இயல் 3.7 – திருக்குறள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.7 ‘Thirukkural’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.7 திருக்குறள்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.7 Thirukkural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.
திருக்குறள் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Thirukkural’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
Previous Lesson: பகுபத உறுப்புகள்
கற்பவை கற்றபின்
1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை கண்டுபிடிக்க
அ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்
ஆ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விடை:-
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
2. துன்பப்படுவர் _____________
- தீக்காயம் பட்டவர்
- தீயினால் சுட்டவர்
- பொருளைக் காக்காதவர்
- நாவைக் காக்காதவர்
விடை : நாவைக் காக்காதவர்
3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளை கண்டறிக
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையார் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்
அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்ற இல்
ஆ) நெருங்கல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
விடை :
நெருங்கல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
4. கீழ்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க
பூக்களும் முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாத்துக்ககும் நடுவில்
நசுங்கிறது அறம்
இன்பத்தக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளம்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முன்ற பார்க்கலாம் வா!
அ) அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
ஆ) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
விடை :
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
5. ஒப்புரவு என்பதன் பொருள்__________
- அடக்கமுடையது
- பண்புடையது
- ஊருக்கு உதவுவது
- செல்வமுடையது
விடை : நாவைக் காக்காதவர்
6. பொருத்துக
அ) வாழ்பவன் – i. காத்திருப்பவன்
ஆ) வாழாதவன் – ii. மருந்தாகும் மரமானவன்
இ) தோன்றபவன் – iii. ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல நினைப்பவன் – iv. புகழ் தரும் பண்புடையவன்
உ) பெரும் பண்டையவன் – v. இசைபொழிந்தவன்
– vi. வீழ்பவன்
விடை : அ – iii. ஆ – v, இ – iv, ஈ – i, உ – ii
7. இலக்கணக் குறிப்புத் தருக
- சுடச்சுடரும் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
- சுடச்சுடரும் பொன் – எதிர்காலப் பெயரெச்சத் தொடர்
- சுடச்சுட – அடுக்குத்தொடர்
8. விரைந்து கெடுபவன் யார்?
- பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
விடை : பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
9. வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக
- உதவிசெய்வதற்கே அறம்
10. பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
- பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
- பற்றுகள அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
- பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
- பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்
விடை : பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
11. அருவினை புணர்ச்சிவிதி கூறுக
அருவினை = அருமை + வினை
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “அருவினை” என்றாயிற்று
பாடநூல் வினாக்கள்
குறு வினா
1. தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
- தீயினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும்.
- நாவினால் சுட்டது மனதில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும்.
எனவே வள்ளவர் தீயினால் சுட்டதை “புண்” என்றும், நாவினால் சுட்டதை “வடு” எனவும் கூறுகிறார்.
2. மருந்தாகிப் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் இக்குறட்பாவின் உவமையப் பொருளோடு பொருத்துக
- மருந்தாகித் தப்பா மரம், தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப்ப பயன்படும் மரம் என்பது உவமை.
- செல்வம், பிறருக்குப் பயன்படும் வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாக கூறப்பட்டது.
- மரம் – உவமானம்; பெருந்தகையான் – உவமேயம்; பயன்படல் – பொதுத்தன்மை; “அற்று” – உவமை உருபு
3. எதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது?
நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது.
4. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணாயானவரின் வலிமை
5. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
- மருந்து – செல்வம்
- மருந்து மரமாக இருப்பவர் – பெருந்தகையாளர்
சிறு வினா
1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக
இக்குறட்ப்பாவில் பயின்று வந்துள்ள அணி வேற்றுமை அணி ஆகும்
அணி விளக்கம்
ஒரு பொருளின் ஒற்றுமையைக் கூறி பின் அவற்றின் வேற்றுமையைக் கூறவது வேற்றுமை அணி ஆகும்
பொருள் விளக்கம்
- தீயினால் சுட்ட புண்ணும், நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால் ஒற்றுமை உடையன
- புண் என்பது ஆறும்; வடு என்பது ஆறாது என்பது வேற்றுமை
- எனவே இப்பாடலில் வரும் அணி வேற்றுமை அணி ஆகும்.
2. புகழுக்குரிய குணங்களாக நீவீர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.
- உலகநடை அறிந்து அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்வது வாழ்வதே புகழுக்குரிய குணங்கள் ஆகும்.
- இணையற்ற இந்த உலகத்தில் உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை
- எனவே வாழ்ந்தால் புகழ் தரும் பண்புகளுடன் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்தே நல்லது. ஏனெனில், பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார். புகழ்பெற இயலாமல் வாழ்பவர், வாழாதவரேயாவர் எனப் புகழின் பெருமையைப் பொதுமறை விளக்குகிறது.
