Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.5 Vallinam Migum idangalum Miga idangaum Book Back Solution

இயல் 7.5 – வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 7.5 ‘Vallinam Migum idangalum Miga idangaum’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 7.5 Vallinam Migum idangalum Miga idangaum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vallinam Migum idangalum Miga idangaum’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Vallinam Migum idangalum Miga idangaum Subject.

Previous Lesson: அறிவுசால் ஔவையார்

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக

1. சுட்டுத் திரிபு ____________

விடை: வல்லினம் மிகும்

2. திசைப் பெயர்கள் ____________

விடை: வல்லினம் மிகும்

3. பெயரெச்சம் ____________

விடை: வல்லினம் மிகாது

4. உவமைத் தொகை ____________

விடை: வல்லினம் மிகும்

5. நான்காம் வேற்றுமை விரி ____________

விடை: வல்லினம் மிகும்

6. இரண்டாம் வேற்றுமை தொகை ____________

விடை: வல்லினம் மிகாது

7. வினைத் தொகை ____________

விடை: வல்லினம் மிகாது

8 உருவகம் ____________

விடை: வல்லினம் மிகும்

9. எழுவாய்த் தொடர் ____________

விடை: வல்லினம் மிகாது

10. எதிர்மறைப் பெயரெச்சம் ____________

விடை: வல்லினம் மிகாது

சிறு வினா

1. சந்திப்பிழை என்றால் என்ன?

வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் கூறுவர்

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.

சான்று : தலையைக் காட்டு, எனக்குத் தெரியும்

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தினை எழுதுக.

  1. அது சென்றது
  2. காய் தின்றேன்
  3. இலை பறித்தேன்
  4. எழுதாத பாடல்
  5. எழுதும்படி சொன்னேன்

மொழியை ஆள்வோம்

எதிர்மறைச் சொற்கள்

வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தன்மை

  • ஒருமை – நான் அல்லேன்
  • பன்மை – நாம் அல்லோம்

முன்னிலை

  • ஒருமை – நீ அல்லை
  • பன்மை – நீவீர் அல்லீர்

படர்க்கை

  • ஆண்பால் – அவன் அல்லன்
  • பெண்பால் – அவள் அல்லள்
  • பலர்பால் – அவர் அல்லர்
  • ஒன்றன்பால் – அஃது அன்று
  • பலவின் பால் – அவை அல்ல

‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.

பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. அதைச் செய்தது நான் அன்று.

விடை: அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.

விடை: பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.

விடை: மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.

விடை: சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.

விடை: பகைவர் நீவீர் அல்லீர்

சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை ____________

விடை: அல்ல

2. உங்களோடு வருவோர் ____________ அல்லோம்.

விடை: நாம்

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ____________

விடை: அல்லள்

4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ____________

விடை: அல்ல

5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை.

விடை: நீ

மொழியோடு விளையாடு

வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக

Samacheer Kalvi 8th Tamil Guide Vallinam Migum idangalum Miga idangaum - Sorgalai Uruvaku

  • கருமை
  • கரும்பு
  • நாடு
  • களை
  • வித்து
  • வேழம்
  • கற்பு
  • கடுமை
  • கடமை
  • பழமை
  • பல்
  • வேல்
  • புல்
  • நாற்று
  • நாடகம்
  • நாம்
  • வேம்பு
  • கடம்
  • வேற்றுமை
  • கல்

கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.

  1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
  2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
  3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
  4. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
  5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
  6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.

விடை :-

  1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
  2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
  3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
  4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
  5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
  6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • குதிரையேற்றம் – Equestrian
  • முதலமைச்சர் – Chief Minister
  • ஆதரவு – Support
  • தலைமைப்பண்பு – Leadership
  • கதாநாயகன் – The Hero
  • வெற்றி – Victory
  • வரி – Tax
  • சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதை ________________ 

  1. சந்திப் பிழை
  2. எழுத்துப் பிழை
  3. சொற்பிழை
  4. பேச்சுப் பிழை

விடை: சந்திப் பிழை

2. சந்திப் பிழையின் மறுபெயர் ________________ 

  1. எழுத்துப் பிழை
  2. ஒற்றுப்பிழை
  3. சொற்பிழை
  4. பேச்சுப் பிழை

விடை: ஒற்றுப்பிழை

3. மரச்சட்டம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மரச் + சட்டம்
  2. மரம் + சட்டம்
  3. மரம் + சடம்
  4. மரச் + சடம்

விடை: மரம் + சட்டம்

4. வட்டப்பாறை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வட்ட + பாறை
  2. வட்டம் + பாறை
  3. வட்டப் + பாறை
  4. வட்டு + பாறை

விடை: வட்டம் + பாறை

5. எழுதுபொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வட்ட + பாறை
  2. வட்டம் + பாறை
  3. வட்டப் + பாறை
  4. வட்டு + பாறை

விடை: வட்டம் + பாறை

6. சுடு + சோறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. சுடுச்சோறு
  2. சுடுசோறு
  3. சுடும் சோறு
  4. சுடுசாறு

விடை: சுடுசோறு

7. தாய் + தந்தை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. தாய்த்தந்தை
  2. தாய்தந்தை
  3. தாய் எந்தை
  4. தாய்த் தந்தை

விடை: தாய்தந்தை

8. வெற்றிலை + பாக்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. வெற்றிலைப்பாக்கு
  2. வெற்றிலைபாக்கு
  3. வேற்றிலைபாக்கு
  4. வேற்றிலைப்பாக்கு

விடை: வெற்றிலைபாக்கு

Leave a Comment