Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 Kaani Nilam Book Back Solution

இயல் 2.2 – காணி நிலம்

We’re providing you with the best and correct answers for 6th Standard Tamil Chapter 2.2, called “Kaani Nilam / காணி நிலம்,” from the Samacheer Kalvi syllabus. We’ve included solutions for all the questions in this chapter. It’s important to understand the textbook material well before using additional resources. These solutions can help students understand how to answer the questions accurately.

காணி நிலம் வினா விடைகள் 2024

On this page, you will find the question answers for the Lesson ‘ Kaani Nilam’ which is the chapter 2.2 of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the lesson “Kaani Nilam”.

காணி நிலம் பாடல்

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்லமுத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்குக்
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்.

– பாரதியார்

சொல்லும் பொருளும்

  • காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  • மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம் – உள்ளம்.

Previous Chapter: சிலப்பதிகாரம்

பாடலின் பொருள்

காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.

அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

நூல்வெளி

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் “பாரதி” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _______________

  1. ஏரி
  2. கேணி
  3. குளம்
  4. ஆறு

விடை: கேணி

2. சித்தம் என்பதன் பொருள் ______________

  1. உள்ளம்
  2. மணம்
  3. குணம்
  4. வனம்

விடை: உள்ளம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________________

  1. அடுக்குகள்
  2. கூரை
  3. சாளரம்
  4. வாயில்

விடை: அடுக்குகள்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________

  1. நன் + மாடங்கள்
  2. நற் + மாடங்கள்
  3. நன்மை + மாடங்கள்
  4. நல் + மாடங்கள்

விடை: நன்மை + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் __________________

  1. நிலம் + இடையே
  2. நிலத்தின் + இடையே
  3. நிலத்து + இடையே
  4. நிலத் + திடையே

விடை: நிலத்தின் + இடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. முத்துசுடர்
  2. முச்சுடர்
  3. முத்துடர்
  4. முத்துச்சுடர்

விடை: முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நிலாஒளி
  2. நிலஒளி
  3. நிலாவொளி
  4. நிலவுஒளி

விடை: நிலாவொளி

பொருத்துக

  1. முத்துச்சுடர்போல – தென்றல்
  2. தூய நிறத்தில் – நிலாஒளி
  3. சித்தம் மகிழ்ந்திட – மாடங்கள்

விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

நயம் அறிக

காணி நிலம் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • முத்து – முன்பு
  • த்து – க்கத்திலே
  • ங்கு – ந்த
  • நிறத்தினதாய் – நிலத்திடையே

காணி நிலம் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • காணி – கேணி
  • தென்றல் – நன்றாய்
  • ன்னிரண்டு – தென்னைமரம்
  • த்து – சித்தம்

குறுவினா

1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

  • காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
  • நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
  • இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
  • காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார்.

2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும்

“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

காக்கை குருவி எங்கள் கூட்டம்”…

என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது.

எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல்.

பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை.

இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.

அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.

இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.

காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது.

குறுவினா

1. பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக

அத்தி மரம், ஆல மரம், பலா மரம், மாமரம், கொய்யா மரம், வாழை மரம், பாக்கு மரம், முருங்கை மரம், தென்னை மரம், வேப்பமரம், அசோக மரம், புன்னை மரம், சப்போட்டா மரம் போன்றவற்றை வளர்ப்பேன்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காணி நிலம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சேர்த்து எழுதுதல்

  1. இளமை + தென்றல் – இளந்தென்றல்
  2. பத்து + இரண்டு – பன்னிரண்டு

கோடிட்ட இடங்களை நிரப்புதல்

1. பாரதியாரின் இயற்பெயர் ________________

விடை :  சுப்பிரமணியன்

2. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________________

விடை :  பாரதியார்.

3. பாரதியார் ________________, ________________, ________________ நூல்களை இயற்றி உள்ளார்.

விடை :  பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு

பொருத்துக

  1. தூண் – முத்துச்சுடர்
  2. மாடம் – அழகு
  3. நிலா ஒளி – தூயநிறம்

விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

வினாக்கள்

1. பாரதியார் – குறிப்பு வரைக

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • இயற்பெயர் – சுப்பிரமணியன்
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

6th Tamil Text Books Pdf

Leave a Comment