Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.2 Puratchi Kavi Book Back Solution

இயல் 7.2 – புரட்சிக்கவி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 7.2 ‘Puratchi Kavi’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 7.2 புரட்சிக்கவி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 7.2 Puratchi Kavi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

புரட்சிக்கவி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Puratchi Kavi’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: காற்றில் கலந்த பேராேசை

நூல் வெளி

  • வடமொழியில் எழுதப்பட்ட பீல்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி பாரதிதாசனால் 1937-ல் எழுதப்பட்டது புரட்சிக்கவி
  • பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • பிரெஞ்சு மொழில் அமைந்த தொழிலாளர் நலச்சட்டத்தை தமிழ் வடிவில் தந்தார்.
  • குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம் ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியுள்ளார்.
  • குயில் என்ற இதழை நடத்தியவர்.
  • இவருடைய “பிசிராந்தையார்” நாடகத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசு தனது தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

சொல்லும் பொருளும்

  • ஒதுக – சொல்க
  • முழக்கம் – ஓங்கி உரைத்தல்
  • கனிகள் – மாணிக்கம்
  • படிக்க – பளபளப்பான கல்
  • மீட்சி – விடுதலை
  • நவை – குற்றம்
  • படி – உலகம்

இலக்கணக்குறிப்பு

  • ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
  • அலைகடல் – வினைத்தொகை
  • தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நெடுங்குன்று, பேரன்பு – பண்புத்தொகை
  • ஒழிதல் – தொழிற்பெயர்
  • உழுதுழுது – அடுக்குத்தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. நின்றார் = நில் (ன்) + ற் + ஆர்

  • நில் – பகுதி
  • “ல்” “ன்” ஆனது விகாரம்
  • ற் – இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. செய்வான் = செய் + வ் + ஆன்

  • செய் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

3. அழைத்தான் = அழை + த் + த் + ஆன்

  • அழை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

4. வேண்டுகின்றேன் = வேண்டு + கின்று + ஏன்

  • வேண்டு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

5. ஆழ்க = ஆழ் + க

  • ஆா் – பகுதி
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

6. பறித்தார் = பறி + த் + த் + ஆர்

  • பறி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. நீரோடை – நீர் + ஓடை

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நீரோடை” என்றாயிற்று.

2. சிற்றூர் – சிறுமை + ஊர்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “சிறு + ஊர்” என்றாயிற்று.
  • “தன்னொற்றிரட்டல்” என்ற விதிப்படி “சிற்று + ஊர்” என்றாயிற்று.
  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “சிற்ற் + ஊர்” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “சிற்றூர்” என்றாயிற்று.

3. கற்பிளந்து = கல் + பிளந்து

  • “ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்” என்ற விதிப்படி “கற்பிளந்து” என்றாயிற்று.

4. மணிக்குளம் = மணி + குளம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “மணிக்குளம்” என்றாயிற்று.

5. அமுதென்று = அமுது + என்று

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “அமுத் + என்று” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “அமுதென்று” என்றாயிற்று.

6. புவியாட்சி = புவி + ஆட்சி

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “புவி + ய் + ஆட்சி” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “புவியாட்சி” என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன் – யார் யாரிடம் கூறியது?

  1. அமைச்சர் கவிஞரிடம்
  2. மன்னன் அமைச்சரிடம்
  3. அமைச்சர் மன்னனிடம்
  4. மன்னன் அமுதவல்லியிடம்

விடை : அமைச்சர் மன்னனிடம்

குறு வினா

1. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள் வலிமையால் பாழ்நிலத்தைப் பயன்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும், சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

2. அலைகடல், பதுக்கியவர் – இலக்கணக்குறிப்பு தருக.

  • அலைகடல் – வினைத்தொகை
  • பதுக்கியவர் – வினையாலணையும் பெயர்

சிறுவினா

1. உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள் இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக

இடம்:-

பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்

பொருள்:-

உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்

இடம்:-

கொலைத்தண்டணை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதாரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினாள். “யானறிந்த தமிழே என் மரணத்துக்கு காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

2. பெருங்காடு, உழுதுழுது – இலக்கணக்குறிப்பு தருக.

