இயல் ஒன்று – இலக்கியவகைச் சொற்கள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.5 ‘Ilakkiyavagai Sorkal ‘ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 1.5 தமிழரின் கப்பற்கலை
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.5 Ilakkiyavagai Sorkal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
இலக்கியவகைச் சொற்கள் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Ilakkiyavagai Sorkal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Ilakkiyavagai Sorkal subject.
Next Lesson: ஆழ்கடலின் அடியில்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எல்லாேர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.
- -இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
விடை : இயற்சொல்
2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
விடை : திரிசொல்
3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________.
- மலையாளம்
- கன்னடம்
- சமஸ்கிருதம்
- தெலுங்கு
விடை : சமஸ்கிருதம்
பொருத்துக
- இயற்சொல் – பெற்றம்
- திரிசொல் – இரத்தம்
- திசைச்சொல் – அழுவம்
- வடசொல் – சோறு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
குறு வினா
1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
மண், பொன் என்பன பெயர் இயற்சொல்வகை சொற்கள் ஆகும்
2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
பெயர் இயற்சொல், வினை இயற்சொல், இடை இயற்சொல், உரி இயற்சொல்
3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்
சிறு வினா
1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.
3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்கள் ஆகும்
விளக்கம் :
பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்
மொழியை ஆள்வோம்
அறிந்து பயன்படுத்துவோம்.
காலம் மூன்று வகைப்படும். அவை
- இறந்த காலம்
- நிகழ்காலம்
- எதிர்காலம்.
இறந்தகாலம்
நடந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம்.
(எ.கா.) பார்த்தான், ஆடினாள், பறந்தது.
நிகழ்காலம்
நடக்கின்ற செயலைக் குறிப்பது நிகழ்காலம்.
(எ.கா.) பார்க்கிறான், ஆடுகின்றாள், பறக்கின்றது.
எதிர்காலம்
நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
(எ.கா.) காண்பான், ஆடுவாள், பறக்கும்.
கட்டங்களை நிரப்புக.
வேர்ச்சொல் | இறந்தகாலம் |
நட | நடந்தாள் |
எழுது | எழுதினாள் |
ஓடு | ஓடினாள் |
சிரி | சிரித்தாள் |
பிடி | பிடித்தாள் |
இறங்கு | இறங்கினாள் |
நிகழ்காலம் | எதிர்காலம் |
நடக்கிறாள் | நடப்பாள் |
எழுதுகிறாள் | எழுதுவாள் |
ஓடுகிறாள் | ஓடுவாள் |
சிரிக்கிறாள் | சிரிப்பாள் |
பிடிக்கிறாள் | பிடிப்பாள் |
இறங்குகிறாள் | இறங்குவாள் |
பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை: அமுதன் நேற்று விடுக்கு வந்தான்
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
விடை: கண்மணி நாளை பாடம் படிப்பாள்
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
விடை: மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
விடை: ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
விடை: நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.
இடமிருந்து வலம்:-
1. அச்சன்
விடை ; தந்தை
2. விஞ்ஞானம்
விடை ; அறிவியல்
4. பரீட்சை
விடை ; தேர்வு
10. லட்சியம்
விடை ; இலக்கு
மேலிருந்து கீழ் :-
1. அதிபர்
விடை ; தலைவர்
3. ஆச்சரியம்
விடை ; வியப்பு
7. ஆரம்பம்
விடை ; தொடக்கம்
12. சதம்
விடை ; நூறு
வலமிருந்து இடம் :-
6. அபாயம்
விடை ; இடர்
8. தேகம்
விடை ; உடல்
13. சரித்திரம்
விடை ; வரலாறு
14. சத்தம்
விடை ; ஒலி
கீழிருந்து மேல் :-
5. ஆதி
விடை ; முதல்
9. உத்தரவு
விடை ; கட்டளை
11. தினம்
விடை ; நாள்
15. சந்தோசம்
விடை ; மகிழ்ச்சி
குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.
1. முக்கனிகளுள் ஒன்று.
விடை : மா
2. கதிரவன் மறையும் நேரம்.
விடை : மாலை
3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு.
விடை : மாநாடு
4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் காலஅளவு.
விடை : மாத்திரை
5. அளவில் பெரிய நகரம்.
விடை : மாநகரம்
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
- கலங்கரை விளக்கம் – Light house
- துறைமுகம் – Harbour
- பெருங்கடல் – Ocean
- புயல் – Storm
- கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
- மாலுமி – Sailor
- கடல்வாழ் உயிரினம் – Marine creature
- நங்கூரம் – Anchor
- நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
- கப்பல்தளம் – Shipyard
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “இலக்கியவகைச் சொற்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் ____________
- திரிசொற்கள்
- வடசொற்கள்
- இயற்சொற்கள்
- திசைச்சொற்கள்
விடை: இயற்சொல்
2. இயற்சொல் ____________ வகைப்படும்
- 3
- 2
- 4
- 5
விடை: 2
3. கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட் டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ____________
- திரிசொற்கள்
- வடசொற்கள்
- இயற்சொற்கள்
- திசைச்சொற்கள்
விடை: திரிசொற்கள்
4. வடமொழி தவிர, பிற மொ ழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள ____________
- திரிசொற்கள்
- வடசொற்கள்
- இயற்சொற்கள்
- திசைச்சொற்கள்
விடை: திசைச்சொற்கள்
வினாக்கள்
1. மொழி என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
2. சொல் – வேறுசொற்கள்
மொழி, பதம், கிளவி
3. திரிசொற்கள் என்றால் என்ன
கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.