இயல் 5.5 – வினா, விடை வகைகள், பொருள்கோள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 5.5 ‘Vina Vidai Vagaigal matrum Porulkal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 5.5 Vina Vidai Vagaigal matrum Porulkal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
வினா, விடை வகைகள், பொருள்கோள் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Vina Vidai Vagaigal matrum Porulkal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
Previous Lesson: புதிய நம்பிக்கை
பலவுள் தெரிக.
”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ……………. வினா. “அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது …………… விடை.
- ஐயவினா, வினா எதிர் வினாதல்
- அறிவினா, மறை விடை
- அறியா வினா, சுட்டு விடை
- கொளல் வினா, இனமொழி விடை
விடை : அறியா வினா, சுட்டு விடை
குறு வினா
இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
விடை:-
அ) மின்விளக்கின் சொடுக்கி எந்தபக்கம் இருக்கிறது? – அறியா வினா
ஆ) இதோ… இருக்கிறதே! – சுட்டு விடை
இ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறா, இல்லையா? – ஐய வினா
சிறு வினா
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்
பொருள்கோள் இலக்கணம்
பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைதல் ஆற்றுநீர்ப பொருள்கோள்
பொருள்கோள் விளக்கம்
இப்பாடலில் முயற்சி செல்வத்தை தரும். முயற்சி செய்யாமை வறுமையைத் தரும் என்று பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளும் முறையில் அமைந்திருப்பதால் அது ஆற்று நீரப்பொருள்கோள் ஆயிற்று.
கற்பவை கற்றபின்…
வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
1. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.
விடை: சுட்டுவிடை
2. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.
விடை: வினா எதிர் வினாதல் விடை
வினா விடை வகைகளைக் கண்டு எழுதுக.
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.(உற்றது உரைத்தல் விடை)
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியாவினா)
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர்விடை). நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? (ஐயவினா)
பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல் விடை)
மொழியை ஆள்வோம்
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
யாழிசை | It’s like new lute music |
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே. பாரதிதாசன் |
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand-daughter Learning by rote the verses Of a didactic compilation. Translated by Kavignar Desini |
விடை
- lute music – யாழிசை
- chamber – ஏதென்று
- to look up – எட்டிப் பார்த்தேன்
- grand-daughter – பேத்தி
- rote – நெட்டுரு
- didactic compilation – நீதிநூல் திரட்டு
அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.
வேர்ச்சொல் | எழுவாய்த் தொடர் | பெயரச்சத் தொடர் | வினையெச்சத் தொடர் | விளித் தொடர் | வேற்றுமைத் தாெடர் |
ஓடு | அருணா ஓடினாள் | ஓடிய அருணா | ஒடி வந்தாள் | அருணா ஓடாதே! | அருணாவிற்காக ஓடினாள் |
சொல் | அம்மா சொன்னார் | சொன்ன அம்மா | சொல்லிச் சென்றார் | அம்மா சொல்லாதே! | கதையைச் சொன்னார் |
தா | அரசர் தந்தார் | தந்த அரசர் | தந்து சென்றார் | அரேச தருக! | தருவற்காக அரசர் |
பார் | துளிர் பார்த்தான் | பார்த்த துளிர் | பார்த்து சிரித்தாள் | துளிரே பார்! | துளிருடன் பார்த்தேன் |
வா | குழந்தை வந்தது | வந்த குழந்தை | வந்தது குழந்தை | குழந்தையே வா! | வேற்றுமைத் தொடர் |
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1 . கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
விடை: அழகிய குளிர்ந்த கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .
2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .
விடை: பழம் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .
3 . வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .
விடை: சொந்தங்களோடு வாழும் வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4 . கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .
விடை: ஒழுக்கத்துடன் கற்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .
5 . குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும் .
விடை: விடைத்தாள்களை குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
மொழியோடு விளையாடு
தொடர்களை முழுமை செய்க.
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ____________ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ____________ நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல்; புதைத்தல்)
விடை: புதையல்; புதைத்தல்
2. காட்டு விலங்குகளைச் ____________ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ____________ திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
விடை: சுடுதல். சுட்டல்
3. காற்றின் மெல்லிய ____________ பூக்களைத் தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான ____________ பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)
விடை: தொடுதல், தொடுத்தல்
4. பசுமையான ____________ ஐக் ____________ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
விடை : காட்சி, காணுதல்
5. பொதுவாழ்வில் ____________ கூடாது. ____________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)
விடை: நடித்தல், நடிப்பு
அகராதியில் காண்க.
1. மன்றல்
விடை: திருமணம்
2. அடிச்சுவடு
விடை: காலடிக்குறி
3. அகராதி
விடை: அகர வரிசை சொற்பொருள் நூல்
4. தூவல்
விடை: மழை/நீர்த்துளி
5. மருள்
விடை: மயக்கம்
காட்சியைக் கவிதையாக்குக.
மரங்களை வெட்டிவிட்டு மரம் பற்றிய நாடகம் நடத்தினால் நாட்டுக்கு என்ன பலம்? மரத்தை மறந்தான் மனிதன் மரம் நமக்கு வரம் மரம் நடுவோம்! மழைபெறுவோம்!! |
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்
- Emblem – சின்னம்
- Intellectual – அறிவாளர்
- Thesis – ஆய்வேடு
- Symbolism – குறியீட்டியல்
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “புதிய நம்பிக்கை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. வினா ___________ வகைப்படும்
- 4
- 9
- 6
- 8
விடை: 6
2. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல் என்பது _____________
- அறியா வினா
- அறி வினா
- கொளல் வினா
- கொடை வினா
விடை: அறி வினா
3. அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது _____________ ஆகும்
- அறி வினா
- அறியா வினா
- கொளல் வினா
- கொடை வினா
விடை: அறியா வினா
4. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல் _____________ ஆகும்
- அறியா வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஐய வினா
விடை: அறியா வினா
5. விடை _____________ வகைப்படும்.
- 6
- 8
- 7
- 9
விடை: 8
6. ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் _____________ ஆகும்
- மறை விடை
- சுட்டு விடை
- நேர் விடை
- வினா எதிர் வினாதல் விடை
விடை: சுட்டு விடை
7. பொருள்கோள் _________ வகைப்படும்
- 4
- 5
- 7
- 8
விடை: 8
குறு வினா
1. மறை விடை என்பது என்ன?
மறை விடை என்பது மறுத்துக் கூறும் விடை ஆகும்
- கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.
2. ஏவல் விடை என்பது என்ன?
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.
- இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுதல்.
3. வினா எதிர் வினாதல் விடை என்பது என்ன?
வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.
- ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுதல்.
4. இனமொழி விடை என்பது என்ன?
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.
- “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.
5. பொருள்கோள் என்பது என்ன?
பொருள்கோள் என்பது செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறையை குறிக்கிறது.
6. பொருள்கோள் வகையினை எழுதுக
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறிமாற்றுப் பொருள்கோள்