இயல் 3.4 – புறநானூறு
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.4 ‘Purananuru’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.4 புறநானூறு
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.4 Purananuru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.
புறநானூறு வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Purananuru’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
நூல்வெளி
- புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.
- புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.
- அகவற்பாக்களால் ஆனது.
- புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
- இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்
- கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.
- இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.
சொல்லும் பொருளும்
- தமியர் – தனித்தவர்
- முனிதல் – வெறுத்தல்
- துஞ்சல் – சோம்பல்
- அயர்வு – சோர்வு
- மாட்சி – பெருமை
- நோன்மை – வலிமை
- தாள் – முயற்சி
இலக்கணக்குறிப்பு
- அம்ம – அசைநிலை
- துஞ்சல் – தொழிற்பெயர்
- முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
துஞ்சல் = துஞ்சு + அல்
- துஞ்சு – பகுதி
- அல் – தொழிற்பெயர் விகுதி
முனிவிலர் = முனி + வ் + இல் + அர்
- முனி – பகுதி
- வ் – உடம்படுமெய், சந்தி
- இல் – எதிர்மறை இடைநிலை
- அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
- “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி இயைவத் + ஆயினும் என்றாயிற்று.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இயைவதாயினும் என்றாயிற்று.
பலவுள் தெரிக
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க
1. வெள்ளிவீதியார் – அ. புறநானூறு
2. அண்ணாமலையார் – ஆ. வாடிவாசல்
3. சு.ச. செல்லப்பா – இ. குறுந்தொகை
4. இளம்பெருவழுதி – ஈ. காவடிச்சிந்து
- அ, ஆ, இ, ஈ
- ஆ, ஈ, அ, இ
- இ, ஈ, ஆ, அ
- இ, ஈ, அ, ஆ
விடை : இ, ஈ, ஆ, அ
இனிதென இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
விடை : உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
குறு வினா
தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
- புகழ் : புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்
- பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சிறு வினா
புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களை குறிப்பிடுக
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழ தவர்
(பழி நீங்கிப் புகழோடு வாழ்பவரே வாழ்பவராவார்; புகழன்றிப் பழியோடு வாழ்பவர் வாழதவரே ஆவர்)
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
(உலகம் அஞ்சம் செயல்களைச் செய்வது அறியாமை; உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல்)
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “புறநானூறு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. புறநானூறு என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது
- புறம் + நான்கு + நூறு
- புறம் + நானூறு
- புற + நானூறு
- புறம் + நாலு + நூறு
விடை : புறம் + நான்கு + நூறு
2. தமிழரின் வாழ்வியலின் கருவூலமாகக் திகழ்வது
- புறநானூறு
- அகநானூறு
- கலித்தொகை
- பதிற்றுப்பத்து
விடை : புறநானூறு
3. புறம், புறப்பாட்டு எனவும் _____________ கூறுவர்
- நற்றிணை
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
விடை : புறநானூறு
4. புறநானூற்றில் சிலவரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
- ஜார்ஜ் எல்.ஹார்ட்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
விடை : ஜி.யு.போப்
5. ஜி.யு.போப் புறநானூற்றில் சிலவரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
- 1886
- 1900
- 1885
- 1912
விடை : ஜி.யு.போப்
6. ஜி.யு.போப் தன்னுடைய ___________ வயதில் புறநானூற்றை மொழிபெயர்த்துள்ளார்
- 75
- 80
- 77
- 85
விடை : 80
7. புறநானூறு __________ பாக்களால் ஆனது.
- அகவற்பா
- வெண்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
விடை : அகவற்பா
8. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய மற்றொரு பாடல் ___________ நூலில் அமைந்துள்ளது.
- நற்றிணை
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
விடை : பரிபாடல்
9. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படதாத செய்திகளை __________ கூறுகிறது.
- குறிஞ்சி திணை
- முல்லை திணை
- பெருந்திணை
- பொதுவியல் திணை
விடை : பொதுவியல் திணை
10. உ.வே.சா புறநானூற்றை முதன் முதலில் ___________ ஆண்டு பதிப்பித்துள்ளார்
- 1894
- 1984
- 1994
- 1876
விடை : 1894
11. கொடுக்குவர் என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம்
- கொடு + க் + கு + அவர்
- கொடு + க் + கு + வ் + அர்
- கொடுக் + கு + வ் + அர்
- கொடுக்கு + வ் + அர்
விடை : கொடு + க் + கு + வ் + அர்
12. அஞ்சி என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம்
- அஞ்சி + இ
- அஞ்சு + இ
- அஞ் + சி + இ
- அஞ் + ச் + இ
விடை : அஞ்சு + இ
13. அஞ்சுவதஞ்சி ஆகியவற்றின் புணர்ச்சி விதிகளை கூறுக
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஆ) உயிர் வரின்…. முற்றும் அற்று
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) இ ஈ ஐ வழி யவ்வும்
- அ, ஆ சரி
- ஆ, இ சரி
- அ, இ சரி
- இ, ஈ சரி
விடை : அ, இ சரி
குறு வினா
1. பொதுவியில் திணை என்பது என்ன?
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.
2. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்பது என்ன?
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.
3. புறநானூறு பற்றிய குறிப்பு வரைக
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.
- புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.
- அகவற்பாக்களால் ஆனது.
- சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
- பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.
4. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பெயர்க்காரணம் தருக
கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.