சம்
 3. முற்று
 4. இணைதல்

விடை: புணர்ச்சி

2. நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது ___________ எனப்படும்.

 1. உயிர் முதல் புணர்ச்சி
 2. மெய்யீற்றுப் புணர்ச்சி
 3. உயிரீற்றுப் புணர்ச்சி
 4. மெய்யீற்றுப் புணர்ச்சி

விடை: உயிரீற்றுப் புணர்ச்சி

3. நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது ___________ எனப்படும்.

 1. உயிரீற்றுப் புணர்ச்சி
 2. உயிர் முதல் புணர்ச்சி
 3. மெய்யீற்றுப் புணர்ச்சி
 4. மெய்யீற்றுப் புணர்ச்சி

விடை: மெய்யீற்றுப் புணர்ச்சி

4. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது  ___________ எனப்படும்.

 1. உயிரீற்றுப் புணர்ச்சி
 2. மெய் முதல் புணர்ச்சி
 3. மெய்யீற்றுப் புணர்ச்சி
 4. உயிர் முதல் புணர்ச்சி

விடை: உயிர் முதல் புணர்ச்சி

5. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது  ___________ எனப்படும்.

 1. உயிரீற்றுப் புணர்ச்சி
 2. மெய் முதல் புணர்ச்சி
 3. மெய்யீற்றுப் புணர்ச்சி
 4. உயிர் முதல் புணர்ச்சி

விடை: மெய் முதல் புணர்ச்சி

6. இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது __________ எனப்படும்.

 1. உயிரீற்றுப் புணர்ச்சி
 2. விகாரப் புணர்ச்சி
 3. மெய்யீற்றுப் புணர்ச்சி
 4. உயிர் முதல் புணர்ச்சி

விடை: விகாரப் புணர்ச்சி

7. இரண்டு நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது __________ விகாரம் ஆகும்.

 1. திரிதல்
 2. தோன்றல்
 3. கெடுதல்
 4. வருடுதல்

விடை: தோன்றல்

8. இரண்டு நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது __________ விகாரம் ஆகும்.

 1. திரிதல்
 2. தோன்றல்
 3. கெடுதல்
 4. வருடுதல்

விடை: திரிதல்

9. இரண்டு நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது __________ விகாரம் ஆகும்.

 1. திரிதல்
 2. தோன்றல்
 3. கெடுதல்
 4. வருடுதல்

விடை: கெடுதல்

10. பொருந்தாததை தேர்க

 1. உயிரீற்றுப் புணர்ச்சி = சிலை + அழகு
 2. மெய்யீற்றுப் புணர்ச்சி = மண் + அழகு
 3. உயிர்முதல் புணர்ச்சி = பொன் + உண்டு
 4. மெய்முதல் புணர்ச்சி = மனம் + இல்லை

விடை: மெய்முதல் புணர்ச்சி = மனம் + இல்லை

Leave a Comment