பெருங்காடு = பெருமை + காடு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + காடு” என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி “பெருங்காடு” என்றாயிற்று.

உழுதுழுது = உழுது + உழுது

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “உழுத் + உழுது” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உழுதுழுது” என்றாயிற்று.

நெடு வினா

பாரதிதாசன் ஒரு “புரட்சிக்கவி” என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்பிக்க

உதாரன் புரட்சிக்கவி:-

வடமொழியில் எழுதப்பட்ட “பில்கணீயம்” காவியத்தைத் தழுவிப் பாரதிதாசன் “புரடசிக்கவி”யைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம் பெற்றவன் “உதாரன்”

தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து, உதாரன் மக்களாட்சியை நிறுவுகிறான். அதற்கு ஆற்றிய வீரவுரைகளே காரணம். அவ்வுரைகள் அத்தனையும் பாரதிதாசன் சிந்தையில் உருவானவையே

வாய்ப்பைப் பயன்படுத்தும் உதாரன்:-

தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசி அமுதவல்லிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்ட கவிஞன் உதாரன், கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான். அவர்கள் இறுதியல் காதலர்களாயினர். அதனால் மரண தண்டனைக்கு உள்ளாகி, இருவரும் கொலைக்களம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே கிடைத்த வாய்ப்பைத் தனதாக்கிப் புரட்சிக்காரனாகிறான் கவிஞன். இங்குக் கவிஞன் உதாரனின் முழக்கமெல்லாம் பாவேந்தரின் கருத்துகளே என்பதில் ஐயமில்லை!

பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த நலன்களை, உதாரன் பட்டியிலிடுகிறான்! “பாழ் நிலத்தை அந்நாளில் பதுக்கியவர் யார்?” “பயன் விளைவிக்கும் நின்ற உழைப்பு தோள்கள் எவரின் தோள்கள்?” கருவியெலாம் செய்த அந்தக் கைதான் யார் கை?” “கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?” இவையெல்லாம் பாரதிதாசனது உணர்ச்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன.

உதாரன் புரட்சியைத் தூண்டுதல்:-

மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்பியதல் கவிஞன் உதாரன் தனக்குமும், அரசனுக்கும் உண்டான வழக்கின் அடிப்படைய எடுத்துரைக்கிறான்.

“மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?” என்னும் சிந்தனையத் தூண்டி, “மக்களுக்காக மட்டுமே ஆட்சி இருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாவேந்தர், உதாரன் வாய்மொழியாக வைத்து, “ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அந்தத் தேசம் ஒழிதல் நன்றாம்” எனக் கூறுகின்றார்

புரட்சிக்கவியின் தமிழ்ப்பற்று:-

தமிழின்மேல் தமக்குள்ள பற்றுதலைப் பாவேந்தர் உதாரன் மூலமாக வெளிபடுத்துகிறார். “அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று சமுதாயம் நினைத்திடுமோ? அஞ்சுவதாகக் கூறி, “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? என வேதனைப்படுகிறான்

எனவே மக்களை நோக்கி “உமை ஒன்று வேண்டுகின்றேன்; மாசில்லாத உயர் தமிழை உயிர் என்று போற்று மின்கள்” என்கிறான். இவை அனைத்தும் பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவியே என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புரட்சிக்கவி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

இலக்கணக்குறிப்பு

  • நிறைஉழைப்பு – வினைத்தொகை
  • உயர்தமிழ் – வினைத்தொகை
  • வீழ்கொள்ளி – வினைத்தொகை
  • பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள் – பண்புத்தொகைகள்
  • பதைபதைத்து – அடுக்குத்தொடர்
  • பூட்டி – வினையெச்சம்
  • வந்திருந்தார். கொண்டவர் – வினையாலணையும் பெயர்
  • எலாம் – இடைக்குறை
  • கண்ணீர்வெள்ளம் – உருவகம்

புணர்ச்சி விதிகள்

1. பொற்றுகளை = பொன் + துகளை

  • “னலமுன் றன ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “பொன் + றுகளை” என்றாயிற்று.
  • “ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்” என்ற விதிப்படி “பொற்றுகளை” என்றாயிற்று.

