இயல் 6.1 – நிகழ்கலை
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.1 ‘Nigalkalai’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.1 நிகழ்கலை
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.1 Nigalkalai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
நிகழ்கலை வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Nigalkalai’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
Previous Lesson: வினா, விடை வகைகள், பொருள்கோள்
பலவுள் தெரிக
1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர் இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
- கரகாட்டம் என்றால் என்ன?
- கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
- கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
- கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை : கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
குறு வினா
நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்! என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
நேற்று நான் பார்த்த அர்ச்சுனர் தபசு என்ற அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினார்.
சிறு வினா
படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக
ஒயிலாட்டம், தேவராட்டம்
ஆ) கரகாட்டம் என்றால் என்ன?
கரகம் என்பது பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும்.
நெடு வினா
1. நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
பாராட்டுரை
இன்றைய நம் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்வை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளயின் சார்பாக வணக்கம்.
நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.
மழைநீர் பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நெகிழியைப் பற்றியும், மரங்களில் நெகிழிப்பைகள் சிக்குவதால் பாரதிக்கும் ஒளிச்சேர்க்கையைப் பற்றியும் பாடல் வாயிலாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுகள்.
மட்காத நெகிழிகளை மழைநீர் அடித்துச் செல்வதால் நீர் மாசு அடைவதையும், நெகிழிப் பைகளில் தேநீர், குளிர்பானம் போன்ற உணவுப் பொருள்கள் வாங்குவதால் மனிதனுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் பொம்மலாட்டம் மூலம் நிகழ்த்தினீர்கள். பாராட்டுகள்.
நெகிழிப் பைகளை எரிக்கும் போது ஏற்படும் நச்சு வாயு காற்றையும் மாசுபடுத்துவதைத் தங்களது இனிய குரலால் பாடி, எங்களைப் பரவசமடையச் செய்தீர்கள். பாராட்டுகள்.
நெகிழியைத் தவிர்த்தல்
மேற்கண்ட தீமைகள் ஒழிந்திட நெகிழிையத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்போம்.
தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். இது பொழுதுபோக்குக் காட்சிக்கலை ஆகும். இது பொழுதுபோக்கு காட்சியாக மட்டுமல்லாமல் கல்வியறிவு, மக்களிடையே காணப்படும் அறியாமையைப் பாடல் வழியாக போக்குவதற்கு நல்ல கலையாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இக்கலை வடிவம் வாயிலாக நம் பள்ளியின் ஆண்டு விழாவில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திய கலைக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமையைப் பொம்மலாட்டம் வாயிலாக நிகழ்த்தி எங்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்த அனைவருக்கும் வணக்கம்.
2. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் -இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்யவேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
முன்னுரை:-
ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன.
நிகழ்கலையின் வடிவங்கள்:-
பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும், இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், தெருகூத்து போன்றன.1
ஒப்பனைகள்:-
- கரகாட்டம் – ஆண், பெண் வேடமிட்டு ஆடுதல்
- மயிலாட்டம் – மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்தல்
- ஒயிலாட்டம் – ஒரே நிறத்துணியை முண்டாசு போலக்கட்டுதல், காலில் சலங்கை, கையில் சிறுதுணி
- தேவராட்டம் – வேட்டி, தலையிலும் இடுப்பிலும் சிறு துணி, எளிய ஒப்பனை
சிறப்பும் பழைமையும்:-
வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாது, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது.
பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம் முன்னோர் காலத்திலில் இருந்த பழமை வாய்ந்த கலையாகும்.
குறைந்து வருவதற்கான காரணங்கள்:-
நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் திரைத்துறை வளர்ச்சினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன.
வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:-
நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியில் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்து கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும்.
முடிவுரை:-
நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம்
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “நிகழ்கலை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. நீரற வறியாக் கரகத்து என்ற பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
- அகநானூறு
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
- பரிபாடல்
விடை : புறநானூறு
2. மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் _____________ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- குடக்கூத்து
விடை : குடக்கூத்து
3. மயிலாட்டம் ____________ன் துணையாட்டம்
- கரகாட்டம்
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- மயிலாட்டம்
விடை : கரகாட்டம்
4. காவடியாட்டம் என்ற சொல்லில் கா என்பதன் பொருள்
- கால்
- சோலை
- காவல்
- பாரந்தாங்கும் கோல்
விடை : பாரந்தாங்கும் கோல்
5. காவடியாட்ட வகைகளில் பொருந்தாது
- மச்சக்காவடி
- சர்ப்பக்காவடி,
- பூக்காவடி
- குதிரைக்காவடி
விடை : குதிரைக்காவடி
6. இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெய ர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- காவடியாட்டம்
- கரகாட்டம்
விடை : காவடியாட்டம்
7. வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் __________ எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- தேவராட்டம்
- கரகாட்டம்
விடை: தேவராட்டம்
8. உறுமி ____________ என அழைக்கப்படுகிறது
- தேவதுந்துபி
- டோலக்
- சிங்கி
- தப்பு
விடை : தேவதுந்துபி
9. __________ போன்று ஆடப்பட்டு வருகின்ற கலை சேவையாட்டம்
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- தேவராட்டம்
- கரகாட்டம்
விடை : சேவையாட்டம்
8. பொய்க்கால் குதிரையாட்டம் __________ அழைக்கப்படுகிறது
- புரவிநாட்டியம்
- ஒயிலாட்டம்
- புரவி நாட்டம்
- கரகாட்டம்
விடை : புரவிநாட்டியம்
9. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது ___________ ஆகும்.
- புலி ஆட்டம்
- ஒயிலாட்டம்
- புரவி நாட்டம்
- கரகாட்டம்
விடை : புலி ஆட்டம்
10. தப்பாட்டம் _________ எனவும் அழைக்கப்படுகிறது.
- பறை
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- கரகாட்டம்
விடை : பறை
11. தெருக்கூத்தை தமிழக்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்
- பேரா. லூர்து
- அ.கி.பரந்தாமனார்
- ந.முத்துசாமி
- வானமாமலை
விடை : ந.முத்துசாமி
12. நாடகக்கலையை மீட்டெடுப்பதை குறிக்கோளாக கொண்டவர்
- பேரா. லூர்து
- ந.முத்துசாமி
- அ.கி.பரந்தாமனார்
- வானமாமலை
விடை : ந.முத்துசாமி
13. ந.முத்துசாமி ___________ என்று அழைக்கப்படுகிறார்
- கவிஞாயிறு
- மொழிஞாயிறு
- கலைஞாயிறு
- நாடகஞாயிறு
விடை : கலைஞாயிறு
14. அர்ச்சுனன் தபசு _________________ வேண்டி நிகழ்த்தப்படுகிறது.
- பொருள்
- அருள்
- அமைதி
- மழை
விடை : மழை
குறு வினா
1. நிகழ்கலை என்பது என்ன?
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
2. ஒயிலாட்டத்தின் போது இசைக்கப்படும் இசைக்கருவிகள் யாவை?
ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு
3. பொய்க்கால் குதிரையாட்டம் சிறு குறிப்பு வரைக?
- மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.
- அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட் டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
4. காவடியாட்டம் என்பது யாது?
- “கா” என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்
- இரு முனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுந்து ஆடுவது காவடியாட்டம்.
5. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளை எழுதுக
கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.
6. காவடியாட்டத்திற்கு வழங்கப்படும் பெயர்களை எழுது
மசக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைகாவடி