இயல் இரண்டு – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.2 ‘Appadiye Nirkkattum Antha Maram’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.2 Appadiye Nirkkattum Antha Maram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Appadiye Nirkkattum Antha Maram’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Appadiye Nirkkattum Antha Maram subject.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடல்
ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோதும் இப்படியேதானிருந்தது ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான்தாத்ததாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாம் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்பச்சைக்காய்கள் நிறம் மாறிச் செங்காய்த் தோற்றம் கொண்டதுமே சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும் பளபளக்கும் பச்சை இலைகளூடே காக்கை குருவி மைனா கிளிகள் வயதுவந்த அக்காக்களுக்காய் இரவில் மெல்லிய நிலவொளியில் தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும் நேற்று மதியம் நண்பர்களுடன் பெருவாழ்வு வாழ்ந்த மரம் எனக்குப் போக மனமில்லை – ராஜமார்த்ததாண்டன் |
நூல் வெளி
- ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
- கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- “ராஜமார்த்தாண்டன் கவிதைகள்” என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
- சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து “கொங்கு தேர்வாழ்க்கை” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
- இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
சொல்லும் பொருளும்
பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.
- பச்சை இலை
- கோலிக்குண்டு
- பச்சைக்காய்
- செங்காய்
விடை : கோலிக்குண்டு
2. சுட்ட பழங்கள் என்று குறிப்பிடப்படுபவை _____.
- மண் ஒட்டிய பழங்கள்
- சூடான பழங்கள்
- வேகவைத்த பழங்கள்
- சுடப்பட்ட பழங்கள்
விடை : மண் ஒட்டிய பழங்கள்
3. பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- பெயர + றியா
- பெயர் + ரறியா
- பெயர் + அறியா
- பெயர + அறியா
விடை : பெயர் + அறியா
4. மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மன + மில்லை
- மனமி + இல்லை
- மனம் + மில்லை
- மனம் + இல்லை
விடை : மனம் + இல்லை
5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- நேற்றுஇரவு
- நேற்றிரவு
- நேற்றுரவு
- நேற்இரவு
விடை : நேற்றிரவு
குறு வினா
1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?
நாவல் மரம் இரண்டு தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது
2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று
சிறு வினா
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
- ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.
- அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
- பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக்கோலிக்குண்டுகள் போல் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
- காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று அகியன உதிர்த்து விடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
- தங்கைகள் தங்கள் அக்காளுக்க்காக கையில் பெட்டியுடன் நாவல் பழம் பொறுக்குகின்றனர்.
- இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
- அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.
சிந்தனை வினா
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
- பெருங்காற்றினால் நாவல்மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர் மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
- குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
- அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் சிறந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியவர் ______________
- கவிமணி
- சுரதா
- ராஜமார்த்தாண்டன்
- உடுமலை நாராயணகவி
விடை : ராஜமார்த்தாண்டன்
2. ராஜமார்த்தாண்டன் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற நூல் ______________
- ராஜமார்த்தாண்டன் நாவல்கள்
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
- ராஜமார்த்தாண்டன் உரைநடைகள்
- ராஜமார்த்தாண்டன் வாழ்க்கை
விடை : ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
3. ராஜமார்த்தாண்டன் ______________ என்னும் சிற்றிதழை நடத்தினார்
- கள்ளிப்பாவை
- அல்லிப்பாவை
- கொல்லிப்பாவை
- மரப்பாவை
விடை : கொல்லிப்பாவை
3. பரவசம் என்ற சொல்லின் பொருள்
- ஆழிப் பெருக்கு
- துன்பம்
- மகிழ்ச்சிப் பெருக்கு
- வெறுப்பு
விடை : மகிழ்ச்சிப் பெருக்கு
3. துஷ்டி கேட்டல் என்பதன் பொருள்
- மகிழ்ச்சிப் பெருக்கு
- தட்டி கேட்டல்
- துக்கம் விசாரித்தல்
- நலம் கேட்டல்
விடை : மகிழ்ச்சிப் பெருக்கு
4. கொல்லிப்பாவை என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது
- கொள்ளி + பாவை
- கொல்லி + பாவை
- கொல் + பாவை
- கொள் + பாவை
விடை : மகிழ்ச்சிப் பெருக்கு
5. மாமலை என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது
- மா + மலை
- மாம் + மலை
- மா + அலை
- மாம் + அலை
விடை : மா + மலை
6. பெயரறியா என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது
- பெயர் + அறியா
- பெயரறி + யா
- பெயர + றியா
- பெயர் + யறியா
விடை : பெயர் + அறியா
7. தான் + இருந்து என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது
- தானிருந்து
- தான் இருந்து
- தானி இருந்து
- தானின்இருந்து
விடை : தானிருந்து
8. நேற்று + இரவு என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது
- நேற்று இரவு
- நேற்றிரவு
- நேற்றுஇரவு
- நேற்றுரவு
விடை: நேற்றிரவு
குறு வினா
கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக
- ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
- கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.
- சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்கு தேர்வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.