2. பேரன்பு – பெருமை + அன்பு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + அன்பு” என்றாயிற்று.
  • “ஆதிநீடல்” என்ற விதிப்படி “பேரு + அன்பு” என்றாயிற்று.
  • “முற்றும் அற்று ஓரோவழி” என்ற விதிப்படி “பேர் + அன்பு” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பேரன்பு” என்றாயிற்று.

3. இளஞ்சிங்கம் = இளமை + சிங்கம்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “இள + சிங்கம்” என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி “இளஞ்சிங்கம்” என்றாயிற்று.

4. நன்னாடு = நன்மை + நாடு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நன் + நாடு” என்றாயிற்று.
  • “னலமுன் றன ஆகும் தநகக்கள்” என்ற விதிப்படி “நன்னாடு” என்றாயிற்று.

5. தலைப்பாகை = தலை + பாகை

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “தலைப்பாகை” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. புரட்சிக்கவி நூல் எழுதப்பட்ட ஆண்டு

  1. 1939
  2. 1937
  3. 1941
  4. 1943

விடை : 1937

2. பீலிகணீயம் எழுதப்பட்ட மொழி

  1. லத்தீன்
  2. வங்காளம்
  3. வட மொழி
  4. சீன மொழி

விடை : வட மொழி

3. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்

  1. தென்றல்
  2. குயில்
  3. கோகுலம்

விடை : குயில்

4. சிரம் அறுத்தலை பொழுதுபோக்காக கருதுபவன்

  1. கவிஞர்
  2. அமைச்சர்
  3. வேந்தர்
  4. படைத்தலைவன்

விடை : வேந்தர்

5. பாரதிதாசன் புரட்சிக்கவிக் காவியத்தை …………… தழுவி எழுதினார்

  1. பாரதம்
  2. சாகுநதலம்
  3. பெருங்கதை
  4. பீல்கணியம்

விடை : பீல்கணியம்

6. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்

  1. பாண்டியன் பரிசு
  2. பிசிராந்தையர்
  3. இருண்டவீடு
  4. அழகின் சிரிப்பு

விடை : பிசிராந்தையர்

7. பிசிராந்தையர் ஒரு ___________ நூல்

  1. கவிதை
  2. செய்யுள்
  3. நாடக
  4. சிறுகதை

விடை : நாடக

8. புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தொடங்கும் வரிகள்

  1. தமிழக்கு அமுதென்று பேர்
  2. வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
  3. நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
  4. என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றி மண்

விடை : வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

9. பீல்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி பாரதிதாசன் எழுதிய நூல் 

  1. புரட்சிக்கவி
  2. குடும்ப விளக்கு
  3. இருண்ட வீடு
  4. பாண்டியன் பரிசு

விடை : புரட்சிக்கவி

10. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ள இடம்

  1. திருச்சி
  2. மதுரை
  3. திருநெல்வேலி
  4. வேலூர்

விடை : திருச்சி

குறு வினா

1. மொழிபெயர்ப்பு என்பதன் விளக்கம் தருக

ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையாக இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு ஆகும்.

2. மொழிபெயர்ப்பு வகைகளை கூறுக

தழுவல், சுருக்கம், மாெழியாக்கம், நேர்மாெழிபெயர்ப்பு

3. மக்களாட்சி அடிப்படைக் கூறுகளாகப் புரட்சிக்கவி கூறுவன யாவை

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

4. பாரதிதாசன் படைப்புகள் சிலவற்றை கூறுக

குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Comment