Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 Athili Kuruvigal Book Back Solution

இயல் 2.2 – ஏதிலிக்குருவிகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 2.2 ‘Athili Kuruvigal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 2.2 ஏதிலிக்குருவிகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 2.2 Iyarkai Velanmai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

ஏதிலிக்குருவிகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Athili Kuruvigal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: இயற்கை வேளாண்மை

நூல் வெளி

  • வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நத அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன்.
  • அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.
  • நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர்.
  • “தகப்பன் கொடி” புதினத்திற்காக 2003-ம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும்  மீள்கோணம், பெருகும் வேட்கை  உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரின் படைப்புகள்

தெரியுமா?

மார்ச் 20 – உலகச் சிட்டுக்குருவிகள் நாள்

பலவுள் தெரிக

பொருத்தமான இலக்கிய வடிவம் எது ____________

  1. ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
  2. திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
  3. யானை டாக்டர் – குறும்புதினம்
  4. ஐங்குறுநூறு – புதுக்கவிதை

விடை : யானை டாக்டர் – குறும்புதினம்

குறு வினா

ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது?

  • இன்று மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
  • மழைபெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
  • இயற்கைச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதால், வாா்வதற்கான சூழல் ஆதரவற்றனனவாய்க் குருவிகள் இருப்பிடம் தேடி அலைந்தன.

சிறு வினா

காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்

  • காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு தூக்கணாங்குருவியின் கூடாகும்.
  • காற்றில் ஆடும் புல்லைக் கொண்டு கரங்கள் இல்லாமல் தன் அலகால் புல் வீடு கட்டும் தூக்கணாங்குருவியின் அழகைக் கண்டால் நம் மெய்சிலிர்க்கும். அந்த கூடுதான் தூக்கணாங்குருவியின் வீடு.
  • அதனால் தான் கவிஞர் தூக்கணாங்குருவி கூட்டை காற்றில் ஆடும் வீடுகள் என்று ஒப்பாக கூறினார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஏதிலிக்குருவிகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கீழ்கண்டவற்றுள் அழகிய பெரியவனின் இயற்பெயர்

  1. அரவிந்தன்
  2. ராசேந்திரன்
  3. வில்வரத்தினம்
  4. ராசகோபாலன்

விடை : அரவிந்தன்

2. அழகிய பெரியவன் _____________ ஊரில் பிறந்துள்ளார்

  1. யாழ்ப்பாணம்
  2. சென்னிமலை
  3. அழகர்மலை
  4. பேராணம்பட்டு

விடை : பேராணம்பட்டு

3. அழகிய பெரியவன்  ___________ மாவட்டத்தில் பிறந்தவர்.

  1. திருநெல்வேலி
  2. மதுரை
  3. வேலூர்
  4. தேனி

விடை : வேலூர்

4. அழகிய பெரியவன் ____________ நூலிற்காக தமிழக அரசு விருது பெற்றுள்ளார்

  1. குறடு
  2. தகப்பன் கொடி
  3. நெறிக்கட்டு
  4. வடக்குவீதி

விடை : தகப்பன் கொடி

5. உலகச் சிட்டுக் குருவிகள் தினம்

  1. மார்ச் 20
  2. பிப்ரவரி 20
  3. ஏப்ரல் 20
  4. மே 20

விடை : மார்ச் 20

6. கரைகின்ற என்பதன் பொருள்

  1. ஒலிக்கின்ற
  2. இசைக்கின்ற
  3. கத்துகின்ற
  4. பாடுகின்ற

விடை : கத்துகின்ற

7. மழைக்காலம் இலக்கணக்குறிப்பு தருக

  1. இருபெயரொட்டு பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. எண்ணும்மை
  4. பெயரெச்சம்

விடை : இருபெயரொட்டு பண்புத்தொகை

8. கரைகின்ற இலக்கணக்குறிப்பு தருக

  1. இருபெயரொட்டு பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. எண்ணும்மை
  4. பெயரெச்சம்

விடை : பெயரெச்சம்

குறு வினா

அழகிய பெரியவன் குறிப்பு வரைக

  • வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நதவர்.
  • இயற்பெயர் – அரவிந்தன்.
  • அரசு பள்ளி ஆசிரியர்.
  • நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை படைப்பவர்.
  • “தகப்பன் கொடி” புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன இவர் படைப்புகள்

Leave a Comment