3. நாச்செற்று விளக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் இக்குறட்பாவை அலகிட்ட வாய்ப்பாடு கூறுக
சீர் | அசை | வாய்ப்பாடு |
நாச் / செற் / று | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
விக் / குள் / மேல் | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
வ / ரா / முன் | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
நல் / வினை | நேர் நிரை | கூவிளம் |
மேற் / சென் / று | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
செய் / யப் | நேர் நேர் | தேமா |
படும் | நிரை | மலர் |
இக்குறட்பா “மலர்” என்னும் வாய்பாட்டால் முடிந்துள்ளது |
4. சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்காணும் குறளுக்கு இவ்வணியை பொருத்து எழுதுக?
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
அணி விளக்கம்
ஒரு செய்யுளில் வந்த சொல் மீண்டும், மீண்டும் வந்து ஒரே பொருளில் வருவது சொற்பொருள் பின்வரும் நிலையணி ஆகும்
பொருள் விளக்கம்
- இக்குறளில் “வலி” என்னும் சொல் “வலிமை” என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது
- எனவே இச்செய்யுள்ளில் “சொற்பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது
5. விரும்பியதை அடைவது எப்பபடி? குறள்வழி விளக்குக
- செய்ய முடிந்த தவத்தை முயன்ற பார்த்தால் விரும்பியதை விரும்பியபடி பெற முடியும். பொன்னை நெருப்பில் இட்டுச் சுடும்போது, அது மாசு நீங்கி ஒளிவிடுவதுவோலத் தவத்தை மேற்கொண்டு வருந்தினால், ஞானம் என்னும் அறிவுஒளி பெறலாம்.
- உரிய காலத்தில் பொருத்தமான இடத்தில் தக்க செயலை மேற்கொண்டால், உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்து விடும் எனக் குறள் வழிகாட்டுகிறது.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் __________ மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.
- தாழ்வு
- இரக்கம்
- மகிழ்ச்சி
- உயர்வு
விடை: உயர்வு
2. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் பாடலில் இடம் பெற்றுள்ள அணி
- உருவக அணி
- உவமை அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
விடை: உவமை அணி
3. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு பாடலில் இடம் பெற்றுள்ள அணி
- சொல் பின்வரும் நிலையணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
- உவமை அணி
- ஏகதேச உருவக அணி
விடை: சொல் பின்வரும் நிலையணி
4. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். பாடலில் இடம் பெற்றுள்ள அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
- சொல் பின்வரும் நிலையணி
- ஏகதேச உருவக அணி
- பிறிது மொழிதல் அணி
விடை: பிறிது மொழிதல் அணி
5. அறத்துப்பாலில் இடம் பெற்றுள்ள இயல்களில் பொருந்தாதது
- பாயிரவியல்
- துறவறவியல்
- இல்லறவியல்
- ஒழிபியல்
விடை: ஒழிபியல்
6. பொருட்பாலில் இடம் பெற்றுள்ள இயல்
- பாயிரவியல்
- துறவறவியல்
- இல்லறவியல்
- ஒழிபியல்
விடை: ஒழிபியல்
7. இன்பத்துப்பாலில் இடம் பெற்றுள்ள இயல்
- அமைச்சு இயல்
- களவியல்
- துறவறவியல்
- ஊழியல்
விடை: களவியல்
8. திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல்
- திருவெண்பா
- திருக்குறள் மாலை
- திருவள்ளுவ மாலை
- திருவெண்பா மாலை
விடை: திருவள்ளுவ மாலை
குறு வினா
1. மலையினும் மாணப்பெரியது எதுவாகும்?
ஓருவர் தனக்குரிய நேர்வழியில் மாறாது அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும்.
2. பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் எவற்றைப் போன்றது?
பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது.
3. நாவை எதற்காக காக்க வேண்டும்?
எதனை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கி காக்க வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுபவர்.
4. எவ்வாறு தோன்ற வேண்டுமென வள்ளுவர் கூறகிறார்?
தோன்றினால், புகழ்தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நன்று என வள்ளுவர் கூறுகிறார்.
5. மருத்துவத்தின் பிரிவுகளாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர்
6. அறத்துப்பாலில் இடம் பெற்றுள்ள இயல்களை எழுதுக
- பாயிரவியல் – 4
- இல்லறவியல் – 20
- துறவறவியல் – 13
- ஊழியல் – 1
7. பொருட்பாலில் இடம் பெற்றுள்ள இயல்களை எழுதுக
- அரசு இயல் – 25
- அமைச்சு இயல் – 32
- ஒழிபியல் – 13
8. பொருட்பாலில் இடம் பெற்றுள்ள இயல்களை எழுதுக
- களவியல் – 7
- கற்பியல் – 18