இயல் 3.4 – ஒளி பிறந்தது
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 Oli Piranthathu is part of Solutions for Class 6 Tamil. Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 3.4 ஒளி பிறந்தது.
ஒளி பிறந்தது பாடல் வினா விடைகள் 2024
On this page, you will find the question answers for the Lesson ‘Oli Piranthathu’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Oli Piranthathu subject.
Previous Lesson: கணியனின் நண்பன்
மதிப்பீடு
1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
- உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளது.
- எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
- அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.
- நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
- பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன்.
2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைையக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் அப்துல் கலாம் கூறுகிறார்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “ஒளி பிறந்தது” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. திருக்குறள் என்பதனை பிரித்தெழுக
- திரு + க்குறள்
- திரு + குறள்
- திருக் + குறள்
- திருக்க் + உறள்
விடை: திரு + குறள்
2. பெயர்ப்பலகை என்பதனை பிரித்தெழுக
- பெயர் + பலகை
- பெயர்ப் + பலகை
- பெயர் + ப்பலகை
- பெயர்ர் + பலகை
விடை: பெயர் + பலகை
3. பார்வையிட்டு என்பதனை பிரித்தெழுக
- பார்வை + யிட்டு
- பார்வைய் + இட்டு
- பார்வைஇ + இட்டு
- பார்வை + இட்டு
விடை: பார்வை + இட்டு
குறுவினா
1.உலகின் முதல் விஞ்ஞானியாக அப்துல்கலாம் யாரைக் கூறியுள்ளார்?
கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தைகளும் உவுலகின் முதல் விஞ்ஞானிகளாக அப்துல்கலாம் கூறியுள்ளார்.
2.வெற்றி பெற அப்துல்கலாம் கூறிய வழிகள் யாவை
- அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சு
- வியர்வை
3. திருக்குறளினை பற்றி அப்துல்கலாம் கூறிய கருத்து யாது?
தமிழில் மிகவும் பிடித்த நூலாக திருக்குறள் என அப்துல்கலாம் கூறியுள்ளார்
4. விளக்குகள் பல தந்த ஒளி நூலில் அப்துல்கலாம் தமக்கு கிடைத்ததாக கூறியவை யாவை
லிலியன் வாட்சன் எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி நூலில் அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றும் கிடைத்ததாக கலாம் கூறினார்.
5. கலாமின் குறிக்கோள் யாது?
வானில் பறக்க வேண்டும் என்பது கலாமின் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும்