இயல் 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 5.1 ‘Kalviyil Sirantha Pengal’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 5.1 Kalviyil Sirantha Pengal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.
கல்வியில் சிறந்த பெண்கள் பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Kalviyil Sirantha Pengal’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Kalviyil Sirantha Pengal Subject.
Previous Lesson: வல்லினம் மிகா இடங்கள்
குறு வினா
சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது?
பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.
சிறு வினா
1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக
ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்
2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
“தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமாம் வில்லினில் பாட
வந்தருள்வாய் தமிழ் மகளே!
இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
ஆமாம்! பாடப்போகிறோம்.
மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
இன்று பெண்கள்…
சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்
இன்று பெண்கள்…
ஆமாம்!
வாழிய வாழிய பெண்கல்வி
ஆமாம் வாழிய வாழியவே!”
3. முத்துலெட்சுமி – குறிப்பு வரைக. (அல்லது) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
- சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
- அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பங்களை எழுதுக.
- மறைமலையடிகளின் மகள் ஆவார்.
- தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
- இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
நெடு வினா
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க
மூவலூர் இராமாமிர்தம்:-
- தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
- திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
- தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
- தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
முத்துலெட்சுமி:-
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
- சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
- அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
நீலாம்பிகை அம்மையார்:-
- மறைமலையடிகளின் மகள் ஆவார்.
- தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
- இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “கல்வியில் சிறந்த பெண்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. கொவ்வைத் தமிழைக் கொண்டு பாடியவர்
- ஓவையார்
- ஆதிமந்தி
- ஆண்டாள்
- பொன்முடியார்
விடை : ஆண்டாள்
2. பெண் கல்விக்குப் பரிந்துரை செய்த ஹண்டர் குழு ___________ ஏற்படுத்தப்பட்டது
- 1872
- 1882
- 1892
- 1902
விடை : 1882
3. பெண் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- முத்துலட்சுமி
- சாவித்திரி பூலே
- மூவலூர் இராமாமிர்தம்
- ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்
விடை : முத்துலட்சுமி
4. முத்துலெட்சுமி அவ்வை இல்லம் தொடங்கிய ஆண்டு
- 1920
- 1927
- 1930
- 1937
விடை : 1930
5. முடியாது பெண்ணாலே என்கின்ற
மாயையினை முடக்க எழுந்தவர் யாரு… இக்கூற்றிணை கூறியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
- தந்தை பெரியார்
விடை : தந்தை பெரியார்
6. முடியாது விடியாது பெண்ணாலே என்கி ன்ற
கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு இவ்வரிகளை எழுதியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
- தந்தை பெரியார்
விடை : பாரதியார்
7. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை
தீருமோவென… இவ்வரிகளின் ஆசிரியர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
- தந்தை பெரியார்
விடை : பாரதிதாசன்
8. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன்முதலாகப் பெண்களுக்கான பள்ளி தொடங்கிய மாநிலம்
- தமிழ்நாடு
- கேரளா
- குஜராத்
- மாராட்டியம்
விடை : மாராட்டியம்
9. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றத் துணையாக நின்றவர்
- முத்துலட்சுமி
- சாவித்திரி பூலே
- மூவலூர் இராமாமிர்தம்
- ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்
விடை : மூவலூர் இராமாமிர்தம்
10. தமிழக அரசு, 8 வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை __________ என்பவரின் பெயரால் வழங்கப்படுகின்றது.
- முத்துலட்சுமி
- சாவித்திரி பூலே
- மூவலூர் இராமாமிர்தம்
- ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்
விடை : மூவலூர் இராமாமிர்தம்
11. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர் இலவச மருத்துவம் அளித்த இடம்
- சேலம்
- திருவண்ணாமலை
- திண்டுக்கல்
- வேலூர்
விடை : வேலூர்
12. இந்திய நாட்டின் தமிழகத்தின் முதல் பெண் ஆசிரியர்
- முத்துலட்சுமி
- சாவித்திரிபாய் பூலே
- மூவலூர் இராமாமிர்தம்
- ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்
விடை : சாவித்திரிபாய் பூலே
13. பாகிஸ்தானின் பெண்கல்வி வேண்டுமென மலாலா போராடிய ஆண்டு
- 1979
- 1997
- 1998
- 1989
விடை : 1997
14. சட்ட மேற்படிப்பிற்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
- மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
- ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
15. கல்வி மற்றும் திருமண உதவித் தொகையுடன் தொடர்புடை திட்டம்
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
- மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
- ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
16. மறைமலை அடிகளாரின் மகள்
- முத்துலட்சுமி
- மூவலூர் இராமாமிர்தம்
- நீலாம்பிகை அம்மையார்
- ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்
விடை : நீலாம்பிகை அம்மையார்
17. பெண்களுக்கெனப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு …………..
- 1884
- 1885
- 1845
- 1848
விடை : 1848
18. குழந்தையைப் பாதுகாப்போம் அமைப்பினை நிறுவியவர்
- கைலாஷ் சத்தியமூர்த்தி
- அன்னை தெரசா
- இராமலிங்க அடிகள்
- ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்
விடை : கைலாஷ் சத்தியமூர்த்தி
குறு வினா
1. பெண்கல்வி ஊக்குவிப்புக்கான திட்டங்கள் யாவை?
- ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் – பட்ட மேற்படிப்புக்கு உரியது.
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் – கல்வி திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது
2. சாவித்திரிபாய் பூலே நாட்டிற்கு ஆற்றிய பணிகளை எழுதுக
- 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
3. ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் பற்றி குறிப்பு வரைக
- தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
- திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
- சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.