Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.3 Agananuru Book Back Solution

இயல் 5.3 – அகநானூறு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 5.3 ‘Agananuru’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 5.3 அகநானூறு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 5.3 Agananuru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

அகநானூறு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Agananuru’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சீறாப்புராணம்

நூல்வெளி

  • அகநானூறு 145 புலவர்கள் பாடல்களின் தொகுப்பாகும்.
  • (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
  • களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.
  • இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்
  • நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.
  • இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
  • வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பதியாக இடம் பெற்றுள்ளது.
திணை பாடல் வரிசை எண்ணிக்கை
பாலை 1, 3, 5, 7… 200
குறிஞ்சி 2, 8, 12, 18… 80
முல்லை 4, 14, 24, 34… 40
மருதம் 6, 16, 26, 36… 40
நெய்தல் 0, 20, 30, 40… 40

சொல்லும் பொருளும்

  • கொண்மூ – மேகம்
  • சமம் – போர்
  • விசும்பு – வானம்
  • அரவம் – ஆரவாரம்
  • ஆயம்  – சுற்றம்
  • தழலை, தட்டை – பறவைகள் ஓட்டும் கருவிகள்

இலக்கணக்குறிப்பு

  • அருஞ்சருமம் – பண்புத்தொகை
  • வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
  • எறிவாள் – வினைத்தொகை
  • அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலி
  • பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறு வினா

1. நெருங்கின, இரங்கி – உறுப்பிலக்கணம் தருக

நெருங்கின = நெருங்கு + இன் + அ

  • நெருங்கு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

இரங்கி = இரங்கு + இ

  • இரங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

சிறு வினா

1. மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சி பொருள் யாது

  • மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள்.
  • வேங்கைமலர் அணிந்து தலைவி, தோழியருடன் தழலை, தட்டை  என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பிப் பறவைகளை ஒட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
  • அங்கே மழை பொழிவாயக என்று மேகத்திடம் கூறுவதுபோல், தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.
  • இதில் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருளாளவது, தலைவி தினப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் சென்று சந்திக்கலாம் என்பதாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சீறாப்புராணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது ____________ பாடல்களின் சிறப்பு

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : அகநானூறு

2. அகநானூறு __________ புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு

  1. 125
  2. 135
  3. 145
  4. 155

விடை : 145

3. அகநானூறு ___________ வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை : 3

4. அகநானூற்றின் வேறு பெயர் _____________

  1. புறநானூறு
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. நெடுந்தொகை

விடை : நெடுந்தொகை

5. நெடுந்தொகை நானூறு என்ற பெயருடைய நூல்

  1. புறநானூறு
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. அகநானூறு

விடை : அகநானூறு

6. பாலை நிலத்தின் பெரும்பொழுது _________, _________

  1. கூதிர், முன்பனி
  2. இளவேனில், முதுவேனில்
  3. கூதிர், முதுவேனில்
  4. இளவேனில், முன்பனி

விடை : இளவேனில், முதுவேனில்

7. முல்லை நிலத்தின் சிறுபொழுது

  1. மாலை
  2. வைகறை
  3. எற்பாடு
  4. யாமம்

விடை : மாலை

8. பொருந்தாததை தேர்க

  1. நெய்தல் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
  2. குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
  3. மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
  4. முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

விடை : நெய்தல் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

9. அகநானூற்றின் அடிவரை __________ முதல் _________ வரை

  1. 3 அடி முதல் 6 அடிவரை
  2. 4 அடி முதல் 8 அடிவரை
  3. 9 அடி முதல் 12 அடிவரை
  4. 13 அடி முதல் 31 அடிவரை

விடை : 13 அடிமுதல் 31 அடிவரை

10. களிற்றியானை நிரையில் ________ பாடல்கள் உள்ளன

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 120

11. மணிமிடைப்பவள நிரையில் ________ பாடல்கள் உள்ளன

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 180

12. நித்திலக் கோவை நிரையில் ________ பாடல்கள் உள்ளன

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 100

13. அகநானூற்றின் பாடல்களை தொகுத்தவர்

  1. பூரிக்கோ
  2. கூடலூர் கிழார்
  3. பாண்டியன் உக்கிரப் பெருவதியார்
  4. மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

விடை : மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

14. அகநானூற்றைத் பாடல்களை தொகுப்பித்தவர்

  1. பூரிக்கோ
  2. கூடலூர் கிழார்
  3. பாண்டியன் உக்கிரப் பெருவதி
  4. மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

விடை : பாண்டியன் உக்கிரப் பெருவதி

15. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தினை பாடியவர்

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  2. கபிலர்
  3. கும்பர்
  4. வரந்தருவார்

விடை : பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருத்துக

  1. பாலை – அ. வைகறை
  2. நெய்தல் – ஆ. மாலை
  3. மருதம் – இ. நண்பகல்
  4. முல்லை – ஈ. ஏற்பாடு

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. அகநானூற்றின் பிரிவுகளை எழுதுக

களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

2. அகத்திணையின் வகைகளை எழுதுக

குறிஞ்சி, முல்லை, மருததம், நெய்தல், பாலை

3. சிறுபொழுதுகளின் வகைகளை எழுதுக

காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை

4. பெரும்பொழுதுகளின் வகைகளை எழுதுக

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

5. கரும்பொருள்கள் யாவை?

தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், பூ, மரம், நீர், உணவு, பறை, யாழ், பண், தொழில்

சிறுவினா

1. அகநானூறு நூற்குறிப்பு வரைக

  • (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
  • 145 புலவர்கள் அகநானூற்றினை பாடியுள்ளனர்.
  • இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்.
  • களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.

2. குறிஞ்சித்திணை – விளக்குக

  • “புணர்தலும் புணர்தல் நிமித்தமும்” என்னும் உரிப்பொருளைக் கொண்ட அகப்பாடல் குறிஞ்சித்திணைக்குரியது.
  • சிறுபொழுது – யாமம், பெரும்பொழுதுகள் – குளிர்காலம், முன்பனிக்காலம்,  தெய்வம், உணவு, ஊர், தொழில் முதலான கருப்பொருளை கொண்டமைவது குறிஞ்சித் திணையாகும்.

3. முல்லை திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் திருமால் (மாயோன்)
மக்கள் குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
பறவை காட்டுக்கோழி
விலங்கு முயல், மான்
ஊர் பாடி
பூ முல்லை, பிடவம், தோன்றி
மரம் கொன்றை, காயா, குருத்தம்
நீர் குறுஞ்சுனை, கானாறு
உணவு வரகு, சாமை, முதிரை
பறை ஏறுகோட்பறை
யாழ் முல்லையாழ்
பண் சாதரிப்பண்
தொழில் சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல்

4. குறிஞ்சி திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் முருகன் (சேயோன்)
மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், கானவர்
புள் (பறவை) கிளி, மயில்
விலங்கு புலி, கரடி, சிங்கம், யானை
ஊர் சிறுகுடி
நீர் அருவி நீர், சுனை நீர்
பூ வேங்கை, காந்தள், குறிஞ்சி
மரம் அகில், சந்தனம், தேக்கு, மூங்கில்
உணவு மலைநெல், தினை, மூங்கிலரசி
பறை தொண்டகப்பறை
யாழ் குறிஞ்சி யாழ்
பண் சாதரிப்பண்
தொழில் வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்

5. மருதம் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் வேந்தன்
மக்கள் ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள் (பறவை) நாரை,மகன்றில், அன்னம்
விலங்கு எருமை, நீர்நாய்
ஊர் பேரூர், மூதூர்
நீர் ஆற்றுநீர், கிணற்று நீர், குளத்து நீர்
பூ குவளை, தாமரை
மரம் மருதம், வஞ்சி, காஞ்சி
உணவு செந்நெல், வெண்ணெல்
பறை மணமுழவு, நெல்லரிகிணை
யாழ் மருத யாழ்
பண் மருதப்பண்
தொழில் நெல்லரிதல், வயலில் களை கட்டல்

6. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் வருணன்
மக்கள் சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதன், பரத்தியர்
புள் (பறவை) கடற்காகம்
விலங்கு சுறாமீன்
ஊர் பாக்கம், பட்டிணம்
நீர் சுவர்நீர்க் கேணி, உவர் நீர்க்கேணி
பூ நெய்தல், தாழை
மரம் புன்னை, ஞாழல்
உணவு உப்பும் மீனும் விற்றப் பொருள்
பறை மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
யாழ் விளரி யாழ்
பண் செல்வழிப்பண்
தொழில் உப்பு உண்டாக்கல் விற்றல், மீன் பிடித்தல் உணக்கல்

7. பாலை திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் வருணன்
மக்கள் விடலை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள் (பறவை) புறா, பருந்து, கழகு
விலங்கு செந்நாய்
ஊர் குறும்பு
நீர் நீரில்லாக்குழி, கிணறு
பூ குராஅம்பூ, மராம்பூ
மரம் உழிஞை, ஓமை, பாலை
உணவு வழியிற் பறித்த பொருள்கள்
பறை துடிப்பறை
யாழ் பாலை யாழ்
பண் பஞ்சுரப்பண்
தொழில் போர் செய்தல், சூறையாடல்

10. ஐந்திணைகளின் முதற்பொழுதுகளைம், அதன் உரிப்பொருள்களையும் கூறுக

குறிஞ்சி

  • பெரும்பொழுது – குளிர்காலம், முன்பனிக்காலம்
  • சிறுபொழுது – யாமம்
  • உரிப்பொருள் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை

  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை
  • உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம்

  • பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
  • சிறுபொழுது – வைகறை
  • உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்

  • பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
  • சிறுபொழுது – எற்பாடு
  • உரிப்பொருள் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை

  • பெரும்பொழுது – இளவேனில், முதுவேனில், பின்பனி
  • சிறுபொழுது – நண்பகல்
  • உரிப்பொருள் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

Leave a Comment