இயல் 1.2 – துன்பம் வெல்லும் கல்வி
Welcome, students! We are pleased to present our detailed guide on Samacheer Kalvi 6th Tamil Chapter 1.2, called ‘Thunbam Vellum Kalvi.’ Our guide provides answers to all the questions found in the 6th Standard Tamil Book Term 2 Lesson 1.2, துன்பம் வெல்லும் கல்வி. We hope you find it useful.
துன்பம் வெல்லும் கல்வி வினா விடை
On this page, you will find the question answers for the Lesson ‘Thunbam Vellum Kalvi’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Thunbam Vellum Kalvi subject.
துன்பம் வெல்லும் கல்வி பாடல்
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதேமூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
பாடலின் பொருள்
- நாம் நூல்களை கற்றதோடு இருந்துவிடக் கூடாது. கற்றதன் பயனை மறக்க கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது . நல்லவர்கள் குறைச் சொல்லும்படி வளரக் கூடாது.
- பெரியோர் கூறும் அறிவுகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
- தன்மானம் இல்லாத காேழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேணடும். சோம்லைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும் வானைத் தாெடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் காெள்ள வேண்டும்.
- மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேணடும். அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும். பெற்ற தாயின் புகழும் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.
நூல் வெளி
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
- மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
சொல்லும் பொருளும்
- தூற்றும் படி – இகழும் படி
- மூத்தோர் – பெரியோர்
- மேதைகள் – அறிஞர்கள்
- மாற்றார் – மற்றவர்
- நெறி – வழி
- வற்றாமல் – அழியாமல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும்படி
- பார்க்கும்படி
- வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.
- இளையோர்
- ஊரார்
- மூத்தோர்
- வழிப்போக்கர்
விடை : மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கையில் + பொருள்
- கைப் + பொருள்
- கை + பொருள்
- கைப்பு + பொருள்
விடை : கை+பொருள்
4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- மானம்இல்லா
- மானமில்லா
- மானமல்லா
- மானம்மில்லா
விடை : மானமில்லா
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
விடை: மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம் அடைய வேண்டும்.
2. ஏட்டுக்கல்வி
விடை: மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
3. நல்லவர்கள்
விடை: இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது
4. சோம்பல்
விடை: சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி
குறுவினா
1. நாம் யாருடன் சேரக்கூடாது?
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது
2. எதை நம்பி வாழக்கூடாது?
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது
3. நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
- நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
- பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.
- தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.
- பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.
- பெற்ற தாயின் புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்.
4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்.
சிந்தனை வினா
நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
நான் படித்துச் சிறந்த பேச்சாளராக விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா போல சுவையாக நயம்பட பேச பயிற்சி எடுப்பேன். சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. சத்தியமூர்த்தி போன்றோர் தன் சொல்வன்மையால் தடம் பதித்தவர்கள். இவர்களையெல்லாம் என் வழிகாட்டிகளாய்க் கொண்டு சிறந்த பேச்சாளராய் மாற ஆசைப்படுகிறேன். நாட்டையும் நாட்டு மக்களையும் நன்னெறிப்படுத்தவும், விபிப்படையவும் என் பேச்சை பயன்படுத்துவேன்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “துன்பம் வெல்லும் கல்வி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்
- பணம்
- வாழ்க்கை
- கல்வி
- மகிழ்ச்சி
விடை : கல்வி
2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________
- புகழ்
- வழி
- நேரம்
- வலி
விடை : வழி
3. மக்கள் கவிஞர் – சிறப்பு பெயருக்குரியவர்
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- அழ வள்ளியப்பா
- பிச்சமூர்த்தி
- மீரா
விடை : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
4. திரையிசைப் பாடல்களில் உழைப்பவர்களின் உயர்வைப் போற்றியவர்
- அழ வள்ளியப்பா
- பட்டுக்கோட்டையார்
- பிச்சமூர்த்தி
- ஒளவையார்
விடை : பட்டுக்கோட்டையார்
5. குணமிருந்தால் என்பதனை பிரிதெழுதக் கிடைப்பது
- குணம் + இருந்தால்
- குணம் + மிருந்தால்
- குணமி + ருந்தால்
- குணமி + இருந்தால்
விடை : குணம் + இருந்தால்
6. கைப்பொருள் என்பதனை பிரிதெழுதக் கிடைப்பது
- கை + பொருள்
- கைப் + பொருள்
- கையில் + பொருள்
- கைய் + பொருள்
விடை : கை + பொருள்
குறு வினாக்கள்
1. எதனை விட்டு விட வேண்டும்?
பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்
2. எதை மீறக் கூடாது?
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது..
3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி குறிப்பு வரைக
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
- மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.