இயல் இரண்டு – அறம் என்னும் கதிர்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.2 ‘Aram Ennnum Kathir’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 2.2 அறம் என்னும் கதிர்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.2 Pudhumai Vilakku Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
அறம் என்னும் கதிர் பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Aram Ennnum Kathir’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Aram Ennnum Kathir subject.
அறம் என்னும் கதிர் பாடல்
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய் – முனைப்பாடியார் |
பாடலின் பொருள்
இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
நூல் வெளி
- முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
- இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
- இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
- அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர் பெற்றது.
- இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
சொல்லும் பொருளும்
- வித்து – விதை
- களை – வேண்டாத செடி
- ஈன – பெற
- பைங்கூழ் – பசுமையான பயிர்
- நிலன் – நிலம்
- வன்சொல் – கடுஞ்சொல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் எப்போதும் ____________ ப் பேசினார்
- வன்சொற்களை
- அரசியலை
- கதைகளை
- வாய்மையை
விடை : வாய்மையை
2. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- இனிய + சொல்
- இன்மை + சொல்
- இனிமை + சொல்
- இன் + சொல்
விடை : இனிமை + சொல்
3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________
- அற கதிர்
- அறுகதிர்
- அறக்கதிர்
- அறம்கதிர்
விடை : அறக்கதிர்
4. இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ____________
- முதுமை
- புதுமை
- தனிமை
- இனிமை
விடை : முதுமை
பொருத்துக
- விளைநிலம் – உண்மை
- விதை – இன்சொல்
- களை – ஈகை
- உரம் – வன்சொல்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ
குறு வினா
1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்
2. நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
வன்சொல்லை நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது
சிறு வினா
இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
- இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.
- அதில் ஈகை என்னும் பண்பை விதையாக கொண்டு விதைக்க வேண்டும்.
- வன்சொல் என்னும் களை நீக்க வேணடும்.
- உண்மை பேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
- அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
- அப்போது தான் அறமாகிய கதிரைப் பெற முடியும்.
- இளம் வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறிகின்றார்.
சிந்தனை வினா
இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியவை இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எனக் கருதுகிறேன்.
பின்வரும் பகுதியில் “அறம் என்னும் கதிர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இனிய சொல்லையே _____________ கொள்ளவேண்டும்.
- விளைநிலமாகக்
- விதைகளாக
- விதைப்பவர்
- வித்தாக
விடை : விளைநிலமாகக்
2. வன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- வனிய + சொல்
- வன்மை + சொல்
- வனிமை + சொல்
- வன் + சொல்
விடை : வன்மை + சொல்
3. அறக்கதிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- அற + கதிர்
- அறு + கதிர்
- அறம் + கதிர்
- அறுவை + கதிர்
விடை : அறம் + கதிர்
4. முனைப்பாடியார் வாழ்ந்த காலம்
- கி.பி. 5
- கி.பி. 13
- கி.பி. 10
- கி.பி. 12
விடை : கி.பி. 13
5. அறநெறிச்சாரத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 225
- 223
- 252
- 525
விடை : 225
6. முனைப்பாடியார் ____________ ஊரைச் சேர்ந்தவர்
- தேரெழுந்தூர்
- திருமுனைப்பாடி
- திருமறைக்காடு
- திருவேற்காடு
விடை : திருமுனைப்பாடி
7. முனைப்பாடியார் ____________ சமயத்தைச் சார்ந்தவர்
- வைணவ
- பெளத்த
- சமண
- கிறித்தவ
விடை : சமண
குறு வினா
1. முனைப்பாடியார் பற்றி சிறுகுறிப்பு வரைக
- ஊர் – திருமுனைப்பாடி
- சமயம் – சமணப்புலவர்
- காலம் – 13 நூற்றாண்டு
- நூல் – அறநெறிச்சாரம்
2. அறநெறிச்சாரம் குறிப்பு வரைக
- ஆசிரியர் – முனைப்பாடியார்
- பாடல் எண்ணிக்கை – 225
- சிறப்பு – அறநெறிகளைத் தாெகுத்துக் கூறும் நூல்