இயல் 2.1 – ஆசாரக்கோவை
Welcome, students! Here, you can discover the solutions to the song that starts with “நன்றியறிதல் பொறையுடமை” written by “Peruvaiin Mulliyar” in the book Asarakovai. This lesson on ஆசாரக்கோவை is part of the second term of the sixth standard and is both user-friendly and entertaining to learn.
ஆசாரக்கோவை வினா விடை 2024
In this section, you can access answers to all the questions in the 6th Standard Tamil Book Term 2 Lesson 2.1 titled “ஆசாரக்கோவை”. Our solutions cover both one-mark and big-mark questions, and we have also included extra questions for competitive exam readiness.
Previous Lesson: இன எழுத்துக்கள்
ஆசாரக்கோவை பாடல்
நன்றியறிதல் பொறையுடமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிரக்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து – பெருவாயின் முள்ளியார் |
பாடலின் பொருள்
- பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
- பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
- இனிய சொற்களைப் பேசுதல்;
- எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
- கல்வி அறிவு பெறுதல்;
- எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
- அறிவுடையவராய் இருத்தல்;
- நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.
நூல் வெளி
- ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
- ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
சொல்லும் பொருளும்
- நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
- நட்டல் – நட்பு கொள்ளுதல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறரிடம் நான் _______ பேசுவேன்.
- கடுஞ்சொல்
- இன்சொல்
- வன்சொல்
- கொடுஞ்சொல்
விடை : இன்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.
- வம்பு
- அமைதி
- அடக்கம்
- பொறை
விடை : பொறை
3. அறிவு + உடைமை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- அறிவுடைமை
- அறிவுஉடைமை
- அறியுடைமை
- அறிஉடைமை
விடை : அறிவுடைமை
4. இவை + எட்டும் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- இவைஎட்டும்
- இவையெட்டும்
- இவ்வெட்டும்
- இவ்எட்டும்
விடை : இவையெட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நன்றி + யறிதல்
- நன்றி + அறிதல்
- நன்று + அறிதல்
- நன்று + அறிதல்
விடை : நன்றி + அறிதல்
6. பொறையுடைமை பிரித்து எழுதுக _______
- பொறுமை + உடைமை
- பொறை + யுடைமை
- பொறு + யுடைமை
- பொறை + உடைமை
விடை : பொறை + உடைமை
குறுவினா
1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?
எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது துன்பம்.
2. நாம் யாருடன் நட்புக் காெள்ள வேண்டும்?
நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ள வேண்டும்.
சிறுவினா
1. ஆசாரக்காேவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
- பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
- பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
- இனிய சொற்களைப் பேசுதல்;
- எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
- கல்வி அறிவு பெறுதல்;
- எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
- அறிவுடையவராய் இருத்தல்;
- நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.
சிந்தனை வினா
1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.
பரிவு, இரக்கம், கருணை, நட்பு, ஒழுக்கும், தெய்வ பயம், மூத்தோர்களை மதித்தல், எளிமை, சிக்கனம், உதவி செய்தல், கீழ்ப்படிதல், அன்பு, அரவணைப்பு, இன்சொல், பேசுதல், அமைதி, அடக்கம், இன்னா, செய்யாமை, உண்மை, பேசுதல், விருந்தோம்பல், காலந்தவறாமை, நன்றியுணர்வு
2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.
விதையை மண்ணில் புதைத்தால் அது எப்பாடுபட்டாவது முளைத்து பலன் தரும் பெரிய மரமாகும். அதுபோல நல்ல ஒழுக்கங்களை மனதில் விதைத்தால், அவ்வொழுக்கங்கள் தலை சிறந்த சான்றோனாக மாற்றும். எனவே நல்லொழுக்கங்களின் வித்து எனக் கூறுவர்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “ஆசாரக்கோவை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.பெருவாயின் முள்ளியார் எழுதிய நூல் __________________
- மூதுரை
- பழமொழி நானூறு
- ஆசாரக்கோவை
- ஐந்திணை ஐம்பது
விடை : ஆசாரக்கோவை
2. பிறர் செய்த உதவியை ___________________ கூடாது
- நினைக்க
- ஏற்க
- கெடுக்க
- மறக்கக்
விடை : மறக்க
3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _______________
- 300
- 100
- 200
- 400
விடை : 100
4. பெருவாயின் முள்ளியார் _______________________ ஊரில் பிறந்தார்
- கயத்தாறு
- வயலூர்
- மானாமதுரை
- கயத்தூர்
விடை : கயத்தூர்
6. நட்டல் என்ற சொல்லின் பொருள் ______________
- காத்தல்
- நட்புக் கொள்ளுதல்
- கடைபிடித்தல்
- நன்மை செய்தல்
விடை : நட்புக் கொள்ளுதல்
5. ஆசாரக்கோவை குறிப்பிடும் நல்லொழுக்க வித்துக்கள்
- 7
- 9
- 6
- 8
விடை : 8
குறுவினா
1. ஆசாரக்கோவை எதனை மறக்க கூடாதென கூறுகிறது?
பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது என ஆசாரக்கோவை கூறுகிறது?
2. அனைவரும் இனிய சொற்களைப் பேச வேண்டும் எனக் கூறியவர்?
அனைவரும் இனிய சொற்களைப் பேச வேண்டும் எனக் கூறியவர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார்
3. ஆசாரக்கோவை என்பதன் பொருள் யாது?
ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
சிறுவினா
பெருவாயின் முள்ளியார் – குறிப்புவரைக
- ஆசாரக்கோவையில் ஆசிரியர் பெருவாளின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்
- ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
- பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நூறு வெண்பாக்களை கொண்டது