இயல் மூன்று – தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.3 ‘Desiyam Katha semmal (Pasumpon Muthuramalinga Thevar)’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 3.3 தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.3 Desiyam Katha semmal (Pasumpon Muthuramalinga Thevar) Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்) வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Desiyam Katha semmal (Pasumpon Muthuramalinga Thevar)’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Desiyam Katha semmal (Pasumpon Muthuramalinga Thevar) subject.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் __________________
- தூத்துக்குடி
- காரைக்குடி
- சாயல்குடி
- மன்னார்குடி
விடை : சாயல்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் __________________
- இராஜாஜி
- நேதாஜி
- காந்திஜி
- நேருஜி
விடை : நேதாஜி
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் __________________
- இராஜாஜி
- பெரியார்
- திரு.வி.க
- நேதாஜி
விடை : திரு.வி.க
குறு வினா
1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.
உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.
2. முத்துராமலிங்கத் தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?
- முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
- அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர்
- இதனால் அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்துள்ளது
- மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.
3. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
முத்துராமலிங்கத் தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கினார்
சிறு வினா
1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
- அவரைத் தமது அரசியல் குருவாக ஏறறுக்கொண்டார்.
- முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்றுக் 06.09. 1939 ஆம் ஆண்டு
நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
- நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முயற்சி ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
- விடுதலைக்கு பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்.
2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத் தேவர் செய்த தொண்டுகள் யாவை?
1938 கால கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தார்.
மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவனாந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.
சிந்தனை வினா
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
- உரிமைக்காகப் போராடுதல்
- மக்கள் நலம் காத்தல்
- பொதுநல வாழ்வு
- பேச்சாற்றல்
- சாதி, மதம், இனம், மொழி ஆகியவை பாராமை
- ஒழுக்கம் காத்தல்
- பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்
- மனிதநேயம்
- நாட்டுப்பற்று
- தியாக உணர்வு
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்)” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சுத்தத் தியாகி என முத்துராமலிங்கத்தேவரை பாராட்டியவர் ____________
- தந்தைப் பெரியார்
- நேதாஜி
- திரு.வி.க
- காந்தி ஜி
விடை : தந்தைப் பெரியார்
2. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊர் _____________
- மதுரை
- கோவை
- சென்னை
- பசும்பொன்
விடை : பசும்பொன்
5. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி தடை விதிக்கப்பட்ட தலைவர் _____________
- பாலகங்காதர திலகர்
- நேதாஜி
- திரு.வி.க
- காந்தி ஜி
விடை : பாலகங்காதர திலகர்
6. நேதாஜியை ___________ என பாராட்டுவர்
- வங்கத்தமிழன்
- வங்கச்சிங்கம்
- வங்கப்புலி
- தன்மானச் சிங்கம்
விடை : வங்கச்சிங்கம்
7. முத்துராமலிங்கத் தேவர் ___________ அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோசினை
- திலகரை
- திரு.வி.கவை
- காந்தி ஜீயை
விடை : நேதாஜி சுபாஷ் சந்திரபோசினை
8. முத்துராமலிங்கத் தேவர் தொடங்கிய வார இதழ்
- நேதாஜி
- சுயசரிதை
- அக்னி
- சிறகுகள்
விடை : நேதாஜி
9. சாயல்குடியில் முத்துராமலிங்கத் தேவர் உரையாற்றிய தலைப்பு
- ராஜாஜியின் பெருமை
- காமராசரின் பெருமை
- விவேகானந்தரின் பெருமை
- நேதாஜியின் பெருமை
விடை : விவேகானந்தரின் பெருமை
10. முத்துராமலிங்கத் தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று மகிழ்ந்தவர்.
- ராஜாஜி
- திரு.வி.க
- காமராசர்
- நேதாஜி
விடை : காமராசர்
11. முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு
- 2006
- 1978
- 1995
- 2010
விடை : 1995
12. உள்ளத்ததால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்ககாமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்’ என்று முத்துராமலிங்கத்தேவரை பாராட்டியவர்
- திரு.வி.க
- இராஜாஜி
- அம்பேத்கர்
- காமராசர்
விடை : இராஜாஜி
13. முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகளில் பொருந்தாதது
- 1952
- 1957
- 1955
- 1962
விடை : 1962
14. குற்றப்பரம்பரை மாநாடு நடைபெற்ற இடம்
- கமுதி
- சாயல்குடி
- உடன்குடி
- வல்லநாடு
விடை : கழுதி
15. முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது
- தேசியம் காத்த செம்மல்
- சத்ய பாஸ்கர்
- பிரவசன கேசரி
- இந்து புத்தசமய மேதை
விடை : கழுதி
16. முத்துராமலிங்கத் தேவர் சிறை வைக்கபட்ட சிறைகளில் பொருந்தாதது
- அலிப்பூர்
- கல்கத்தா
- பாளையங்கோட்டை
- வேலூர்
விடை : பாளையங்கோட்டை
17. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு
- 06.09.1936
- 09.09.1939
- 06.09.1939
- 09.06.1936
விடை : 06.09.1939