இயல் இரண்டு – அழியாச்செல்வம்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.2 ‘Aliya Selvam’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 2.2 அழியாச்செல்வம்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.2 Aliya Selvam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
அழியாச்செல்வம் பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Aliya Selvam’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Aliya Selvam subject.
Next Lesson: இலக்கியவகைச் சொற்கள்
அழியாச்செல்வம் பாடல்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற. – சமண முனிவர் |
பாடலின் பொருள்
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
நூல் வெளி
- நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
- நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
- திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
- இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
சொல்லும் பொருளும்
- வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
- கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
- வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
- விச்சை – கல்வி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.
- வீடு
- கல்வி
- பொருள்
- அணிகலன்
விடை : கல்வி
2. கல்வியைப் போல் __________ செல்வம் வேறில்லை.
- விலையில்லாத
- கேடில்லாத
- உயர்வில்லாத
- தவறில்லாத
விடை : விலையில்லாத
3. வாய்த்தீயின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- வாய்த்து + ஈயீன்
- வாய் + தீயின்
- வாய்த்து +தீயின்
- வாய் + ஈயீன்
விடை : வாய்த்து + ஈயீன்
4. கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- கேடி + இல்லை
- கே +இல்லை
- கேள்வி + இல்லை
- கேடு + இல்லை
விடை : கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- எவன்ஒருவன்
- எவன்னொருவன்
- எவனொருவன்
- ஏன்னொருவன்
விடை : எவனொருவன்
குறு வினா
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
கல்வியைப் பொருள் போல வைத்திருபபினும் அது பிறரால் கொள்ளபடாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
சிறு வினா
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
- கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளபடாது.
- ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
- மிக்க சிறப்பினை உடைய அரசாலும் கவர முடியாது.
- ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
- மற்றவை செல்வம் ஆகாது.
சிந்தனை வினா
கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.
- நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
- திருடர்களால் கல்வியைத் திருட முடியாது.
- கல்வியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
– எனவே பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.
கற்பவை கற்றபின்
பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்
உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே
– தனிப்பாடல் திரட்டு.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “அழியாச்செல்வம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நாலடியாரை ______________ எழுதினர்
- சமண முனிவர்கள்
- சித்தர்கள்
- ஞானிகள்
- துறவிகள்
விடை : சமண முனிவர்கள்
3. நாலடியாருக்கு வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாது
- வேளாண்வேதம்
- நாலடி நானூறு
- நாலடி
- துண்டு
விடை : துண்டு
4. பொருள் சேமித்து வைக்கும் இடம் _______________
- வைப்புழி
- ஞாலம்
- மதி
- நிலவு
விடை : வைப்புழி
5. நாலடியார் _______________ இணையாக வைத்து போற்றப்படுகிறது
- திரிகடுகம்
- நற்றிணை
- குறுந்தொகை
- திருக்குறள்
விடை : திருக்குறள்
6. நிறைவன்றி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- நிறை + வன்றி
- நிறை + அன்றி
- நிறைவு + அன்றி
- நிறைவு + வன்றி
விடை : நிறைவு + அன்றி
7. குறைவுறாது என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- குறை + உறாது
- குறை + வுன்றி
- குறைவு + உறாது
- குறைவு + வுன்றி
விடை : குறைவு + உறாது
8. பயமில்லை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- பயம் + மில்லை
- பய + மில்லை
- பயம் + இல்லை
- பய + இல்லை
விடை : பயம் + இல்லை
9. கல்வியென்னும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- கல்வி + எனும்
- கல்வி + எண்ணும்
- கல்வி + யென்னும்
- கல்வி + என்னும்
விடை : கல்வி + என்னும்
குறு வினா
2. நாலடியார் நூலின் வேறு பெயர்கள் யாவை?
நாலடி நானூறு, வேளாண்வேதம்
3. நாலடியாரின் முப்பால்கள் யாவை?
அறம், பொருள், இன்பம்
3. திருக்குறளுக்கு இணையாக நாலடியார் போற்றப்படுவதை கூறும் செய்தி யாது?
நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி
சிறு வினா
நாலடியார் குறிப்பு வரைக?
- ஆசிரியர் – சமண முனிவர்கள்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- பாக்கள் எண்ணிக்கை – 400
- வேறுபெயர்கள் – நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம்
- உட்பிரிவுகள் – அறம், பொருள், இன்பம்
- இணையான நூல் – திருக்குறள் (நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் திருக்குறளுக்கு இணையா வைத்து போற்றப்படுவதை உணர்த்துகிறது)