Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 Tamilar Isaikaruvigal Book Back Solution

இயல் 5.4 – தமிழர் இசைக்கருவிகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 5.4 ‘Tamilar Isaikaruvigal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 5.4 தமிழர் இசைக்கருவிகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 5.4 Tamilar Isaikaruvigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தமிழர் இசைக்கருவிகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamilar Isaikaruvigal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamilar Isaikaruvigal subject.

Previous Lesson: நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

மதிப்பீடு

காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை

மக்களின் மனதிற்கு எழுச்சியை தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள்

காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொ்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல்

காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

கொம்பு

மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.

சங்கு

இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

முடிவுரை

அழிந்து வரும் இவ்வகைக் காற்றுக் இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழர் இசைக்கருவிகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் ___________ எனப்பட்டனர்.

 1. மன்னர்
 2. பாணர்
 3. மக்கள்
 4. ஒற்றர்

விடை : பாணர்

2. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி அணியாள் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

 1. அகநானூறு
 2. ஐங்குறுநூறு
 3. புறநானூறு
 4. கலித்தொகை

விடை : புறநானூறு

3. தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்  என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

 1. திருவாசகம்
 2. சிலப்பதிகாரம்
 3. மணிமேகலை
 4. தேவாரம்

விடை : தேவாரம்

4. புல்லாங்குழல் செய்யப் பயன்படும் மரங்களில் பொருந்தாதது

 1. சந்தனம்
 2. செங்காலி
 3. கருங்காலி
 4. ஆச்சா மரம்

விடை : ஆச்சா மரம்

5. பின்வருவனவற்றுள் இயற்கைக்கருவி எது

 1. சங்கு
 2. கொம்பு
 3. மத்தளம்
 4. புல்லாங்குழல்

விடை : சங்கு

6. சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணணானைப் பாடேலோர் எம்பாவாய்
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

 1. திருவாசகம்
 2. திருப்பாவை
 3. தேவாரம்
 4. திருவெம்பாவை

விடை : திருப்பாவை

7. பாண்டில் என அழைக்கப்படும் இசைக்கருவி

 1. சேகண்டி
 2. திமிலை
 3. சாலரா
 4. கொம்பு

விடை : சாலரா

8. கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைக்கப்படும் கருவி

 1. சேகண்டி
 2. திமிலை
 3. சாலரா
 4. கொம்பு

விடை : சேகண்டி

9. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
   வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. பெரியபுராணம்
 2. திருவிளையாடற்புராணம்
 3. பெருமாள் திருமொழி
 4. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

விடை : பெரியபுராணம்

10. இசைக்கருவிகளின் முதற்கருவியாக கருதப்படுவது

 1. மத்தளம்
 2. பறை
 3. திமிலை
 4. முரசு

விடை : மத்தளம்

12. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் –
 பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1.  திருவிளையாடற்புராணம்
 2. நாச்சியார் திருமொழி
 3. பெருமாள் திருமொழி
 4. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

விடை : நாச்சியார் திருமொழி

13. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் குறிப்பிடும் நூல்

 1. மதுரைக்காஞ்சி
 2. சிலப்பதிகாரம்
 3. மணிமேகலை
 4. சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம்

14. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் குறிப்பிடும் நூல்

 1. மதுரைக்காஞ்சி
 2. சிலப்பதிகாரம்
 3. மணிமேகலை
 4. சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம்

15. மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல்

 1. சிலப்பதிகாரம்
 2. மணிமேகலை
 3. மதுரைக்காஞ்சி
 4. சீவகசிந்தாமணி

விடை : மதுரைக்காஞ்சி

16. மண்ணமை முழவு இடம் பெற்றுள்ள நூல்

 1. சிறுபாணாற்றுப்படை
 2. பெரும்பாணாற்றுப்படை
 3. பொருநராற்றுப்படை
 4. கூத்தாராற்றுப்படை

விடை : பொருநராற்றுப்படை

17. கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்  –  பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. அகநானூறு
 2. ஐங்குறுநூறு
 3. புறநானூறு
 4. கலித்தொகை

விடை : புறநானூறு

18. பொருந்தாதவற்றை தேர்க

 1. பேரியாழ் – 21 நரம்புகளை கொண்டது
 2. மகரயாழ் – 19 நரம்புகளை கொண்டது
 3. சகோடயாழ் – 15 நரம்புகளை கொண்டது

விடை : 15 நரம்புகளை கொண்டது

18. பொருந்தாதவற்றை தேர்க

 1. மண்ணமை முழவு – பொருநாராற்றுப்படை
 2. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
 3. பரிவாதினி – மகேந்திரவர்மன்
 4. அனைத்தும் சரி

விடை : அனைத்தும் சரி

சிறுவினா

1. இசையின் பிரிவுகள் யாவை?

 • குரல்வழி இசை
 • கருவிவழி இசை

2. இசைக்கருவிகளின் வகைகள் யாவை?

இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

3. தோல்கருவிகள் என்றால் என்ன?

விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) முழவு, முரசு

4. நரம்புக்கருவிகள் என்றால் என்ன?

நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.

(எ.கா.) யாழ், வீணை

5. பாணர் எனப்படுபவர் யார்?

இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்

6. உடுக்கையின் வேறு பெயர்கள் யாவை?

 • பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
 • சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்.

7. குழல்கள் வேறு பெயர்கள் யாவை?

வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.

8. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் விணை என்ன?

பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

9. திமிலை என்றால் என்ன?

பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். மணற்கடி கார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

Leave a Comment