இயல் 1.2 – தமிழ்க்கும்மி
Greetings, students! Welcome to our comprehensive guide for the 6th Standard Tamil Chapter 1.1, titled Tamil Kummi in the Samacheer Kalvi curriculum. Here, you will discover solutions to all the questions from Lesson 1.2 of the 6th Standard Tamil Book Term 1, also known as ‘தமிழ்க்கும்மி வினா விடைகள்’
We have provided answers to questions ranging from one-mark to big-mark questions and have even included additional ones to aid you in your preparation for competitive exams. Furthermore, you have the option to download the 6th Tamil Chapter 1.2 தமிழ்க்கும்மி Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.
தமிழ்க்கும்மி பாடல் வினா விடைகள் 2024
This page contains the question and answers for the Lesson Tamil Kummi, which serves as the first subject for class 6 Tamil. Moreover, you can also access extra questions related to the Tamilkummi subject.
தமிழ்க்கும்மி பாடல்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !! |
சொல்லும் பொருளும்
- ஆழிப்பெருக்கு – கடல்கோள்
- மேதினி – உலகம்
- ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
- மெய் – உண்மை
- வழி – நெறி
- அகற்றும் – விலக்கும்
- மேன்மை – உயர்வு
- அறம் – நற்செயல்
நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
- இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
- கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
- தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
- இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
- இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
- இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்
- பன்மை
- மேன்மை
- பொறுமை
- சிறுமை
விடை : மேன்மை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____________ சுருங்கிவிட்டது
- மேதினி
- நிலா
- வானம்
- காற்று
விடை : மேதினி
3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- செந் + தமிழ்
- செம் + தமிழ்
- சென்மை + தமிழ்
- செம்மை + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- பொய் + அகற்றும்
- பொய் + கற்றும்
- பொய்ய + கற்றும்
- பொய் + யகற்றும்
விடை : பொய் + அகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- பாட்டிருக்கும்
- பாட்டுருக்கும்
- பாடிருக்கும்
- பாடியிருக்கும்
விடை : பாட்டிருக்கும்
6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- எட்டுத்திசை
- எட்டிதிசை
- எட்டுதிசை
- எட்டிஇசை
விடை : எட்டுத்திசை
பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சாெற்களை எடுத்து எழுதுக
1. காெட்டுங்கடி – கோதையரே
2. எட்டுத்திசை – எட்டிடவே
3. அறிவு – அழியாமலே
4. ஊழி – ஊற்று
5. மெய் – மேதினி
பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சாெற்களை எடுத்து எழுதுக
1. காெட்டுங்கடி – எட்டுத்திசை
2. ஊழி – ஆழி
3. கண்டதுவாம் – கொண்டதுவாம்
4. பொய் – மெய்
5. பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்
குறுவினா
1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன, பொய்மை அகற்றி; மனதின் அறியாமையை நீக்கி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்களைத் தந்து; உயிர் போனற் உண்மை தரும் பாடல்களை தந்து; உயிர் போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த அறத்தை தந்து; உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டுவது.
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்
சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
- ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இலக்கண இலக்கியங்களைப் பெற்ற முதுமொழி நம் தமிழ்மொழி.
- சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை பல இலக்கியங்களை கண்டுள்ளது.
- அவ்வாறு கண்டிருந்தும் தமிழ்மொழி சிதைந்து விடவில்லை. மாறாக பல மாற்றங்களைக் கண்டு வளர்ந்து உள்ளது.
- பல மொழிகள் அழிந்த நிலையிலும் தமிழ்மொழி இன்று செம்மொழியாக உலகில் தலைநிமிரந்து நிற்பதனாலேயே கவிஞர் அவ்வாறு கூறிகிறார்.
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
- பல நூறு ஆண்டுகளை கடந்து பல அரிய நூல்களை தந்து அதன்வழி பல அறிவியல் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கி நிற்கின்றது.
- இயற்கைச் சீற்றத்தையும் பல் இனங்களின் எதிர்ப்பையும் மீறி அழியாமல் நிலைத்திருக்கின்றன.
- வாய்மையை அகற்றி மனதின் அறியாமையை நீக்கி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்களைத் தந்து; உயிர்போன்ற உண்மையை ஊட்டி; உயர்ந்த அறத்தைத் தந்து உலகம் சிறந்த வாழ்வதற்கான வழிகளைக் காட்டி நிற்பது நம் தமிழே என்பத அறிந்து கொண்டோம்
சிந்தனை வினா
தமிழ் மொழி எவ்வாறு அறியாமையை அகற்றும்?
ஈராயிரம் ஆண்டுகளாக பல இலக்கியங்களை கண்டுள்ள நம் தமிழ்மொழி அதில் சங்க இலக்கியத்தில், அக் வாழ்வு, புற வாழ்வு கருத்துகளை தெள்ளத் தெளிவாகப் புலவர்கள் எடுத்தியம்பியள்ளனர். சங்கம் மருவிய இலக்கியத்தில். அறநெறிக் கருத்துக்களைப் பல் புலவர்கள் எடுத்தியம்பியுள்ளனர். காப்பியங்களில். கதை மாந்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது? என்று வாழ்வியல் நெறிகளை கற்பிக்கின்றனர்.
இவைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்வைத்து பாரக்கும்போது தமிழ்மொழி அறியாமையை அகற்று என்பது உறுதியே.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “தமிழ்க்கும்மி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ______________
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
2. பாவலரேறு என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர் ______________
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
3. தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர் ______________
- பாரதியார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- கவிமணி
விடை : பெருஞ்சித்திரனார்
4. தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் ______________
- கல்யாண சுந்தரனார்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
- சுரதா
விடை : பெருஞ்சித்திரனார்
5. திசைகள் ____________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
- இரண்டிலும்
- எட்டிலும்
- நான்கிலும்
- பத்த்திலும்
விடை : நான்கிலும்
6. ______________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.
- உலகம்
- ஊர்
- தெரு
- நாடு
விடை : உலகம்
7. இளங்காேதையர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- இளமை + காேதையர்
- இளங் + காேதையர்
- இளங் + ஓதையர்
- இளமை + யார்
விடை : இளமை + காேதையர்
8. ஊற்றெனும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- ஊற்ற் + எனும்
- ஊற்று + ஏனும்
- ஊற்று + எனும்
- ஊற்ற + எனும்
விடை : ஊற்று + எனும்
9. காெட்டுங்கள் + அடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- காெட்டுங்கடி
- காெட்டுங்களடி
- காெட்டுங்ங்கடி
- காெட்டுங்கள்அடி
விடை : காெட்டுங்கடி
10. அறம் + மேன்மை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- அறம்மேன்மை
- அறம்ஏன்மை
- அறன்மேன்மை
- அறமேன்மை
விடை : அறமேன்மை
குறுவினா
1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய வேறு சில நூல்களை கூறுக
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் இதழ்களின் பெயர்களை எழுதுக
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தமிழ்நிலம்
குறுவினா
பாவலரேறு பெருஞ்சித்திரனார் – சிறு குறிப்பு வரைக
- இயற்பெயர் – மாணிக்கம்.
- சிறப்புப் பெயர் – பாவலரேறு
- இயற்றிய நூல்கள் – கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்
- நடத்திய இதழ்கள் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
- சிறப்பு – தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பியவர்