Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 Pathitrupathu Book Back Solution

இயல் 7.3 – பதிற்றுப்பத்து

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 7.3 ‘Pathitrupathu’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 7.3 பதிற்றுப்பத்து

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 7.3 Pathitrupathu Kavi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

பதிற்றுப்பத்து வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Pathitrupathu’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: புரட்சிக்கவி

நூல் வெளி

  • எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.
  • சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது.
  • இது பாடாண் திணையில் அமைந்துள்ளது.
  • முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை.
  • ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம் தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம் பெற்றிருக்கின்றன.
  • பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்கு தலைப்பாக தரப்பட்டிருக்கிறது.
  • பாடல்பகுதிக்குப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் நிரையபாலரைப் போல் (நகரத்து வீரர்கள்) படை வெள்ளமாக நின்றதால் “நிரைய வெள்ளம்” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பத்தியின் பாட்டுடைத் தலைவன் “இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்”.
  • இவனைப் பாடிய  குமட்டூர் கண்ணனார். உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியைும் பரிசாகப் பெற்றார்.

சொல்லும் பொருளும்

  • பதி – நாடு
  • பிழைப்பு – வாழ்தல்
  • நிரையம் – நரகம்
  • ஒரீஇய – நோய் நீங்கிய
  • புரையோர் – சான்றோர்
  • யாணர் – புது வருவாய்
  • மருண்டெனன் – வியப்படைந்தேன்
  • மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா – ஓயாத
  • கடுந்துப்பு – மிகுவலிமை
  • ஏமம் – பாதுகாப்பு
  • ஒடியா – குறையா
  • நயந்து – விரும்பிய

இலக்கணக்குறிப்பு

  • ஒரீஇய – சொல்லிசை அளபெடை
  • புகழ்பண்பு – வினைத்தொகை
  • நன்னாடு – பண்புத்தொகை
  • துய்த்தல் – தொழிற்பெயர்
  • மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
  • ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

மருண்டனென் =  மருள் (ண்) + ட் + அன் + என்

  • மருள் – பகுதி
  • “ள்” “ண்” ஆனது விகாரம்
  • அன் – சரியை
  • என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

துய்த்தல் = துய் + த் + தல்

  • தய் – பகுதி
  • த் – சந்தி
  • தல் – தொழில்பெயர் விகுதி

புணர்ச்சி விதிகள்

மண்ணுடை = மண் + உடை

  • “தனிக்குறில்முன் ஒற்று உயரிவரின் இரட்டும்” என்ற விதிப்படி “மண்ண் + உடை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மண்ணுடை” என்றாயிற்று.

புறந்தருதல் = புறம் + தருதல்

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” என்ற விதிப்படி “புறந்தருதல்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

கூற்று :  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பதத்து புறம் சார்ந்த நூல்
காரணம் :  சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்

  1. கூற்று சரி; காரணம் தவறு
  2. இரண்டும் சரி
  3. இரண்டிற்கும் தொடர்பு இல்லை
  4. கூற்று தவறு; காரணம் சரி

விடை : இரண்டும் சரி

குறு வினா

செந்துறைப் பாடாண் பாட்டு – துறை விளக்கம் எழுதுக?

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறவது “பாடாண்” எனப்படும்.
  • உலகினுள் இயற்கை வகையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

சிறு வினா

சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களை குறிப்பிடுக

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும், மக்களையும் கண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள். பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பதிற்றுப்பத்து” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. உறுபசியும் ஓவாப் பணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
என்று பாடியவர்

  1. மணிமேகலை
  2. திருவள்ளுவர்
  3. ஒளவையார்
  4. கோவூர்கிழார்

விடை : திருவள்ளுவர்

2. உதியன் சேரலாதன், வேண்மாள் இவர்களின் மகன்

  1. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  2. செங்குட்டுவன்
  3. இளங்கோவடிகள்
  4. கவுந்தி அடிகள்

விடை : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

3. பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி இத்தொடரில் வாழ்தல் என்னும் பொருளுடைய சொல்

  1. எய்தி
  2. துய்த்தல்
  3. பிழைப்பு
  4. பதி

விடை : பிழைப்பு

4. இமயமலை வரை சென்று, வென்று இமயத்தில் வில்லினை பொறித்தவன்

  1. செங்குட்டுவன்
  2. இளம்பெருவழுதி
  3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  4. கரிகாலன்

விடை : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

5. சேர மன்னர் சிறப்புகளை எடுத்தியம்புவது 

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. புறப்பொருள் வெண்பாமாலை

விடை : பதிற்றுப்பத்து

6. கடம்பர்களை வென்றவனாக கருதப்படுபவன்

  1. உதியன் சேரலாதன்
  2. கரிகாலன்
  3. செங்குட்டுவன்
  4. நெடுஞ்சேரலாதன்

விடை : நெடுஞ்சேரலாதன்

7. கைக்கிளை திணைக்குப் புறனாக அமைந்த திணை

  1. பெருந்திணை
  2. வெட்சித்தணை
  3. பாடாண் திணை
  4. வாகைத்திணை

விடை : பாடாண் திணை

8. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பதத்தை பாடியவர்

  1. கபிலர்
  2. குமட்டூர்க் கண்ணனார்
  3. பரணர்
  4. ஒளவையார்

விடை : குமட்டூர்க் கண்ணனார்

9. பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கலாறுகளைக் பற்றிய செய்திகளை கூறும் திணை

  1. பாடாண்
  2. கரந்தை
  3. வஞ்சி
  4. பொதுவியில்

விடை : பாடாண்

குறு வினா

1. திருவள்ளுவர், சிறந்த நாடு குறித்துக் கூறும் செய்தி யாது?

மிகு பசியும், தீராநோயும் பெரும்பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

2. சேரலாதன் எச்சிறப்புகளைக் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்?

சேரலாதனின் நாடுகாத்தல் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் குமட்டுக் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்.

3. சேரலாதன் குறிப்பு வரைக

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் நெடுஞ்சேரலாதன்
  • இமயம் வரை படை நடத்தி வெற்றி பெற்றவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுகக்கு கவசமாக விளங்கியவன்.
  • தமிழின் சிறப்பை உலகரியச் செய்தவன்.

4. பாடான் திணை விளக்குக

  • பாடு + ஆண் + திணை = பாடாண்திணை
  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறவது
  • அதாவது ஒரு சிறந்த தலைவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலிய பண்புகளை ஆராய்ந்து கூறவதாகும். கைக்கிளைத் திணைக்குப் பாடான் திணை புறனாகும்.

Leave a Comment