[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 Pasipini Pokkiya Paavai Book Back Solution

இயல் இரண்டு – பசிப்பிணி போக்கிய பாவை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.3 ‘Pasipini Pokkiya Paavai’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 2.3 பசிப்பிணி போக்கிய பாவை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 2.3 Pasipini Pokkiya Paavai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

பசிப்பிணி போக்கிய பாவை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Pasipini Pokkiya Paavai’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Pasipini Pokkiya Paavai subject.

Next Lesson: தமிழ்க்கும்மி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ________________

  1. இலங்கைத்தீவு
  2. இலட்சத்தீவு
  3. மணிபல்லவத்தீவு
  4. மாலத்தீவு

விடை : மணிபல்லவத்தீவு

2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ________________

  1. சித்திரை
  2. ஆதிரை
  3. காயசண்டிகை
  4. தீவதிலகை

விடை : ஆதிரை

சாெற்றொடரில் அமைத்து எழுதுக.

1. செடிகொடிகள்

விடை : எங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் வளர்ந்திருந்தன

2. முழுநிலவு நாள்

விடை : மும்பையில் முழுநிலவு நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

3. அமுதசுரபி 

விடை : மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் அமுதசுரபி

4. நல்லறம்

விடை : மணிமேகலை நல்லறம் போற்றியவள்

குறு வினா

1. அமுதசுரபியின் சிறப்பு யாது?

அமுத சுரபி பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?

வாழ்க்கைக்கு அறம் சாென்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவறை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேணடும்.

மேலும் அவர்களுக்குப பெற்றோரை மதித்தல், முதியோரை பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும் என்று மணிமேகலை மன்னரிடம் வேண்டினாள்.

சிறு வினா

1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?

எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். அடர்ந்த மரங்கள். இடையே பொய்கைகள். மனதை மயக்கும் காட்சிகள் என மணிபல்லவத்தீவு காட்சி அளித்தது

2. கோமுகி என்பதன் பொருள் யாது?

கோமுகி என்து ஒரு பொய்கையின் பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.

சிந்தனை வினா

அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?

பசித்தோர்க்கு உணவிடம், பிற உயிர்களை நேசித்தல், கொல்லாமை, உண்மையைப் பேசுதல், ஒழுக்கம் தவறாமை, பிறருக்கு பணம், உணவு, உடை போன்றவற்றை வழங்குதல், அன்பு செய்தல், துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறல், குடிக்காமல் இருத்தல், தீய சொற்களைப் பேசாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பசிப்பிணி போக்கிய பாவை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மணிமேகலை _________ நகரைச் சேர்ந்தவள்.

  1. உறையூர்
  2. முசிறி
  3. மதுரை
  4. பூம்புகார்

விடை : பூம்புகார்

2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்கு _______________ கொண்டு வந்து சேர்த்தது.

  1. குண்டகேசி
  2. கோப்பெருந்தேவி
  3. ஆதிரை
  4. மணிமேகலா தெய்வம்

விடை : மணிமேகலா தெய்வம்

3. பசிப்பிணி போக்கிய பாவை _______________

  1. குண்டகேசி
  2. கோப்பெருந்தேவி
  3. ஆதிரை
  4. மணிமேகலை

விடை : மணிமேகலை

4. அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நாள்

  1. சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்
  2. வைகாசித் திங்கள் முழு நிலவு நாள்
  3. ஆவணித் திங்கள் முழு நிலவு நாள்
  4. ஆடித் திங்கள் முழு நிலவு நாள்

விடை : வைகாசித் திங்கள் முழு நிலவு நாள்

5. உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்கள் பசியால் வருந்தாத வகையில் உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! இக்கூற்றினை கூறியவர்

  1. குண்டகேசி
  2. தீவதிலகை
  3. கோப்பெருந்தேவி
  4. ஆதிரை

விடை : தீவதிலகை

6. கோமுகி என்பதன் பொருள்

  1. ஆட்டின் முகம்
  2. கழுதையின் முகம்
  3. பசுவின் முகம்
  4. மனித முகம்

விடை : பசுவின் முகம்

7. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம்  என்று கூறிய கவிஞர் ________________

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. இராமலிங்கனார்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

8. ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன! இக்கூற்றினை கூறியவர்

  1. குண்டகேசி
  2. மணிமேகலை
  3. கோப்பெருந்தேவி
  4. ஆதிரை

விடை : மணிமேகலை

9. உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன். எனக்கு கூறியவர்

  1. மணிமேகலை
  2. குண்டகேசி
  3. ஆதிரை
  4. கோப்பெருந்தேவி

விடை : ஆதிரை

10. கையில் + இருந்த சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. கையிலிருந்த
  2. கையில்இருந்த
  3. கையிலிஇருந்த
  4. கையில்லிருந்த

விடை : கையிலிருந்த

11. வெண்மை + மணல் சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. வெண்மை ணல்
  2. வெண்ம்மணல்
  3. வெண்மைமணல்
  4. வெண்மணல்

விடை : வெண்மணல்

12. சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற்றுக இக்கூற்றினை கூறியவள்

  1. ஆதிரை
  2. குண்டகேசி
  3. மணிமேகலை
  4. கோப்பெருந்தேவி

விடை : மணிமேகலை

குறுவினா

1. இந்நாடு யார் வாழ்ந்த நாடென மணிமேகலை கூறினாள்?

வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது.

2. யார் அறம் போதித்த பூமியென மணிமேகலை கூறுகிறாள்?

புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது.

3. மணிமேகலை மன்னனிடம் செய்யவேண்டுவனவாக கூறியன யாவை?

  • எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
  • அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும்.

 

Leave a Comment